1.
துவைதம்,
அத்வைதம்,
விசிஷ்டாத்வைதம்
அபிஷேகம்
என்பது என்ன? நாம் உயர்ந்த
உணர்வுகளை நுகரப்படும் பொழுது, அது நம்
உயிரான ஈசனுக்கு, அபிஷேகம் ஆகின்றது.
இதனின் உணர்வலைகள் உடல் முழுவதும் படர்கின்றது.. தெளிவாகும் உணர்வின் அணுவாக மாறி, நம்மைத் தெளிந்த அறிவுடையவராக ஆக்குன்றது. இதனை நம்மிடம் பெறச் செய்வதற்கே ஆலயங்களில் அபிஷேகமும், ஆராதனையும் செய்ய வைத்தார்கள் ஞானிகள். இது துவைதம்.
அருள்ஞானிகளின் அருள் உணர்வை
எண்ணினால், அத்வைதம்.
இதன் வழி கொண்டு நுகரப்படும் பொழுது, விசிஷ்டாத்வைதம்.
நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி, நம்மை இயக்குகின்றது.
உணர்வின் தன்மை உடலானால் துவைதம். ஆகவே, நீங்கள் உயர்ந்த குணங்களை
உங்களுடைய உடலாக ஆக்குங்கள்.
இருளான நிலைகளை அகற்றப் பழக வேண்டும்
என்பதற்குத்தான்,
ஞானிகள் துவைதம் எனும் நிலையாக உருவங்களை அமைத்து, நமக்கு உணர்த்தினார்கள்.
காவியப்படைப்புகள் அனைத்தும்
அத்வைதம், காவியப்படைப்புகளின் கருத்துக்களை எண்ணும்
பொழுது, அதனின் உணர்ச்சிகளை நாம் நுகர முடிகின்றது.
நுகர்ந்தபின், அதனின் உணர்ச்சியின்
இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
ஆனால், இங்கே
துவைதவாதிகளுக்கும், அத்வைதவாதிகளுக்கும், விசிஷ்டாத்வைதவாதிகளுக்கும், தர்க்கவாதம்
நடந்து கொண்டே இருக்கும். அவரவர்கள், தாங்கள் சொல்வதுதான் உண்மை என்று, வாதம்
செய்து கொண்டேயிருப்பார்கள்.
2, ஈஸ்வராய
குருதேவர் மனிதரில்லை, “ஒரு ரிஷிபிண்டம்”
ஒரு முறை நமது குருநாதர், ரிக்வேதத்தை தெளிவாக, பாடிக் காண்பித்தார்.
அதையே திருப்பி, தலைகீழாக பாடிக் காண்பித்தார். வேதங்கள் என்றால் என்ன? என்று தெளிவாக விளக்கிக் கூறினார். குருநாதரும்
ஒரு பிராமணர்தான்.
ஒருமுறை ரிக் வேதத்தை, பாடமாகச் சொல்லித்தரும் ஆசிரியர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சாலையில் சென்று கொண்டிருந்த ஆசிரியரை, “இங்கே வாடா” என்று தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.
குருநாதர், எமக்கு
முன்னாலேயே ஆசிரியருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.
குருநாதர். “ஏன்டா அங்கே தவறு செய்தாய்” என்று கேட்டார்.
ரிக் வேத ஆசிரியர் முழித்தார். “அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாயே, அது எப்படி என்று எனக்குச் சொல்”, என்று
கேட்டார் குருநாதர்.
பிறகு குருநாதரே அந்த மந்திரங்களை, தலைகீழாக சுருதி மாறாதபடி பாடிக் காண்பித்தார்.
ரிக் வேத ஆசிரியர், “திரு
திரு” வென்று முழித்தார்.
எமக்கு இவர்கள் இருவரும் என்ன
பேசிக் கொள்கிறார்கள், பாடிக் கொள்கிறார்கள் என்று
தெரியவில்லை. அவர்கள் பேசுவது,
அவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.
