ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2013

மகா சிவன் ராத்திரி

 (பக்கம் 4-8)
ஒரு தீபத்தை நாம் ஏற்றி வைத்தோமானால், அத்தீபம் தனக்குத் தேவையான சக்தியை, காற்றிலிருந்து எடுத்துத்தான் எரிகின்றது. இதைப்போன்று,
உயிரணுவின் துடிப்பின் இயக்கத்தால்
வெப்பம் வெளிப்படுகின்றது.
அவ்வாறு அது வெப்பத்தினை வெளியிடுவதால்,
மீண்டும் அது ஜீவன் பெற வேண்டும்.
அதனுடன் இணைந்த காந்தப்புலன், இயக்கத்திற்குத் தேவையான சக்தியை எடுத்து, உயிரணுவைத் தொடர்ந்து இயங்கச்செய்கிறது. 

நாம் ஒரு தீபத்தை ஏற்றி, அதனை ஒரு பெட்டியைக் கொண்டு மூடினால், தீபம் தொடர்ந்து எரிவதற்குத் தேவையான சக்தி கிடைப்பது தடுக்கப்பட்டு, தீபம் அணைந்து விடுகின்றது.

தைப்போல, உயிரணுவில் காந்தப்புலன் இல்லாவிட்டால் உயிரணுவின் இயக்கம் தடைப்படுகின்றது.

யிரணுவின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும், காந்தப்புலனிற்கு லட்சுமி என்று பெயரிட்டனர் ஞானிகள்.
உயிரணு துடிக்கும்பொழுது
அதிலுள்ள காந்தப்புலன் ஈர்க்கும் சக்தி பெற்று,
அருகில் இருக்கும் பொருட்களை ஈர்த்து
உயிரணுவுடன் இணைத்துவிடுகின்றது.

அவ்வாறு இணைக்கப்பட்ட உணர்வின் சத்துக்கொப்ப, உயிரணு தன்னிடமிருந்து மணத்தை வெளிப்படுத்துகின்றது. அந்த மணமே, ஞானமாக, தெரிந்து கொள்ளும் நிலையாகின்றது.

ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் நீரை ஊற்றி வைக்கும்பொழுது, நீரானது தீயின் வெம்மையினால் கொதிக்கத் தொடங்குகின்றது. இக்கொதிப்பின் சக்தியை இயக்க சக்தியாக மாற்றுகின்றனர். அதாவது, நீரைக் கொதிக்கச் செய்து அதிலிருந்து வரும் நீராவியைக் கொண்டு, ரயில் எஞ்சினை இயக்குகின்றனர்.

அது போலத்தான் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பகாந்தம், உதாரணமாக ஒரு கடலைச் செடியை தாக்குகின்றது. அப்படித் தாக்கப்படும்பொழுது, கடலைச் செடி கொதிப்பாகி, தனக்குள்  உறைந்த மணத்தை ஆவியாக வெளிப்படுத்துகின்றது. அதன் பிறகு வரும் வெப்பகாந்தங்கள், அந்த மணத்தைக் கவர்ந்து கொள்கின்றன. கவர்ந்தவைகள் அணுவாக மாறுகின்றன.

அந்தக் கடலைச் செடியின் மேல், ஒரு உயிரணு படுமேயானால்,
அந்த கடலைச் செடி வெளிப்படுத்தும் மணத்தை,
உயிரணுவுடன் இணைந்திருக்கும் காந்தம்
தன்னுடன் இணைத்துவிடும்.

அவ்வாறு ஜீவனாகி, ஆவியாகி, மீண்டும் அதனுடன் உறையும் தன்மையாகின்றது. உறையும் பொழுது, அதற்குள் இந்த உயிரணு அடைபட்டுவிடுகின்றது.

அதனால்தான் உயிரணுவைப் பார்க்க முடிவதில்லை. அவைகளை, நாம் மின் அணுவாகத் தான் பார்க்கமுடியும். அதனின் நுண்ணிய நிலைகள் வெளிப்படும்பொழுது, அந்த உயிரின் நுண்ணணுக்களையும் நாம்  காண முடியாது. அது சூட்சுமத்தில் இயங்கும் துடிப்பு கொண்டது.

