1. போகமாமகரிஷி
உருவாக்கிய முருகன் சிலை
இந்த கலியின் ஆரம்ப நிலைகளில்தான், அவர் கண்டுணர்ந்த உண்மையின் தன்மையை, வான
இயல், புவி இயல், உயிர் இயல் என்ற நிலைகளையும், மனிதனானபின், மனிதனுக்குள் ஏற்படுத்தப்பட்ட
உணர்வின் தன்மையை, முழுமையாக்கிக் காட்டினார்.
அதைத்தான், நவபாஷாணத்தில் முருகன் சிலையை செய்து வைத்தது. நவபாஷாணம் என்பது, எட்டு கோள்களின் விஷத்தன்மையும்,
சூரியனும் சேர்ந்துத்தான் இந்தப் பிரபஞ்சமே இயங்குகின்றது, என்ற நிலையை அறிந்து, ஒவ்வோரு
கோளின் ஆற்றல் எவ்வாறு இருக்கின்றது? என்ற உண்மையை அறிந்தார்.
அந்தக் கோள்களில் இருந்து எடுத்த விஷம்தான், பாஷாணம் என்பது. அதைச் சமப்படுத்தினார்.
சூரியனில் இருந்த வரக்கூடியது பாதரசம். இன்று வெயிலாகப் பார்க்கின்றோமே, இதெல்லாம்
பாதரசம்தான். சூரியன் சுழலும் பொழுது, வெளியாகும் பாதரசம், சுக்கு நூறாகத் தெறித்து
வருகின்றது.
அந்தத் துகள்கள் ஒவ்வொன்றுக்குள்ளும், காந்தங்கள் உண்டு. எந்தந்தப் பொருளின்
தன்மை அதற்குள் இணைந்து விடுகின்றதோ,
அவற்றுள், ஊடுருவிச் செல்லும் நிலைகள்
கொண்டது.
ஆனால், ஒரு பொருளுக்குள் எதிர் நிலையானால்
ஒன்றுக்குள் ஒன்று மாய்த்து,
இது இணைந்து ஆவியாக மாறி
ஊடுருவிச் செல்லக் கூடிய நிலைகள், பாதரசத்திற்கு உண்டு.
போகர், அந்தப் பாதரசத்தையும், நவபாஷாணத்தையும் வைத்து, முருகனுடைய சிலையை உருவாக்கினார்.
ஒவ்வொரு தாவர இனத்தின் விஷத்தின் தன்மை, தனக்குள் பாதுகாப்பாக ஏற்றுக்கொண்டார்.
அந்த விஷத்திற்குள், நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் மாற்றி, அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.
அவ்வாறு வளர்த்துக் கொண்ட, பேருண்மையின் நிலைகளில்தான், நட்சத்திரங்களிலிருந்து
வரக்கூடிய கதிரியக்கத்தையும், சூரியனிலிருந்து வரக்கூடிய பாதரசத்தையும், தனித்து எடுத்து,
நவகோள்களில் இருந்து வரக்கூடிய பாஷாணத்தையும் இணைத்து, மனித ரூபமாக உருவாக்கினார்.
பிரபஞ்சத்திற்குள், கோளின் ஆற்றல் உள்ள நிலைகள், கடைசி நிலைகள் எவ்வாறு பெற்றது?
என்ற நிலைகளும், இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய மனிதன், எப்படி விஷத்தை மாற்றித் தனக்குள்
ஒளியாக மாற்றி,
எதையுமே சிருஷ்டிக்கும்
தன்மை பெற்றானோ, அதைத்தான், அன்று போகர் முருகனுடைய சிலையை, வடித்து வைத்தார்.
அந்தச் சிலையின் மேல் நீரை ஊற்றி, அதிலிருந்து வரக்கூடிய ஆவியை, மூச்சை நாம்
சுவாசித்தால், நமக்குள் அறியாது விளையும் நோய்கள்
நீங்கி, இன்புற்று இருக்க அதைச் செய்தார்.
ஒவ்வொரு மக்களுடைய உயிரையும் கடவுளாக
மதித்து,
உடலை, அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று
எண்ணி,
பிரபஞ்சத்திற்குள் உள்ள, ஆற்றல்
மிக்க சக்திகள்,
மனித உடலுக்குள்ளும்
உண்டு என்று உணர்ந்தார்.
உணர்ந்து, ஒவ்வொரு மக்களுடைய நிலைகளையும், தெளிவுபடுத்த வேண்டுமென்று எண்ணினார்.
தான் எடுத்துக்கொண்ட நிலைகளில், யார் துன்புற்று இருக்கின்றனரோ, அவர்கள் இன்பமுடன்
இருப்பதற்காக, அவர் எடுத்துக்கொண்ட ஆற்றல்தான், இந்த முருகன் சிலை.