“இனி இதுமாதிரி தவறு செய்யாதே” என்று
ரிக் வேத ஆசிரியரை அடித்து,’போ” என்று
கூறி விட்டார் குருநாதர். ரிக் வேத ஆசிரியர் அங்கிருந்து
போனால் போதும் என்று, வேகமாகப் போய்விட்டார்.
பிறகு குருநாதர் எம்மிடம், “அவன் திருடன், காசு வாங்குவதற்காக
மந்திரத்தையே தவறாகச் சொல்கிறான்” என்று சொன்னார்.
மறுநாள், குருநாதரிடம்
அடிவாங்கிய ரிக் வேத ஆசிரியர் வந்தார். ரிக்வேத ஆசிரியர் குருநாதரைப் பற்றி எம்மிடம் “இவர் மனிதரே இல்லை, ரிஷிபிண்டம்”.
இந்த
வேதத்தை யாரும் சொல்லவே முடியாது. சொல் பிழையில்லாதபடி, சரியான சுருதியுடன்
சொல்கிறார். அவர்
அடித்த அடியில், நான் செய்த தவறுகள் எல்லாம் ஓடியே போய்விட்டது.
நான் இனி பாடம் சொல்லித்தரும் வேலைக்கே செல்ல மாட்டேன். என்னுடைய ஊர் உடுப்பிக்கே செல்கிறேன். அங்கு
வேறு ஏதாவது வேலை பார்த்து, பிழைத்துக் கொள்கிறேன். உங்களுடைய அதிர்ஷ்டம், நீங்கள் அவரை குருவாகப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு
ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று கேட்டார்.
எனக்கு சமையல் தொழில் தெரியும். என்னுடைய சமையல் ருசியாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள்
என்று கேட்டார். யாம் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் கொடுத்து
போய்வரச் சொன்னோம். இது நடந்த நிகழ்ச்சி.
3. குருதேவரின்
பரிபாஷை
உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ, அத்தனையையும் எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை
வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.
அதே சமயத்தில் மின்கம்பத்தை அடிப்பார்.
தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார்.
மின் கம்பத்தை அடித்துக்கொண்டே,
இந்த லைன், அந்த லைன் என்பார்,
குருநாதர்.
டேய்.., “மிளகாய் ஒரு
லட்சம், “கோடி, கோடி” என்பார். எமக்கு ஒன்றுமே
புரியாது. .பைத்தியம் பிடித்தது போன்று பேசிக்கொண்டே
வருவார். குருநாதர்
எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி” என்பார். சாமி
கோடி இங்கே இருக்கிறது? என்போம்.
அந்தக் கோடி இல்லை
என்பார். “ஈகோடி என்பார்.
மிளகாய் கோடி, கோடி” என்பார். என்னென்னவோ கோடி என்பார், எமக்கு அர்த்தம்
ஒன்றுமே புரியாது.
பிறகு சொல்வார், ஒரு
நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து, எத்தனை கோடி உணர்வுகளாக மாறுகின்றது, என்பதையெல்லாம்
விளக்குவார்.
நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள்
மின்னலாக்கப்படும் பொழுது இதனின் உணர்வுகள் எப்படிச்
சேர்கின்றது? .உணர்வுகள் எப்படி மாறுகின்றது? என்பதை குருநாதர் எமக்குச் சொல்வார்.
உள்ளுணர்வாக
உணர்த்தவும் செய்வார்.
முதலில்
சொல்லிவிடுவார்.
பின்னர்
புரிய வைப்பார்.
இப்படி குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை, யாம் அப்படியே உங்களிடத்தில் பதிய
வைக்கின்றோம். சந்தர்ப்பம் வரும் போது, இதன் நினைவு உங்களிடம் வரும்.
யாம் உங்களுக்குள் பதிவு
செய்த நிலைகள் கொண்டு, துருவ நட்சத்திரத்தை எண்ணினால், அது உங்கள்
நினைவுக்கு வரும். அப்பொழுது, அதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்.
எமது அருளாசிகள்.