ஒரு தாவர இனச் சத்தை சூரியனின் வெப்ப காந்தம்  கவர்ந்து, அந்த மணமாக, அலைகள் புவியில் பரவுகின்றது. அவ்வாறு அந்த மணத்தை நுகர்ந்த அணுக்கள் பரவும்பொழுது, நாம் எதிராக சுவாசித்தால் ஏதோ மணம் வருகின்றது என்றுதான் அறிய முடிகின்றது.

இதுவே ஒரு விஷச் செடியில் இருந்து மணம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம், அதை நாம் நுகர்ந்தால் அது நமக்குள் ஜீவன் பெற்று, நம் நல்ல அணுக்கள் அனைத்தையும் செயல்  இழக்கச் செய்துவிடும்.

நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் செயலிழக்கும் பொழுது, நாம் மயங்கி விழுந்து விடுகின்றோம். ஏதோ கெட்ட வாசனை, அதனால் மயங்கி விழுந்து விட்டார் என்று கருதுகின்றோம்.

நறுமணமான நிலைகளை நாம் நுகரும்பொழுது, நல்ல மணம் வருகின்றது என்று அறிந்து கொள்கின்றோம்.
அது எவ்வாறு, எங்கிருந்து வந்தது? என்பதை
நாம் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஏனென்றால் அவைகளெல்லாம், சூட்சுமத்தில் கண்களுக்கு புலப்படாமல் நடக்கும் நிகழ்ச்சிகள்.

அதைப்போன்றுதான். ஒரு உயிரணு கடலைச் செடியின் மணத்தை நுகரப்படும்பொழுது, அது உறைந்து உடலாகின்றது. அப்படி உடலாகும் பொழுது, உயிர் உடலுக்குள் மறைந்து விடுகின்றது.

உயிர் எந்த மணத்தை நுகர்ந்ததோ, அதைத் தன்னிடத்தில் உறையச்செய்து, அதற்குள் உள்ளடங்கி விடுகின்றது. உயிரணு தன்னுடன் இணைத்துக் கொண்ட உணர்வின் மணங்களை தன் மேல் போர்த்திக் கொண்டு, உருவமாக, சிவமாக நமக்குத் தெரிகின்றது.

உயிரின் இயக்கமான ஒளியின் சக்தி
உடலுக்குள் மறைந்து விடுகின்றது.
இதைத் தான் சிவன் ராத்திரி என்று அழைக்கின்றோம்.
ஒளியான உயிரின் தன்மை, தான் எடுத்துகொண்ட உணர்வின் மணத்துக்கொப்ப அதனின் சரீரமாகப் பெற்று, அவ்வுயிரின் தன்மை சரீரத்தால் மூடப்பட்டு மறைக்கப்படுகின்றது.

இவ்வாறு ஒளியான உயிரின் தன்மை, சிவமான உடலின் இருட்டுக் குகைக்குள் நின்று இயங்கிக் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டே அன்று மெய்ஞானிகள் சிவன் ராத்திரி என்று பெயரிட்டு, உயிரணு உடல் பெற்ற நாள் என்று நினைவுபடுத்தினர்.
(பக்கம் 11,12)
நாம் பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பு வைக்கிறோம் என்றால், ந்தக் குழம்பு எப்படி ஒரு சுவையாக, ஒரு மணமாக மாறுகின்றதோ, இதைப்போன்றுதான், பல தாவர இனச்சத்துக்கள், சந்தர்ப்பத்தால் விஷச்செடிகளின் சத்தான மணத்தின் தாக்குதலால் அதிக சுழற்சியாகப் பெற்று, ஒன்று மற்றொன்றுடன் இணைந்து, இவை னைத்தும் ஒன்றாக இணைந்து, ஒரு புது வித்தாக உருபெறுகின்றது.

இவ்வாறு ஒரு வித்தானாலும், அது எதனெதன் நிலைகள் கொண்டு மோதியதோ, அத்தனை செடிகளின் சத்தையும் இது முதலில் கவரும்.

இவ்வாறு கவர்ந்த செடியின் சத்து, வித்தாக ஆகும் பொழுதுதான், அதனுடைய தாய்ச் செடி தனக்குள் சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகளை, இந்த வித்து கவர்ந்து, அந்தச் செடியாக விளையும்.
வித்திலிருந்து செடியா?
செடியிலிருந்து வித்தா? என்பது போன்று,
பல நிலைகள் கொண்டு, பல செடிகள் உருமாற்றம் அடைகின்றன.

