ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2013

உடல் நலக் குறைவாக இருந்தாலும், அருள் உணர்வைப் பெறவேண்டும்

மனிதர்கள், விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவருக்குக் கண் இல்லையென்றால், மாற்றுக் கண்ணைப் பொருத்தி, கண் பார்வை கொடுக்கின்றனர்.

செவித் தன்மைக்கு, இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும், அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை, (சைகை மூலம்) தெரியும்படி கொண்டு வருகின்றார்கள். இருதயம் பழுதாகி விட்டால், பழுதான இருதயத்தை அகற்றிவிட்டு, செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.

நோயாளியின் உடலிலும், மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்து, பழுதான உறுப்பு போன்றே மோல்டு செய்யப்பட்டு, அந்த உணர்விற்குள் சேர்க்கப்ப்பட்டு, அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த உடலுக்கும், மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து, உணர்வின் செல்களை உருவாக்கி, உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.

இப்படி இணைத்தபின், இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால், கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும், இதே தான். இரத்தம் சீராக இருக்க வேண்டும்.

இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காக, சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள். கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால்தான், இரத்தத்திற்கும், பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும். ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால், பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.

ஆகையால், இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும், ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு, அதன் உணர்வை நுகர்ந்துவிட்டால், உடலில் கிருமிகளாகின்றது. அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து. ஆபத்து என்று வந்துவிட்டால், அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

அது சமயம், சாதாரண டாக்டரிடம் சென்றால், பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம், விஞ்ஞானிகள், அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால், இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும், நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்சிறிது நாள் தான் வாழுகின்றோம். 

நமக்கு இப்படி ஆகிவிட்டதே, மருந்தையும் சுவையில்லா உணவையும்தான், சாப்பிட்டு வாழ்கின்றோம் என்ற வேதனை அதிகமாகின்றது. மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள், நம் காலம் இப்படியாகி விட்டதே என்று, நாம் நல்லவர்களாக இருந்தாலும், வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர, மாற முடிகின்றதா?

ஆகவே, நாம் நமது உடலில் இருக்கும் காலத்தில்,
எதைச் சேர்க்க வேண்டும்?
உடல் நலக் குறைவாக இருந்தாலும்,
அருள் உணர்வைப் பெறவேண்டும்,
உணர்வின் தன்மை ஒளியின் சரீரம் பெறவேண்டும், என்று
நம் உணர்வுகளை மாற்றினால்,
நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இவையெல்லாம்,  எமக்குக் குருநாதர் காண்பித்த உணர்வின் உண்மைகள். 

அருள்ஞானத்தை, குருநாதர் காண்பித்த அருள் வழியில், யாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள்ஞான உணர்வை, உங்களுக்குள் இணைத்துப் பெருக்கும் பொழுது, உங்களுள் தீமைகளை அகற்றும் சக்தி விளைகின்றது. அதை நீங்கள் எல்லோரும் பெற, எமது அருளாசிகள்