1. துவைதம், அத்வைதம்
உருவமாக இருப்பது அனைத்தும் “துவைதம்” என்றும், மறைமுகமாக இருப்பது அனைத்தும்
சூட்சமம் என்ற நிலையில், “அத்வைதம்” என்றும் பெயரிடுகின்றனர், ஞானிகள்.
அத்வைதத்தில் இருக்கக் கூடிய நிலைகள், சூட்சமச் செயல்களாக இருப்பதால், அதனைப்
பார்க்க முடியவில்லை.
ஒரு மாங்கனி, இனிப்பின் சுவை கொண்டது.
அதனைப் பார்க்கும்போது “துவைதம்’
அந்த மாங்கனிக்குள், இனிமையான நிலைகள் வரும்போது,
அந்த உணர்வின் சக்தி நமக்குள் படும்போது,
அது “அத்வைதம்”.
அந்த உணர்வின் சக்தி, ஜீவன் பெற்று உடலாகும்போது “துவைதம்”,
இதைப் போன்றுதான், மெய்ப்பொருளைக் கண்டுணரும் நிலைகள் கொண்டு, கண்ணுற்றுப் பார்க்கும்
நிலையை, மறைந்த நிலைகள் கொண்டு, தான் உறைந்த நிலைகள் ஆவது “துவைதம்”. மறைந்திருக்கும்
உணர்வில் நல்லுணர்வை நாம் எடுத்து, அந்த உணர்வின் சக்தி நமக்குள் உறையச் செய்யும்போது,
அது “துவைதம்”.
சூட்சம நிலைகள் கொண்ட அத்வைதத்தை,
நமக்குள் துவைதம் ஆக்கி,
மறைமுகமாக இருக்கும் நிலைகளின் செயலாற்றல்
எவ்வாறு இந்த உணர்வுகள் செயல்படுகின்றது? என்றும்
அங்கங்களை உருவாக்கி, அதனின் செயலின் எண்ணங்களை,
அது உருவாக்கி, இதை எண்ணும்போது, இதன் உருவ நிலைகள்
எவ்வாறு எண்ணுகின்றாய் என்ற இந்த நிலையை
நமக்கு உணர்த்துவதற்குத்தான்,
சாதாரண மக்களும் அறியமுடியாது மறைந்திருக்கும்
இந்தச் சக்தியை, சிலையைக் கண்ணுற்றுப் பார்க்கும்போது, கதைகளாக எழுதி,
அந்த மெய்ஞானியின் உணர்வுகளை, அவர் காட்டிய நிலைகளில் நாம் எண்ணி,
சூட்சம நிலைகளில்
மறைந்திருக்கும்,
அந்த சூட்சம
உணர்வின் நிலையை, நாம் நுகர்ந்து,
உயிருக்குள் உராய்ந்து உணர்வை அறிந்தாலும்,
உணர்வின் சத்து, நமது உடல் ஆக்கப்படும் போது,
எதை மகிழ்ச்சியூட்டும் என்று எண்ணுகின்றோமோ,
அது நமக்குள் ஜீவனாக்கி, நம் உடலாக மாற்றுகின்றது.
அதனின் நிலை பெறச் செய்வதற்குத்தான்,
அந்த மகாஞானிகள், இதை “அத்வைதம்”,
“துவைதம்” என்று சொன்னார்கள்.
2. ஆதிசங்கரர்
செய்து காட்டியது
அக்காலத்தில், அரசர்களுடைய நிலைகள் துவைதக் கொள்கையாக இருந்தது. ஆகையால், ஆதிசங்கரர்
மீது மந்திர ஒலிகளை ஏவி, அவருக்கு வயிற்று வலியை உருவாக்கினர்.
“நீ விநாயகருக்கு யாகங்கள் செய்தால், உன் வயிற்று வலி நீங்கும்” என்றும் கூறினார்கள்.
அப்போது ஆதிசங்கரர், “இதுவல்ல உண்மையான யாகம்.
நமக்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள்
அந்த அருள் ஞானியின் உணர்வைச் செலுத்துவதே உண்மையான யாகம்.
என்னை இயக்கிக் கொண்டிருக்கும்,
எனக்குள் ஜீவன் பெறச் செய்து கொண்டிருக்கும்
என் உயிரான நெருப்புக்குள்,
அந்த மகாஞானியின் உணர்வைச் செலுத்துவேனென்றால்
என் உடலுக்குள் நீங்கள் ஏற்படுத்திய
தீமையின் விளைவை மாற்றிக் கொள்ள முடியும்”.
நீ புறத் தீயிட்டு, அதில் பொருளைப் போட்டு,
அதனில் வரும் கருகிய மணத்தை நுகர்ந்தால்
எனக்குள் அது வராது.