இதைப் போன்றதுதான் நமது உயிரும். உயிரணுவின் தன்மை பெற்றபின், அது புழுவானாலும், அந்த கடலைச் செடியின் சத்தை நுகர்ந்து, அதனின் உணர்வு கொண்டு, அந்த உயிரான்மா வரப்படும் பொழுதுதான் ‘’சிவன் ராத்திரி’’ என்று பெயரை வைக்கின்றனர்.

இவ்வாறு ஒரு உயிரான்மா, மனித சரீரத்தைப் பெறும் பொழுதுதான் அதனை ‘’மகா சிவன் ராத்திரி’’ என்று பெயரிட்டனர்.
இந்தப் பூமியில், எத்தனை கோடிக்கணக்கான
தாவர இனங்கள் இருக்கின்றதோ,
அத்தனை சத்துக்களையும் உணர்வின் சத்தாக
இந்த உயிரணு நுகர்ந்து, பல சரீரங்களாக உருமாறி வந்தது.

அப்படி உருமாறி வந்து, தான் பெற்ற ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்த உணர்வினுடைய சத்துக்கள் உயிரணுவில் உறைந்து, அவ்வுணர்வின் குணங்கள் அனைத்தும் உயிரணுவை மூடி மறைத்திருக்கின்றன.

அதிலே, எந்த குணத்தின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ, அந்த குணத்தின் இயல்பாக அதனின் உணர்வின் நிலைகள் நமக்குள் எண்ணங்களாக இயங்கி, அதனதன் நிலைகளில் நம்மை வளர்த்துக் கொள்ள முடியும், என்பதை உணர்த்திடவே மகா என்று பெயரிட்டனர், ஞானிகள்.
(பக்கம் 15-19)
மலை மீது பாறைக்குள் சில நிலைகள் இருந்தாலும், தனக்குள் அந்த பாறையாவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து, அது தன்னிச்சையாக நீரை, தான் பருகி, அதன் அருகிலே எந்த மலை இருக்கின்றதோ, அதனை ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது போன்ற நிலைகள், சில பகுதிகளில் உண்டு.

அவ்வாறு பெற்ற நிலைகளில் மேகங்கள் படர்ந்து சென்றால், தனது காந்தப்புலனால் அந்த மேகங்களைக் கவர்ந்து, உச்சிமலையாக இருப்பது கவர்ந்து, அதற்குள் நீராகச் சுரக்கச்செய்து வடிவதை, சில மலை உச்சிகளில் நாம் பார்க்கலாம். இவையெல்லாம்,
பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும்,
அதனுள் கலந்து கொண்ட
உணர்வின் சத்தின் துணை கொண்டுதான்,
அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.
அதைப்போன்று, அந்த பாறையில் இருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும், பாறைக்குள் நீரினில் கலந்து, அதனின் தன்மை கொண்டு, ஒரு கருவாக உருவாகுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிக் கருவான, அத்தகைய மரங்களின் செடிகளை நாம் எங்கேயாவது ஊன்றி வளர்த்தால், அந்த மரம்
அதிலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
விண்ணிலே நுண் அணுக்களாக கலந்து கொண்டு இருக்கும்,
துருவப்பகுதியிலிருந்து வரும் (அல்லது)
கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சத்தை
சூரியனின் காந்தசக்தி கவர்ந்து இருந்தால், அதனின் சக்தியை
இந்த மரத்தின் காந்தப்புலன் தனக்குள் குவித்து
மேகங்களாகக் கூடச் செய்து, நீராக வடியச்செய்து,
அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட வேலிமுள் செடியானது, காற்றிலே இருக்கும் நீரின் சத்தினைக் கவர்ந்து, அந்த உணர்வின் சத்து, செடியாக விளைகின்றது.
வேலி முள் மேலே விண்ணை நோக்கி,நீரின் சக்தியைக் கவரும் காந்தப்புலனை”, இந்தச் செடி வளர்த்துக் கொண்டாலும், எந்த அளவிற்கு ஈர்க்கின்றதோ,
அதனின் நிலைகள் கொண்டு
பூமிக்குள் இருக்கும் நீரை
இழுக்கும் தன்மையைப் பெறுகின்றது.

