ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2013

சோப்பைப் போட்டு, நுரையை ஏற்றி, அழுக்கை நீக்குவது போன்று, தீமைகளை அகற்ற வேண்டும்

1. இராவணன் ஒரு தசைப்பிரியன்
வேதனை, வெறுப்பு, கோபம், குரோதம், சங்கடம், சலிப்பு இவை எல்லாம் வரும் பொழுது, அரக்க உணர்வுகள் நம் உடலுக்குள் தசைப்பிரியனாகின்றது.
இந்த உடலை வளர்க்கத்தான் விரும்புவோம்.
பிறர் கஷ்டத்தை எண்ண மாட்டோம்.
சீதா என்ற சந்தோஷத்தை நமக்குள் வரவழைக்க மாட்டோம்.
மற்றவர்களுக்கு சந்தோஷத்தை உருவாக்க மாட்டோம்.

இதைத்தான் சீதாவைச் சிறைப்பிடித்தான், இராவணன் என்று காட்டப்படது. நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள், அரக்க உணர்வுகள் வரும் பொழுது, சந்தோஷம் இழந்து, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று இராவணன் சொல்கின்றான்.

உங்கள் குடும்பத்தில், நீங்கள் எடுத்துக் கொண்ட ஆசை வரப்படும் பொழுது, அது நடைபெறவில்லை என்றால், எவ்வளவு கோபமும் குரோதமும் வருகின்றது?

அதிகக் கோபமானால், இதே தசைப்பிரியன், மற்ற நல்ல அணுக்களைக் கொன்று தின்றபின், வளமாக வாழும் இந்த உடலில் எவ்வளவு நரக வேதனைப்படுகின்றீர்கள்? என்பதை உணர்ந்து பார்த்தால் தெரியும். இதைத் தான் இராமாயணத்தில் கூறுகின்றார்கள்.

அதாவது, இந்திரலோகத்தைச் சிறைப்பிடித்தான் இராவணன் என்று சொல்வது. இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள், அசுர உணர்வால் அடக்கப்படும் பொழுது, அசுர உணர்வு கொண்டு, கொன்று சாப்பிடும் மிருக உணர்வே வருகின்றது.

ஆனாலும், இராவணனும் விஷ்ணுவை நோக்கித் தவமிருக்கின்றான். அவனுடைய கடுமையான யாகததில் சிக்கிக் கொண்டால், இந்திரலோகமும் பாழாகிவிடுமே என்று இதையும் எடுத்துக் காட்டுகின்றார்கள்.

அதை அடக்கும் நிலைக்காகத் தான், கடவுளின் அவதாரம் நரசிம்ம அவதாரம் என்று காட்டப்பட்டுள்ளது. கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரமாக, நாராயணன், வாசற்படியில், மடிமீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.

சூரியனான நாராயணன்,  27  நட்சத்திரங்களும் வெளிப்படுத்தும் பால்வெளி மண்டலங்களிலிருந்து தான் கவர்வதை, தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப் பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம். 

ஆனால் மனிதனோ, வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது, வேதனையைப் படரவைக்கின்றது. நமது அந்த சந்தர்ப்பம், உடல்களில் உள்ள உணர்வுகளை, பலவீனமடையச் செய்கின்றது.
2. துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் சந்தர்பத்தை, நாம் ஏற்படுத்த வேண்டும்
பலகோடி உடல்களில் தீமையை நீக்கிய, "துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும்" அந்த சந்தர்ப்பத்தை, ஏற்படுத்த வேண்டும்.
அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி,
நமது கண்களின் நினைவிற்கு கொண்டு வரவேண்டும்.
பின் புருவ மத்திக்கு,
கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும். 
நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக, 
கண் வழி கவர்ந்து, இதை இணைக்கின்றோம். 
இது வலிமையான பின், உணர்வின் பிராணயாமம்.

அந்த துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம். இது தான் முருகு, மாற்றி அமைக்கும் சக்தி.

ஆகவே, தீமைகளை நீக்கிய அருள் உணர்வை, உயிரிலே இணைத்தபின், தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது, உடலைச் சுற்றியே நிற்கும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்த நாளங்களிலே கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.

ஒரு நிமிடம் வலுவானபின்,  அந்த சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும்போது, உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள், நம்மைவிட்டு அகலும். 
3. சோப்பைப் போட்டு, நுரையை  ஏற்றி, அழுக்கை நீக்குவது போன்று, தீமைகளை அகற்ற வேண்டும்
எப்படி துணியில் அழுக்குப்பட்டால், சோப்பைப் போட்டு, நுரையை ஏற்றி, அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ, அதைப் போல,  துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி, அதை வலுவாக்கி, தீமைகளை, நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு, அகன்று செல்லச் செய்கின்றோம்.

அதற்குப்பின், ஒரு நோயாளியைப் பார்த்திருந்தால், துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று, உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால், அவரும் நலம் பெறுவார்.

ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுவைக்கொப்ப எண்ணங்கள், சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம், அது சீதாராம். அந்த ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன், சுக்ரீவனின் மந்திரி. 

சுக்ரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்), நமக்குள் வலு பெற்று, மற்றவர் பெறவேண்டும் என்று சொல்லும்போது,  அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்)  வாயுவாகச் சென்று, மற்றவர்களையும் பெறச் செய்யும்.

மற்றவர்களின் வேதனையை நுகர்ந்தால், அது வாலி. நம் நல்ல குணங்களை அடக்குகின்றது. உடலுக்குள் சென்றால், இராவணன். நல்ல குணங்களைக் கொல்லுகின்றது.

ஆகவே, வாலியை உள்ளுக்குள் செல்ல விடாமல் இராமன் மூடிவிடுகின்றான். நமது உயிரின் துணை கொண்டு, நமக்கு மேல் இருக்கின்ற, துருவ நட்சத்திரத்தை எண்ணி மூடிப் பழக வேண்டும்.

மூடிப் பழகிவிட்டால், நாம் நுகர்ந்த உணர்வின் செயலாக்கம் குறைந்துவிடும் என்பதற்காக இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

ஆகவே, நமது உடலுக்குள் தீமை புகாது தடுத்து நிறுத்தி,
நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, 
நமது சொல் வெளிப்பட்டு, அவரது செவிகளில் படுகின்றது.
அவருடைய கண் நம்மைப் பார்த்து, உணர்வை நுகர்கின்றது.
உயிரிலே பட்டு வாயுவாக மாறுகின்றது.
அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே இணைகின்றது.

ஆகவே, மற்றவர்களும் தீமைகளிலிருந்து விடுபடும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதுதான் இராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுக்ரீவனின் மந்திரி என்று இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.