ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2025

ஒளியின் சரீரத்தை நமக்குள் “விடாப்பிடியாக உருவாக்கச் செய்யும் சக்தி”

ஒளியின் சரீரத்தை நமக்குள் “விடாப்பிடியாக உருவாக்கச் செய்யும் சக்தி”


முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது இந்த மனித உடலை உருவாக்கிய சக்திகள் தான். இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியாகச் சேர்த்து
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது விண்ணுலகம் சென்ற அந்த மெய்ஞானிகள் நிலையை
2அவர்கள் கண்டுணர்ந்த அந்தச் சக்தியைத் தான் நாம் இன்று தியானத்திலே எடுப்பது.
 
தாவர இனச் சத்தில் விளைந்ததை நாம் புசிக்கின்றோம். அதனின் சத்தை ஆவியாக மாற்றிப் பாலாக எடுத்து இந்த உணர்வின் சத்தை வடிகட்டி ஒவ்வொரு நிலைகளிலும் பார்க்கின்றோம்.
 
பாலை வைத்து இறக்கி தாவர ச்த்தின் நிலைகள் அது ஒரு நிறமாக இருந்தாலும் அதை நீக்கிவிட்டு அதற்குள் வெள்ளையான ரசத்தை எடுத்து அதை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.
 
இதைப் போன்று தான் தாவர இனத்திலே விளைந்த சத்துகள் மனித உடலானாலும் இந்த உடலுக்குள் நின்று மெய்ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அந்த உணர்வின் தன்மையை
1.ரசத்தை எப்படி இறக்குகின்றார்களோ இதைப் போன்று மனித உடலில் இருந்து மெய் ஞானிகளின் அருள் வித்தின் நிலைகளைக் காட்டி
2.உடலில் இந்தத் தாவர இனச் சத்தின் தசைகளை நீக்கி அந்த தசைக்குள் விளைந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அன்று உருவாகியது சப்தரிஷி.
 
ஆறாவது அறிவு சரணபவா குகா நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் மறைந்திருந்த விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல சத்தினையும் நல்ல குணத்தினையும் நமக்குள் எண்ணமாகக் கொண்டு நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்று
1.அதனின் நிலைகள் நல்லதைச் செய்யும் நிலைகள் யாம் எழுப்பும்லியின் நிலை சப்தம்
2.உங்களுக்குள் சொல்லும் உணர்வுகள் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளில் அதை உருவாக்கச் செய்து
3.அந்த மகிழ்ச்சியைத் தோன்றச் செய்வது தான்… ஆக அது சப்தரிஷி…!
 
ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று அந்த ஒலியின் நாதத்தால் ஏழாவது அறிவைக் கொண்டு இயக்குவது தான் சப்தம் நாதமும்… ஏழாவது நிலையும் இரண்டற ஒருக்கிணைந்து சப்தரிஷிகள் என்பது.
 
மனித உடலில் மெய் ஒளியாகச் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷி என்பது. சப்தரிஷி மண்டலம் என்பது ஏழு அல்ல. எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு மனிதனிலிருந்து உருப்பெற்றது தான்.
 
மனித வாழ்க்கையில் எண்ணிலடங்காத குணங்கள் இருந்தாலும் ஏழாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் தெளிவாக உணர முடிகின்றது அதைச் செயல்படுத்த முடிகின்றது. அதற்குத்தான் அப்படிப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.
 
உணர்வினை ஒளியாக மாற்றிய தன்மையைத் தான் ரிஷியின் மகன் நாரதன் என்று சொல்வது. நாரதனோ அவன் ஒரு முனிவன். அவன் கலகப்பிரியன்.
 
மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை வென்று உணர்வின் சத்தை ஒளியாக மாற்றித் துருவம் சென்றடைந்து அதன் பின் அதிலிருந்து விளைந்து சப்தரிஷி மண்டலங்களாக உருபெற்றது.
1.ஒளியின் தன்மையாகப் பேரண்டத்தின் உண்மைகளை அறிந்து
2.தீயதை நீக்கி மெய் ஒளியைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெற்று
3.விண்ணிலே வரக்கூடிய விஷத்தின் தன்மையை அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் நுகர்ந்து அதை ஒடுக்கி ஒளியாக மாற்றினார்கள்.
 
வைரம் விஷத்தைத் தனக்குள் ஒடுக்கி ஒளியின் தன்மையாக என்றும் நிலையாகப் பிரகாசிக்கின்றது. இதைப்போல இந்த மனித உயிராத்மா ஒளியின் சரீரம் பெற்று விஷத்தை உள்ளடக்கிய பின் அந்த விஷமே ஒளியாக மாறுகின்றது.
 
அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகள் ஊடுருவி வரப்படும் பொழுது
1.அதை நம் ண்ணத்தால் நுகர்ந்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இந்தப் புவியிலிருந்த ஆசைகளைக்லகமாகக் கலக்கிவிட்டு அந்த மெய் ஞானிகள் பெற்றது போல நாமும் ஆற்ரலைப் பெற முடியும்.
 
அதாவது… நாம் பாலைக் கடையும் போது வெண்ணை திரண்டு வருகிறது. அதை உருக்கப்படும் பொழுது அதனுடைய சக்தி நெய்யாக வடிவது போல
1.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாம் நுகரப்படும் போது மனித வாழ்க்கையில் வந்த விஷமான பிடிப்புகள் அகன்று
2.அந்த விஷத்தின் தன்மையே சத்தான நிலைகள் வடித்து மெய் ஞானிகள் ஒளியாக ஆனது போல நாமும் பெற முடியும்.
 
ஆனால் நாரதன் கலகப் பிரியன்லகமோ நன்மையில் முடியும் அவன் ஒரு முனிவன்.
1.தான் பெற்ற ஒளியின் சரீரத்தை விடாப்பிடியாக அவன் நமக்குள்ளும் சிருஷ்டித்து விடுவான்து தான் முனி என்பது
2.அந்த உணர்வான சக்தியை நமக்குள் சேர்த்து அந்த வலுவான நிலைகளை உருவாக்கச் செய்வது தான் முனி என்பது.
 
ஆகவே மெய் ஞானிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் நம்மை அறியாயது வரும் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு அவன் ஒளிகளிலேயே நாமும் விண் செல்வது.