அப்பொழுது, இந்தச் செடிக்குள் இருக்கும் விழுதின் தன்மை, கூர்மையாக, பாறையையும் பிளந்து விழுதினை ஊடுருவச் செய்து, தனக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது. இது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

அதாவது, மழை நீரே இல்லாத காலங்களில், அந்தச் செடி செழித்து ஓங்கி, வளர்கின்றது. எரிபொருளாக உபயோகிக்கவும், அதனின் துணைகொண்டு இயந்திரங்களை இயக்குவதற்காக இதனைக் கண்டுபிடித்தனர். விஞ்ஞான அறிவு கொண்டு உருவானதுதான், இந்த நிலை.

ஆனாலும், இந்த வேலி முள்ளில் விஞ்ஞான அறிவால் கலந்த, விஷச் சத்தான தன்மைகள் அதனில் ஊடுருவி இருக்கின்றது. அந்த விஷமுள் மனிதரின் உடம்பிலோ, காலிலோ குத்திவிட்டால், அதனின் விஷத்தின் தன்மைகள் மனிதரிடத்தில் நுழைகின்றன.

அந்த விஷச்செடி தன்னுடைய விஷத்தின் தன்மையால் துடிப்பின் நிலைகள் அதிகமாகி, அதனின் உணர்வின் துணைகொண்டு காற்றிலே இருக்கும் நீரை கவர்ந்து, காற்றிலே உள்ள விஷத்தின் துணைகொண்டு, தன் இனமான சத்தை அது வளர்த்துக்கொண்டு, தன் உணவாக எடுத்துக்கொண்டு மரம் விளைகின்றது.

அந்த விஷச்செடியில் இருக்கும் முள்
நம் உடம்பிலோ, காலிலோ குத்திவிட்டால்
அதனுடைய விஷத்தன்மை நம் ரத்தத்தில் கலந்து
உடலில் கடுகடுப்பான உணர்ச்சிகளைத்
தூண்டிக்கொண்டே இருக்கும்.
   
ஒரு தரம் முள் குத்தினாலும், இனம் புரியாமல் பளீர் என்று வலி எடுப்பது போன்று, அந்த உணர்வின் நிலை தூண்டப்பெற்று, இரத்தத்துடன் கலந்து வரப்படும்போது, மற்ற நல்ல குணத்துடன் தசைகளிலே மோதப்படும் பொழுது பளீர் என்று குத்துவது போன்று வலிக்கும்.

அந்த முள் மிக அழுத்தமாகக் குத்தியிருந்தால் அதனால் கை, கால் குடைச்சல் மற்றும் எரிச்சல் என்ற நிலையும் வந்து விடுகின்றது.

இங்கு பஞ்சம் ஏற்பட்டு, நீர் நிலைகள்  வறண்டு, விறகு விலை ஏற, அடுப்பு எரிப்பதற்கு, எளிதாக விறகுகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், என்று மக்கள் நலன் கருதி காமராஜர் காலத்தில், விஞ்ஞானத்தில் கண்டறிந்து உருவாக்கப்பட்ட, விஷ முள் செடியின் விதைகள் அனைத்துப் பகுதிகளிலும், விமானத்தின் மூலம் தூவப்பட்டது.

மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று, இந்த விஷ முள் செடிகளை விதைத்தனர் என்றாலும், அந்த முள் செடியினால், எவ்வளவு தீமைகள் இருக்கின்றன? என்பதை விஞ்ஞானிகள் அறியவில்லை.
(பக்கம் 27-29)
நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின்சார ஓட்டத்தை ஏற்படுத்துகின்ற பொழுது, மின்சார ஓட்டத்தின் பாதையில் வெப்பம் ஏற்பட்டாலும், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியை இயக்குகின்றோம்.