2. ஆறாவது அறிவு முருகன்
ஆறாவது அறிவின் தன்மையாக, முருகனைக்
காட்டப்படும் பொழுது, கதையாக எழுதி, பிரம்மாவைச் சிறை பிடித்தான் ஆறாவது அறிவிற்குள் எண்ணங்கள்
எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையை முருகனைக் காட்டுகின்றனர்.
அவனுக்கு முன், வாகனமாக
வைத்திருப்பது மயில் (மகிழ்ச்சி) மகிழும் தன்மை (மயில்) என்று இருந்தாலும், விஷத்தை
அடக்கி,
தன் கூர்மையான ஆயுதம், சக்திவேல்.
முனை கூர்மையாக இருந்து
அடி பெருத்து, நுனி சிறுத்து,
தன்னுடைய கூர்மையான சக்தியால், எவ்வாறு விளைய வேண்டும்? என்ற நிலையை, துவைதம் -- உருவ
நிலைகளாக, அமைத்துக்
காட்டினார்கள், மெய்ஞானிகள்.
ஆறாவது அறிவின் தன்மையாக
முருகனை வைத்து, படைக்கத் தெரிந்தவன் என்ற நிலையில், மயிலும்
அதன் காலடியில் விஷமும் வைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது, கருணைக்
கிழங்கை வேக வைத்து, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு,
அதனுடன் பல பொருள்களை இட்டு, நஞ்சினை
அடக்கி, சுவைமிக்கதாகச்
செய்து, உணவாக
உட்கொள்கின்றோம். ஆக, கெட்டதை நீக்கி, நாம் மகிழ்ச்சியான நிலையில் உணவை உட்கொள்கின்றோம்.
ஆனால், அந்தக் கருணைக் கிழங்கில் இருக்கக்கூடிய நஞ்சு அது அடக்கப்படுகின்றது, என்ற நிலையை உணர்த்துவதற்காக, இந்த ஆறாவது அறிவை, முருகன் என்று அதை வைக்கின்றனர்.
ஆக, இந்த உடலின்
தன்மை வரப்படும்பொழுது,
இங்கே முருகனின் தன்மையை
வரிசைப்படுத்தி,
மற்றதைப் படைக்கத் தெரிந்தவன்,
பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்,
உருவாக்கத் தெரிந்தவன் என்று
ஞானிகள் தெளிவுற
உணர்த்தியுள்ளார்கள்.
இவ்வாறு, முருகன்
உருவாக்கத் தெரிந்தவன் என்ற நிலையைத்தான், ஆக, தெரிந்து கொள்ளும் நிலையை, நஞ்சினை அடக்கத் தெரிந்தவன் என்ற நிலையை, மயிலையும், பாம்பையும் வைத்து, அதன் அருகில் வைரக்கல்லை வைத்தார்கள், கடந்த காலங்களில்.
வைரம் எவ்வாறு நஞ்சினை அடக்கி, ஒளியின்
தன்மை வீசுகின்றதோ, இதைப் போலத்தான், அந்த மகரிஷிகள் தன் உணர்வின் தன்மையால், இந்த
வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கி, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, இன்றும்
"பெருவீடுபெருநிலை" என்ற நிலையில், அழியா ஒளிச் சரீரம் அடைந்து வாழ்கின்றனர். இதற்குப்
பெயர்தான் “சப்தரிஷி”.
3. பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்
மனித வாழ்க்கையில், தீமைகள் நமக்குள் சேராது, உயிரின் துணை கொண்டு, ஆறாவது அறிவின் துணை கொண்டு, அருள் ஞானிகளின் உணர்வை, நமக்குள் இணைத்தால்தான், பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன். (நம்முடைய சிருஷ்டிக்கும் தன்மைகள்)
இன்று மனிதனாக இருக்கும் நாம், மற்ற தாவர இனங்களை இணைத்து, புதுப் புதுச் செடிகளாக உருவாக்குகின்றோம். இது ஆறாவது அறிவுதான். ஆகவே, ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையும் சந்தர்ப்பம், பிரணவம், பிரம்மம், பிரம்மா என்பது பரப்பிரம்மம்.
ஆகவே, மனிதன் ஆறாவது அறிவு கொண்டு ஒரு உயர்ந்த எண்ணத்தைத் தனக்குள் சேர்த்து, தான் இணைக்கப்படும் போது, இது பிரம்மம். இது பிரம்மாவை சிறை பிடித்தான்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, நாம் உருப்பெறும் சக்தி திறன் பெற்றது. ஆகவே மனிதன் தீயதை நீக்கி, நல்லதை உருப்பெறச் செய்யும் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு, அருள்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது, அது மெய்ப்பொருளின் நிலையை நமக்குள் வளர்த்திடும்.
வெளிச்சம், தனக்குள் இருக்கக்கூடிய பொருளைக் காண்பிக்கின்றது. இதே போன்று, நமக்குள் தீது எது? தீதை அகற்றிடும் நிலை எது? என்ற நிலையைக் கண்டுணரும் செயல்தான், “மெய்ப்பொருள்” என்பது.