1. முன்னோர்களை ரிமோட் கன்ட்ரோல்
போல, சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்யவேண்டும்
உங்கள் அனைவருடைய எண்ணத்தையும் சப்ரிஷி மண்டலங்களுடன்
தொடர்பு வைக்கச்செய்து, அதை உங்களுக்குள், அதி சக்திவாய்ந்ததாக மாற்றுகின்றோம்.
அன்று,
பிறருடைய துன்பத்தைப் போக்க வேண்டும் என்று பித்தனாகி, அதன் வழியிலே ஞானம் பெற்று.
அவர் சிருஷ்டிக்கும் தன்மையில் ரிஷியாகி, தன் உணர்வின் தன்மை ஒளியாகி மாற்றி விண் சென்றார்,
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அவர் வழியில், அவர் கண்ட உண்மைகளை
நாம் சிந்திக்கும் தன்மையாக, அந்தச் சிந்தனையின் நிலைகளை
உங்களுக்குள் செயல்படுத்தி, இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் இப்பொழுது வளர்க்கச்
செய்கின்றோம்.
நீங்கள்
அதை வளர்த்து, அந்த நினைவின் அலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும்போது, அது உங்களுக்குள்
சிந்திக்கும் தன்மையாக, அவர் சிந்திப்பதற்கு புடமிட்டு எடுத்துக் கொண்ட, அந்த உணர்வின்
சக்தியை நீங்கள் நுகரும் போது, உங்களுக்குள் தீய விளைவுகளை விளைவிக்கும் இந்த உணர்வின்
செயல்கள் அனைத்தையும், அது இழக்கச் செய்கின்றது.
அவ்வாறு
இழக்கச் செய்ய வேண்டுமென்றால், இதனின் சக்தியை விண்ணிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் தகுதி பெற வேண்டும்.
அப்படி
நேரடியாகப் பெறவேண்டும் என்றால், நமது மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அந்த விண்வெளியிலே ரிமோட் கண்ட்ரோல் போல, நாம் எடுத்துக்
கொண்ட அந்த தியானத்தின் வலுக்கொண்டு, ரிமோட் கண்ட்ரோல் போல, சப்தரிஷி மண்டலத்துடன்
இணைக்கச் செய்யவேண்டும்.
அவர்கள்
(முன்னோர்கள்) சூட்சும சரீரங்கள் பெற்றவர்கள். அவர்கள் உணர்வின் சக்தி நமக்குள் உண்டு.
அவர்கள் கோபமாகப் பேசியிருந்தாலும் சரி, ஆத்திர உணர்வு கொண்டு பேசியிருந்தாலும், இதனுடைய
நிலைகளை
நாம்
அந்த மெய்ஞானியின் உணர்வலைகளைக் கொண்டுவரும்போது,
பாசத்தால்
வளர்த்துக் கொண்ட,
நம்மை
வளர்த்திட்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு,
அதே பாச உணர்வுக்கு,
சக்திகொண்ட ஞானியின் சக்தியை மெருகு ஏற்றப்படும்போது,
அந்த
நினைவின் எண்ண அலைகள் கொண்டு.
மூதாதையரின்
உயிராத்மாக்கள்
சப்தரிஷி
மண்டலத்துடன் இணைந்து
ஒளி சரீரம்
பெற வேண்டும் என்று
உந்தித் தள்ளச் செய்வதற்குத்தான் பௌர்ணமி தியானம்.
உடலை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் உயிராத்மாக்களை,
நாம் எண்ணத்தாலே எண்ணி, சப்தரிஷி மண்டலத்துடன்
இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்துவதற்கு முன்,
முதலில் “ஆத்மசுத்தி” செய்ய வேண்டும்.
ஒரு தடவைக்கு, அரைமணி நேரமாவது
செய்ய வேண்டும். அல்லது ஒரு பத்து நிமிடமாவது ஆத்மசுத்தி செய்ய
வேண்டும். எல்லோரும் சேர்ந்து, திரும்பத்
திரும்ப இந்த ஆத்மசுத்தியைச் செய்ய வேண்டும்.