இதைப் போன்றுதான், அந்த விண்ணின் ஆற்றல் வீசப்படும் கதிரியக்க நிலைகளை, சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்ப காந்தம் கவரப்படும் பொழுது, அந்த கதிரியக்கச்சக்தி மற்ற உணர்வின் அணுக்களை அது மோதிய நிலைகள் கொண்டு, அது செயலிழக்கப்படும் போது, அது உறையும் தன்மை அடையச் செய்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு, இவர்கள் செய்யும் அற்புதத்தைப் போன்றே
இயற்கையில் விளைந்த,
இயற்கையின் செயலாற்றலைக் கண்டுணர்ந்து,
ஆற்றல்மிக்க அச்சக்தியினை அறிந்து கொண்டவன்
‘’கார்த்திகேயா’’ என்பது.
கார்த்திகை நட்சத்திரம் வெளியிடும் கதிரியக்கச்சக்தியின் தன்மைகள், மற்ற பொருட்கள் அனைத்திலும், இது கலக்கப்படும் போது, ஒவ்வொரு பொருளும் தன் இனம் என்று தனக்குள் கண்டுணர்ந்து, தன் உணர்வின் தாவர இனத்தை வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்றது.

இதைப்போன்று, தாவர இனங்களில் கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை எவ்வளவு விகிதம் இருக்கின்றதோ, அதற்கொப்ப அந்தத் தாவர இனம் செழித்து ஓங்குவதும், அந்த உணர்வின் மணத்தை நுகரும் புழு, மற்ற அணுக்களும் தனக்குள் சிந்தனை செய்து, தெரிந்திடும் சக்தியாக, அதை உணவாக உட்கொள்வதும் வருகின்றது.

இவ்வாறுதான், ஒவ்வொரு உணர்வின் எண்ணங்களும் வளர்ச்சி டைந்து, மகா சிவன் ராத்திரியாக, நமக்குள் இருந்தாலும், இருளுக்குள் பொருள் காணும் நிலையும், ஆறாவது அறிவு கொண்டு நாம் இருக்கும் இந்த மனித நிலைகளில், அந்த மெய்ஞானி தனக்குள் கண்டுணர்ந்து, உணர்வின் தன்மையை இன்று பூரண நிலா போன்று, “உயிரின் தன்மை என்றும் நிலையான நிலைகள் கொண்டு, ஒளிச் சரீரமாகப் பெற்றுச் சென்ற நன்நாள்தான் மகா சிவன் ராத்திரி.

மகா சிவன் ராத்திரி ன்பது, ஒவ்வொரு உணர்வின் தன்மையும் நமது உடலுக்குள் அமைந்துள்ளது. பல கோடி தாவர இனங்களின் மணத்தின் சத்தை உணவாக உட்கொண்டு,
அதனின் உணர்வின் துணைகொண்டுதான்
எண்ணங்களாக உருவாகி,
அதனின் நினைவின் நிலைகள் வரப்படும் பொழுது,
எந்த குணத்தின்பால் நினைவு வருகின்றதோ,
அந்த குணத்தின் திறனாக அது இயங்கப்பட்டு,
அந்த குணத்தின் சத்தாக, அதே குணம்
தான் இயக்கப்படும் பொழுது,
தன் உணவாகக் காற்றிலிருந்து கவர்ந்து, அது வீரியமாகி,
அந்த உணர்வின் செலாக,
தன் இனங்களை அக்குணம் விருத்தி செய்து கொள்கின்றது.

அக்குணத்தின் மணம், அதனின் உணர்வின் இயக்கமாக, தனது சரீரத்தில் எதனை விளைய வைத்ததோ, அதற்கொப்ப அறிந்து கொள்ளும் நிலை பெற்றது.

அது, அறிந்து கொள்ளும் திறன் பெற வேண்டுமென்றால், அது கார்த்திகை நட்சத்திரத்தின் இயங்கும் செல்கள், இயக்கிய நிலைகள் கொண்டுதான், அதனுடைய இயல்புகள் எதனெதிலே கலந்து உள்ளதோ, அந்த தாவர இனத்தின் சத்தின் நிலைகள் கொண்டுதான்,
இந்த உணர்வின் எண்ண அலைகள்,
அதற்குள் ஞானத்தின் தொடராக
அந்த உடலைக் காத்திடும் நிலையாக,
தான் எண்ணிய இயல்புகளைப் பெறுகின்றது.

இவ்வாறு இயங்கி வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரம், அது தனக்கென்றே வாழும் நிலை வந்துவிட்டது. இன்று சூரியன் தன்னிடத்தில், கோள்களையும், நட்சத்திரங்களையும், வளர்த்துக் கொண்டு, ஒரு பிரபஞ்சமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றதோ அது போன்றே, கார்த்திகை நட்சத்திரமும், சூரியனாக மாறும் பருவம் வந்துவிட்டது.
(பக்கம் 29-33)
உதாரணமாக, மனிதன் தனக்கு தக்க வயது வந்ததும், திருமணம் செய்து கொண்டு தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்கின்றான்.

