
மனிதனின் சுவாச நிலை
உடலுக்கு நம் கண்
ஆண்டென்னாவாக இருக்கிறது. எப்படி…?
ஒருவர் ஒன்றைச் சொல்லும்
பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப்
படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.
அதே சமயம் அவர் உடலில்
இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்திருக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள்
பதிவாகிறது.
அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?
1.உடலில் இருப்பது –
காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய
சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” - நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல்
அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.
காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது
நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து
ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது
போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான்
பதிவாக்குகின்றது…!
ஒரு மைக்கை வைத்து நாம்
பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப்
பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.
மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர்
வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு
செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.
உதாரணமாக நீங்கள் என்னைத்
திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே”
நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.
அப்பொழுது உங்கள் உடலில்
இருந்து எது வெளிப்படுகிறதோ… வெளிப்படும் அந்த
எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. என்
கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை
எனக்குள் படமாக்குகின்றது.
உங்கள் உடலிலிருந்து
வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது
அவரைப் பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம்
எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத்
திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.
இப்படிப் படம்
எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது.
அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில்
உள்ள எலும்புக்குள் பதிவாக்கி (டேப்பில் பதிவு செய்வது போல்)
விடுகிறது.
2.இப்படி
ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.
இதிலே கவனங்கள் எப்படி இருக்கிறதோ… ஒருவர் திட்டுகிறார் என்றால்
கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!”
என்றால் அதை மறக்க முடியாது.
ஆனால் சாதாரணமாக
சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு
இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத்
தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க
வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.
அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது
நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு
நாட்கள் கழித்து “என்னங்க…? நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.
ஆனால் இந்தப் பக்கம்
வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகப் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான
பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரமும்
வெறுப்பும் வருகிறது
இந்த இடத்திற்கு வா
பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின்
உணர்ச்சி வேகம் குப்..குப்.. என்று வரும்.
2.ஆனால் போக்கிரியாக
இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.
போக்கிரி இல்லாதபடி
நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு
தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “அவன் என்ன
செய்வான்…? பார்க்கலாம்…!” என்ற நினைவு
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து
கொண்டே இருக்கும்.
1.அவர்களை எண்ணும்
பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம்
எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்…
உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய
அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக்
காட்டிக் கொண்டே இருக்கும்...”
அதே உணர்வின் செயல்
உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி…
எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த
செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து
எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய
ஆரம்பிக்கும்.
நாம் எடுக்கக்கூடிய வார்த்தை நம் சிறுமூளை உயிரிலே பட்டு…
1.அந்தச் சுவாசத்தின்
வழி எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை
ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.
ஆனால் அதே சமயத்தில் நாம்
எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட
ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும்
பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.
எப்படி…?
வெயில் காலத்தில்
மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப்
புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.
அதைப் பற்றி நான் சொன்னாலும்… மாங்காயையே இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர்
உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?
மாங்காய் என்று
சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள்
உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.
மாங்காயைப் பார்க்கவில்லை… ஆனால் அந்தச் சுவையின் தன்மை கொண்டு
உமிழ் நீரைக் குவிக்கின்றது.
இதற்கு முன்னாடி உமிழ்
நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித்
தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே எரிச்சலான உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது
அர்த்தமாகிறதல்லவா…!
எரிச்சலான உணர்வு கொண்டு
பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த
எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை
ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள்
வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த
சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக
அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல்
சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது
ரேடியோ டிவி பெட்டிக்குள்
பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக்
காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.
இதே மாதிரி நம் உடலில்
ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலைவரிசையை இழுத்துப்
பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே
பேசும்…”
எண்ணும்போது அந்த அலைகளை
எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது…
செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின்
அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை
ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற
வைக்கின்றது.
அப்போது அதே உணர்வு தான்
நமக்குள் வேலை செய்யும்…!
ஆகவே… நாம் எண்ணக் கூடியதை எல்லாம் எலும்பிற்குள் அந்த மேக்னெட்டில்
பதிவு செய்து விடுகின்றது. மீண்டும் நினைத்தவுடன்…
1.அந்த எண்ணங்கள்
வீரியமடைந்து கண்ணின் நினைவுகளுக்கு வருகின்றது
2.காற்றில் இருப்பதை இழுக்கிறது… இழுத்தவுடனே
சுவாசத்திற்குள் கொண்டு வருகின்றது
3.சுவாசிக்கும் பொழுது
எதை எதை நாம் பதிவு செய்திருக்கின்றோமா
4.நம் உடலில்
இருக்கக்கூடிய செல்கள் மொத்தமாக இழுத்துப் பிரித்து ஆத்மாவாகக் கொண்டு வருகின்றது.
5.அதைத்தான்
நாம் சுவாசிக்கின்றோம்… அதுதான் நம்மை ஒவ்வொரு
நொடியிலும் இயக்குகின்றது.