‘மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற
வேண்டும்.
அது எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும்.
நாங்கள் பார்ப்பது எல்லாம் நலம்
பெற வேண்டும்.
எங்களப் பார்ப்பவர்களுக்கெல்லாம்
நல்ல எண்ணங்கள் வரவேண்டும்.
எங்கள் வீடு முழுவதும், மகரிஷிகள்
அருள் ஒளி படர வேண்டும்.
எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம்
நலம் பெற வேண்டும். என்று
சொல்லி விட்டு, எல்லோருக்கும்
நல்லது கிடைக்க வேண்டும். என்று
மறுபடியும் மறுபடியும்
விண்ணை நோக்கி,
இந்த உணர்வைச் செலுத்தி, செலுத்தி
இந்த மணத்தைக்
கூட்ட வேண்டும்.
அப்போது, இந்த உணர்வின்
தன்மையை நாம் கூட்டி, இந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் நம் மூதாதையர்களை
எளிதில் விண் செலுத்தி விடலாம்.
2. படிப்பறிவு தேவையில்லை - சப்தரிஷி
மண்டலங்களுடன் தொடர்பு கொள்ள
இதற்குப் படிப்பறிவு தேவையில்லை. யாம் படித்ததில்லை.
ஆக, யாம் இதைப் பேசுகிறோம் என்றால், எமக்குள் அவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வுதான்,
அந்த உணர்வின்
மணங்கள்தான் பேசுகின்றது.
ஆக இன்று
ஒலிப்பதிவு ஆகும் நாடா, (CD) அதற்குள் இருக்கக்கூடிய முலாம், இதற்குள் இருக்கக்கூடிய
காந்த அலைகள், யாம் பேசுவதை அது கவர்ந்து அது பதிவாக்குகின்றது.
பதிவான
நாடாவை (CD) மீண்டும் காந்த ஊசியிடும்போது, அந்த யாம் பேசிய உணர்வின் தன்மையை, அது
வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இதைப்போல படிக்காதவர்களுக்கு இந்த உபதேசம்.
இதைக்
(ஒலி நாடாவை - CD) கூர்ந்து கவனித்தால்,
அதைப்
படிக்கவில்லை வெறும் முலாம்தான்.
நீங்களும்
படிக்கவில்லை. வெறும் முலாம்தான்.
உங்களுக்குள் இருக்கக்கூடிய “முலாம்”
மிகச் சக்தி வாய்ந்தது.
இப்பொழுது, கூர்மையான எண்ணத்தை
நீங்கள் செலுத்தப்படும்போது, யாம் உபதேசிக்கும் உணர்வுகள், உங்களுக்குள் பதிவு ஆகிவிடுகின்றது.
மீண்டும்
இந்த நினைவு வரும்போது,
உங்கள் “உயிரான காந்த ஊசிக்குள்”
படும்போது,
அந்த
உணர்வின் ஆற்றல் பெருகி, உங்களுக்கு நினைவுபடுத்தி அந்த ஞானத்தை ஊட்டும். எதை நீக்க
வேண்டுமோ அதை நீக்கி, பொருளைக் காணச் செய்யும்.
அத்தகைய
நிலைகள் பெறச் செய்வதற்குத்தான். யாம் இப்பொழுது உங்களுக்குள் உபதேசிக்கின்றோம். இந்த
உணர்வின் தன்மை ஒரு நிலைப்படுத்தி, உங்கள் எண்ணத்தை விண்ணை நோக்கிச் செலுத்தப் பழகிக்
கொடுக்கின்றோம்.
பௌர்ணமி
அன்று, சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, நாம் அனைவரும் ஒரே ஏக்கத்துடன் எண்ணும்போது,
வலுகொண்ட சக்தியாக இது மாறுகின்றது. எமது அருளாசிகள்.