அது போன்று கார்த்திகை நட்சத்திரம் தனது அருகில் கோள்களை உருவாக்கி, அதன் மூலம் விண்வெளியிலிருந்து வரக்கூடிய சக்திகளை தனது உணவாக எடுத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

இத்தகைய தன்மை கொண்டு, ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி இயங்கும் நிலையை, கார்த்திகை நட்சத்திரம் பெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரம் போன்றே, ரேவதி நட்சத்திரமும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அறிந்திடும் உணர்ச்சியைத் தூண்டி,
ஒரு பொருளின் தன்மையைப் பிளந்து,
உட்பொருளை அறிந்திடச் செய்யும்
ஆற்றல்மிக்க கார்த்திகை நட்சத்திரத்தின் நிலையைத்தான்,
மனிதனின் ஆறாவது அறிவிற்குள், இன்று நாம் சரவணபவ, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா என்று சொல்கின்றோம்.
கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள்,
எத்தனையோ கோடி தாவர இனங்களுக்குள் உட்புகுந்து,
அதனை, அது காத்திடும் நிலையாக வந்து,
அந்த உணர்வை உணவாக எடுத்த உயிரணுவின் தன்மை,
அதனின் மணம் எண்ணமானாலும்,
அந்த மணத்தின் உணர்வின் சத்து உடலாகி,
அந்த உடலுக்குள் எண்ணமாகி,
எண்ணத்தின் நிலைகள் தனக்குள் அது இயக்கமாகி,
அதனின் உணர்வாக அறிந்துணர்ந்து,
அதனுடைய வாழ்க்கையில் அது வளர்ந்து,
அந்த உடலைக் காத்திட்ட நிலைகள்தான் அது.

மனிதரிடத்தில் இருக்கும் புலனறிவு ஐந்து என்றாலும், அவரின் ஆறாவது அறிவின் தன்மை அனைத்தையும் அறிந்திடும் நிலையும், அறிந்து செயல்படும் திறனும், தீமையை தன் எண்ணத்தால் அகற்றிடும் நிலையும், தீமையை அடக்கி, நன்மை பயக்கும் சக்தியாக மாற்றும் நிலையும், இந்த மனிதனின் ஆறாவது அறிவிற்குள் உண்டு.

இத்தகைய தன்மை வாய்ந்த, மனிதனின் ஆறாவது அறிவிற்குள் வந்து சேர்ந்து கொண்டிருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தின் அணுக் கதிரியக்கங்கள், இன்று விஞ்ஞான அறிவால் மாசுபட்டு, மனிதன் சிந்திக்கும் நிலையற்று, அவனின் சிந்தனை செய்யும் நிலைகள், கதிரியக்கச்சக்தியின் வெறியுணர்வு கொண்டு, தாக்கிடும் உணர்வாக மாறி வருகிறது.

மனிதனின் எண்ணத்திற்குள் இப்படி மாறினாலும், இன்றைய நிலைகள் கார்த்திகை நட்சத்திரத்தின் இருளை மாய்த்து ஒளியைப் பெற்றிடும் இந்த உணர்வின் தன்மை, அது விண்வெளியில் படராததால், மற்ற தாவர இனங்களுக்கும் இது கிடைக்காத நிலையாகிவிட்டது.

அது கிடைக்காததால், நஞ்சுகொண்ட உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து, நஞ்சின் தன்மையை அதிகமாக விளைய வைத்திடும் ஆற்றல் கொண்ட தாவர இனங்கள்தான், இங்கே ஓங்கி வளர்கின்றது.

இது நஞ்சு கொண்ட உணர்வாக மனிதனின் எண்ணங்களுக்குள் ஓடி, நஞ்சின் தன்மை ஓங்கி வளர்ந்து, சிந்தனையற்ற செயலாக ஓங்கி வளர்கின்றது.

