நஞ்சினை வென்ற அகஸ்தியர், துருவனாகி, துருவ
மகரிஷியானர். கணவனும் மனைவியும், வசிஷ்டரும்
அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி, ஒன்றுபட்டு வாழ்ந்து, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு,. இல்லற வாழ்க்கையில் இருளை நீக்கினார்கள்.
அவர்கள், வானுலக ஆற்றலைத்
தம்முள் நுகர்ந்து, மின்னலின் அணுக்களைத்
தமக்குள் அணுவாக மாற்றி, உயிருடன் ஒன்றி
மின் அணுவாக தம் உடலின் தன்மையை மாற்றி, இன்று துருவ
நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்ற, ஆறாவது அறிவு பெற்றவர்கள், ஏழாவது நிலை கொண்டு, இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.
தீமைகளிலிருந்து விடுபட்ட, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம்
நுகர்ந்து பழகினால், ஒவ்வொரு
நிமிடமும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று, தீமையற்ற நிலையாக வாழலாம்.
வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால், அது நமது இரத்த நாளங்களில் கலந்துவிடுகின்றது. நம்மை
மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்கள் விஷத்தின் தன்மை கொண்டபின், உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.
உடலின் அணுத்தன்மை, விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது, உடலில் வலி வருகின்றது. வலி வந்தால் உடல் நலிகின்றது, எண்ணம் குறைகின்றது.
எவ்வளவு செல்வம் தேடினாலும், எவ்வளவு செல்வம்
சேமித்து வைத்தாலும், கடுமையான நோய்கள்
வந்துவிட்டால், வாழ்க்கையில்
வெறுப்பு தான் வருகின்றது.
வெறுப்பு உணர்வுகள்
வரப்படும்பொழுது
உடலை வெறுக்கின்றோம்,
வேதனையை வளர்க்கின்றோம்.
இதனால், நாம் நிம்மதியற்ற நிலைகளில்தான் வாழ வேண்டி
வரும்.
ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடியில், அழுக்குப்பட்டு
விட்டால், கண்ணாடியின்
அழுக்கைத் துடைத்தால்தான், நம்முடைய உருவத்தைக் காணமுடியும்.
இது போன்று, பிறருடைய
தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகிவிட்டால், நம்மை எது
இயக்குகிறது என்று அறிய முடியாதபடி, நாம் பார்த்திருந்த
உணர்வுகள் நமது உடலை இயக்கி, நம்மை நாம் அறிய
முடியாத நிலைகள் ஆக்கி விடுகின்றது.
ஆகவே, நம்மை நாம் எப்படி அறியவேண்டும்? கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால், நாம்
எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது.
இது போன்றுதான், நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்துவிட்டால், சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.
கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கினால்,
கண்ணாடியில் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று,
நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கி,
தூய்மைப்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
ஈஸ்வரா, என்று
சிறிது நேரம் ஏங்கி தியானித்துவிட்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலிலுள்ள
ஜீவான்மாக்கள், ஜீவ
அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று நம் உடலுக்குள் உணர்வின் தன்மையைச் செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்தப்படும்போது, வேதனைப்பட்ட
உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி, நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது. அப்பொழுது,
நமக்குள் தெளிவான நிலைகள் வரும்.
சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது.
தீமை அகற்றும் வல்லமை
பெறுகின்றது.
தீமைகள் புகாது தடுக்கவும்
முடிகின்றது.