ஆகவே, தீமையை அகற்றிடும், தீமையை அகற்றிட்ட
அந்த மெய்ஞானியின்
உணர்வை
என் உயிரான நெருப்புக்குள்
போட்டு,
அந்த உணர்வின் தன்மையை அலைகளாகப் பாய்ச்சும்போது, எனக்குள் விளைந்த தீதினை, என்னால் அகற்றிட முடியும் என்று, செய்து காட்டினார், ஆதிசங்கரர்.
இந்த துவைதவாதிகள், எமக்கு அது இல்லை என்றனர். பின் ஆதிசங்கரர் கங்கைக்கரை சென்றவர்தான்.
அதற்குப்பின் அவர் சரித்திரம் இல்லை.
ஆனால், அவருக்குப்பின் அரசர்கள் துவைதம் என்ற நிலைகளிலேயே, யாக கேள்விகள் போன்ற
முறைகளிலேயே, அரசாட்சி செய்து வந்தனர். உண்மையில், ஒவ்வொறு மனிதனையும் கடவுளாக மதி
என்றும், அதனின் உணர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொன்ன, ஆதிசங்கரருடைய நிலைகள்
மாறிவிட்டது.
அவரது இறுதிக் காலம் எப்படிப்பட்டது? எங்கே சென்றார்? எங்கே இருந்தார்? என்பது
யாருக்கும் தெரியவில்லை. சரித்திரத்தைச் சொல்லச் சொல்லுங்கள். அவருடைய சீடர்களாக இருப்பவர்கள், இன்று அந்த
உண்மையான நிலைகளை, ஏன் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை?
அன்று இந்த மக்களுடைய நிலைகளை, “அறியாது தீது விளைவிக்கும் அரச நிலைகளிலிருந்து, மக்களை நீ மனிதனாக்கு,
அந்த மனிதனை முழுமையாக்கு” என்று, அன்று சொன்னாரே ஆதிசங்கரர். அதனுடைய நல்ல உணர்வின் தன்மையை, ஏன் பிறரைப்
பருகச் செய்யவில்லை?
இன்று ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். அதில் பூஜிக்க வரும் மக்களிடம், காசு வாங்கிப்
பிழைப்பேன் என்ற நிலைகளில்தான் ஒவ்வொருவரும் செய்து வருகின்றார்களே தவிர, அங்கே வருபவர்கள்
நன்மை பெறுவார் என்ற நிலைகள், யாருக்கும் இல்லை.
நீங்கள் நன்மை பெறுவீர்கள் என்று ஆசையை ஊட்டி,
அதனின் மறைவிலே காசைத்தேடி,
உண்மையுடைய நிலைகளை மறைக்க முடிகின்றதே தவிர,
மறைந்த பொருளை நாம் கண்டுணர்ந்து,
நம்மையறியாது தீது விளைவிக்கும் நிலைகளிலிருந்து,
காத்துக் கொள்ள முடிகின்றதா? என்றால்
அது இல்லை.
இன்றும், விஞ்ஞான உலகில் மனித உணர்வு அனைத்திலும், அழிந்திடும் வெறித்தன்மையைத்தான்
ஊட்டுகின்றார்கள்.
ஆனால், “மக்கள் அனைவரும்
கடவுளின் பிள்ளைகள்”, ஒவ்வொரு மனிதனும், அவன் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்,
அவர்கள் உயர்ந்த குணங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை, நாம் நமக்குள் வளர்த்துக் கொண்டால்,
நாம் அதுவாகின்றோம். அவனையும் அதுவாக்க வேண்டும். இந்த உணர்வின் தன்மையை நாம் பரப்பப்படும்
பொழுது, உடலில் வரும் தீதினை நீக்கிவிட முடியும்.
ஆகவே, “மனிதா,
நீ ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும்
உயிரைக் கடவுளாக மதி” என்ற நிலையும்,
அங்கே கடவுள் வீற்றிருக்கும் ஆலயம்,
அது புனிதம் பெறவேண்டும் என்றும்,
“எந்த மனிதன் இங்கே தீது செய்கின்றானோ,
அந்த உணர்வு அவர் அறியாது உட்புகுந்து, தீதினை விளைவிக்கும்
அந்த நிலை, ஆலயத்தை மாசுபடுத்தும் நிலையும்,
அங்கு ஆண்டு கொண்டிருக்கும் உயிரான
ஈசனுக்கு
தீதான மணங்கள் சேர்ப்பிக்கும் நிலையிலிருந்தும்,
அதைத் துடைத்திடும்
நோக்கமாக,
நீ இவ்வாறு செய்” என்று தான்
அந்த மகாஞானி ஆதிசங்கரர் சொன்னார்.