காரணம், கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் இன்று அது பிரபஞ்சமாக மாறி, அதனின் கோள்களும், நமது சூரிய குடும்பத்தைப்போல முன் தோன்றிய கோள்கள் எல்லாம், நட்சத்திரங்களாக மாறி, அதன்பின் வந்த கோள்களனைத்தும் உருவாகி, தனித்து தன்னைத்தானே இயக்கிடும் நிலைகள் பெறுகின்றன.

நமக்குத் திருமணம் ஆனபின் குழந்தைகள் பிறப்பது போன்று, இன்று பருவம் அடைந்த கார்த்திகை நட்சத்திரம் மற்றதையெடுத்து, தமக்குள் உருவாகும் கருவின் பூமியின் தன்மை அது அடையும் பருவம் வரப்படும் போது, விண்வெளியின் ஆற்றல் மிக்க அந்த சக்தியை தனக்குள் எடுத்து அது பிரபஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகையினால், கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க அறிவின் நிலைகள், நமது பிரபஞ்சத்திற்கு கிடைக்காது போய்விட்டது.

இதனால்தான், நமது பிரபஞ்சத்திற்குள் மனிதனுடைய சிந்தனை, விஞ்ஞான அறிவில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் மனிதன் ஏனைய நிலைகள் கொண்டு மனித சிந்தனையோ, மனிதனின் தன்மையோ முழுமை பெறும் நிலை இல்லாது போய்விட்டது.

இந்த உடலில் பற்று கொண்ட மற்ற உயிரினங்கள் மிகவும் சிரமப்பட்டு ஒரு உடலை வளர்த்துக் கொண்டாலும், உதாரணமாக
பாம்பினங்கள் இரையைத்தேடி ஊர்ந்து சென்று, தன்னைக் காத்திடும்,
தன் உடலைக் காத்திடும் உணர்வின் சத்தை,
தன்னிடத்தில் பெறுவதைப் போன்று
இன்று மனித இனமும்
தன்னுடைய உடலைக்காத்திடும் உணர்வை மட்டுமே பெறுகின்றது.

ஆக, தனது உடலுக்குள் விளைந்த
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு,
தன் உணர்வை உயிருடன் ஒன்றிய ஒளியாக
மாற்ற முயற்சிக்கவே இல்லை
(பக்கம் 39-43)
ன்று மகரிஷிகள் தனது உணர்வின் தன்மையைக் காத்து, ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்று, அவர்கள் கண்டுணர்ந்த நிலையைத்தான் ‘’சிவன் ராத்திரி’’ என்று உணர்த்தினர்.

ஆக உணர்வின் அணுக்களின் தன்மை உடல் பெற்றாலும், உணர்வின் தன்மை கொண்டு, வலுகொண்ட உயிரினங்கள் வலுவற்றதைக் கொன்று, அதன் தசைகளை உணவாக உட்கொள்கின்றது.

அப்படி உட்கொண்டாலும், அதன் உடலில் விளைந்த உணர்வுகள் இழுத்து, கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கள் அனைத்தும் மூடி மறைத்தாலும், மறைத்துக் கொண்ட உணர்வுக்குள் எண்ணங்களாகி, அறிந்து கொள்ளும் நிலைகள் வருகின்றது.

மனித உடலைக்கொண்டு, நாம் சிந்தித்துச் செயல்படும் நிலையாக உருவாக்கிய நன்னாள்தான், சிவன் ராத்திரி.

யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்கின்ற பொழுது, உங்கள் எண்ணத்தின் செவிப்புலனால் ஈர்க்கப்படும் இந்த நிலையில் நீங்கள் சுவாசிக்கும் நிலைகள் சத்தாகின்றது.

நீங்கள் சுவாசித்தது சத்தானாலும்,
யாம் உபதேசிப்பது உங்களால்,
புரிந்து கொள்ள முடியாதவையாக இருப்பினும்,
யாம் உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறியும் பொழுது,
அதனின் உணர்வுகள், உங்கள் உடலுக்குள் ஊடுருவும் நிலையும், உடலுடன் இணையச் செய்யும் நிலையுமாக, இது உருவாகின்றது.

இவ்வாறு இணைத்திட்ட நிலைகள் கொண்டு, ‘’அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும்’’ என்று எண்ணும் பொழுது, இந்த உணர்வின் ஈர்ப்பான சக்தி உங்களுக்குள் நின்று, அருள் ஞானிகள் இந்த உடலின் தன்மை ஒளியாக மாற்றிய, உணர்வின் ஆற்றல் இங்கே மிதந்து கொண்டிருப்பதை, அதை நீங்கள் கவர்ந்து, மீண்டும் அதனின் இணைப்பாக உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.

சிவன் ராத்திரியன்று விழித்திருக்க வேண்டும் என்று, இரவு முழுவதும் நாம் கண் விழித்திருந்தாலும், அந்த இரவில், ‘’அவர் அப்படி இருக்கின்றார், இவர் இப்படி இருக்கின்றார்’’ என்று பிறரிடம் குறைகளைக் கண்டு, அதைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம்

இந்தக் குறைகளிலிருந்தெல்லாம், நாம் விடுபட வேண்டும்.

அப்படியென்றால், நாம் ஒவ்வொரு சரீரத்திலேயும் தம் சரீரத்தைக் காத்திடும் உணர்வைப் பெற்று, மனிதரா இன்று இந்த உடலைப் பெற்றிருக்கின்றோம்.
இந்த மனித சரீரத்தில் உள்ள, உயர்ந்த தன்மைகளை
காத்திடும், வளர்த்திடும் உணர்வா நாம் செயல்படும் பொழுது,
நம்மிடம் உள்ள குறைகள், தீமைகள்
நம்மைவிட்டு அகன்று ஓடுகின்றன.

இந்தச் சரீரத்தை அழியா சரீரமாக, செய்ய வேண்டுமென்றால்
அதையும், இந்தச் சரீரத்தில் தான் செய்ய முடியும்.
           
ஆகவே, சிவன்ராத்திரியாக மெய்ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்று, நம்மைக் காத்திடும், வளர்த்திடும் உணர்வாக, என்றும் நாம் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

அந்த அருள்ஞானிகளின் உணர்வை, நம் நல்ல குணத்துடன், சோர்வடைந்த உணர்வுடன் இணைத்து, அதை நாம் தியானிப்போம் என்றால் நம்மிடமிருக்கும் இருளை விலக்கி, பொருளை அறிந்து செயல்படும் உணர்வாக, அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடம் இயக்கம் பெறுகின்றன.

நம் உடலான சிவத்தின் இருளின்தான், நாம் இருக்கின்றோம். நமது உடலில் இருக்கும் எண்ணம்தான், நம்மிடத்தில் ஞானத்தின் நிலையாக, நாம் தெளிவு பெறும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அறிந்து, தெளிந்த நிலைபெற்ற அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தும் பொழுது, அந்த மகரிஷிகள் உயிருடன் ஒன்றி ஒளிச்சரீரம் பெற்றது போல, நமது உணர்வும் ஒளிபெறும் தகுதியைப் பெறுகின்றது.

மது குருநாதர் மெய்யுணர்வைக் கண்டறிந்தார்.
மெய்ஞானிகளின் உடலில் விளைந்த,
தீமைகளைப் போக்கி, மெய்யுணர்வை வளர்த்து, 
உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சென்ற,
அவர்களது நினைவின் அலைகளை
எமக்குள் பதியச்செய்தார்.
மனித வாழ்க்கையில் வரும் இருளை வெல்லச்செய்து, மெய் ணர்வின் தன்மையை எம்மிடத்தில் வளர்த்து, எம்மை மெய்ஞானியாக உருவாக்கினார்.

அந்த நிலையை நீங்களும் பெறவேண்டுமென்று, உங்கள் அனைவரையும் கூட்டமைப்பாக உருவாக்கி, அந்த மெய்ஞானிகளின் அருளுணர்வை உங்களிடத்தில் பெறச்செய்கின்றோம்.
ஆகவே, மெய்யுணர்வைப் பெறும் வகையாக,
மெய்ஞானிகள் காண்பித்த அருள்வழியைப் பின்பற்றிச் செல்லும்
உங்கள் அனைவருக்கும்
எல்லாம் வல்ல ஆற்றலாக
அந்த மெய்ஞானிகளின் அருளாற்றல் கிடைக்கப்பெற்று,
‘’என்றும் 16’’ என்ற ஒளிச்சரீரத்தை
இந்த சரீரத்திலேயே நீங்கள் பெற வேண்டுமென்று,
எமது அருளாசியை வழங்குகின்றோம்.