
சுழி முனை - எண்ணம் தோன்றும் இடம்
ஒரு மணத்தின் தன்மை அணுவிற்குள் சேர்க்கப்படும்
பொழுது சீதா என்ற சுவையானாலும் அந்த உணர்வின் தன்மை அது எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற
நிலையை நாம் கண்டுணர்வதற்கு அந்த ஞானிகள் சுழிமுனை என்று காட்டினார்கள்.
1.இந்த உயிர் தனக்குள் அதை (சீதா) எடுத்து
2.இந்த உணர்வின் தன்மையைத் தான் பிரித்து
3.அந்தச் சத்தின் உமிழ் நீராக உடலுக்குள் இணைத்து விட்டு உணர்வின் அலைகளை அதற்குள் இயக்கச் செய்கிறது.
இது தான் சுழிமுனை என்று சொல்வது. எதை நாம்
எண்ணுகின்றோமோ சுழி முனை அதை இயக்கும். தியானம் செய்கின்றோம்
என்கிற போது சுழி முனை வழியாக உணர்வுகளை
எடுக்கப்படும் பொழுது எண்ணங்கள் என்ன செய்கின்றது…?
எவ்வளவு தான் நல்லதை எண்ணினாலும் முடிவதில்லை. ஏன்…?
மற்றவர்களின் வெறுப்பான உணர்வுகளை உடலுக்குள் இருந்தால் இந்த உணர்வுகள் ஆங்கே
பாயும்.
உங்களை யாராவது திட்டி இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு பையனை
வேலைக்குச் சொல்லி இருந்தோம் நேரத்திலே அந்த வேலையை அவன்
செய்து முடிக்கவில்லை என்றால் அந்த உணர்வு அழுத்தமாக ஓங்கி வந்து விடும்.
1.அந்த அலைகள்
எல்லாம் முன்னாடி இருக்கும் அப்பொழுது
2.சுழி முனையை நீங்கள்
நினைத்துக் கட்டாயப்படுத்தி எண்ணினால் என்ன ஆகும்…?
3.ஒருநிலைப்படுத்த முடிவதில்லை…!
சுழி முனையில் நிலை
நிறுத்துவதற்காக என்ன செய்கின்றார்கள்…? “பிராணயாமம்… வாசியோகம்…” என்று
மூச்சை இப்படி இழுத்து இப்படி விட்டீர்கள் என்றால் சுழி முனையில் நிறுத்தலாம் என்கிறார்கள்.
அடுத்தாற்போல்… தொட்டுக் காண்பித்தல் என்றும் சொல்வார்கள் ஒருவருடைய எண்ணத்தை… மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறோம் என்று முதுகுத் தண்டிலே தட்டி எழுப்பி அவருடைய எண்ணத்தைச் செலுத்தப்படும்
பொழுது அந்த உடலிலிருந்து வரும் உணர்வுகளை நாம் சுவாசித்து
ஏதோ குறு…குறு… என்று ஏறுகின்றது. ஏதோ சக்தி கொடுக்கின்றார் என்ற நினைவு வரும்.
யாராக இருந்தாலும் தொட்டுக் கொடுத்துவிட்டு மூலாதாரத்தை நான் தட்டி எழுப்புகின்றேன் நுகர்ந்து பாருங்கள் என்று சொன்னால் அந்த எண்ணத்திற்கு வரும் பொழுது அவருடைய
எண்ணங்களை நுகரப்படும் பொழுது அவர் சொன்ன வழியிலேயே அது இயக்கும்.
1.மூலம் என்பது நமது
உயிர்…
2.ஆதாரம் என்பது நமது
ஆன்மா.
3.அதனால்தான் ஆதிமூலம்
என்று விநாயகருக்குப் பெயர் வைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் புழுவாக உடல் பெறும் பொழுது ஒரு செடியின் சத்தைத் தான்
முதலில் அது எடுத்தது.
அதாவது… சூரியனிலிருந்து
வெளிவந்த வெப்ப காந்தம் அந்தச்
செடியின் சத்தைக் கவர்ந்தது.
சூரியனிலிருந்து வந்த வெப்ப காந்தம் இந்தச் செடியின் சத்தினைக் கவர்ந்து சீதா லட்சுமி ஆக மாறி அது அந்தப் புழுவிற்குள் வரும் போது
சீதாராமனாக மாறுகின்றது.
1.புழுவாக உடல் பெற்ற நிலையில் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் சீதாராமனாக மாறுகின்றது… எண்ணங்கள்
தோன்றுகின்றது
2.அந்தச் சுவையின் சத்தாக அதிலிருந்து வெளிப்படும் மணம்
எண்ணமாக
3.அந்த எண்ணம்
உணர்ச்சிகளைத் தூண்டி அம்புகளாகப் பாய்ந்து இயக்கச் சக்தியாக மாறுகிறது… சீதாராமா…!
ஆகவே ராமஜென்ம பூமி எங்கே
உருவாகின்றது…? ஒருவர் என்னைத்
திட்டுகின்றார் என்கிற பொழுது அந்த உணர்வைச்
சுவாசிக்கின்றேன். அதைச் சுவாசித்தால் சுவை
சீதா.
அந்த உணர்வின் தன்மை
எனக்குள் வந்து அந்த உணர்வான சத்தை உடலுடன் சக்தியாகச் சேர்ந்து கொள்கின்றது.
அதிலிருந்து சொல்லாக வரும் பொழுது சீதாராமன் ஆகின்றது.
அந்தச் சொல்லின் நிலைகள் ராமன் அம்பை எய்கின்றான்.
1.ராமன் எங்கே
பிறக்கின்றான்…? ராமஜென்ம பூமி எது…?
2.நம் உடல் தான்.
சீதா லட்சுமி ஆக வந்து
உடலுக்குள் வரும் பொழுது சீதா ராமனாகப்
பிறக்கின்றான் ராமா சீதா என்று சொல்கின்றார்களா…? சீதாராமா என்று சொல்கின்றார்களா…?
சீதாராமா என்று வரிசைப்படுத்தித் தானே சொல்கின்றார்கள்.
நாம் அணுவின் தன்மையாக
உருப்பெற்றதிலிருந்து ஒவ்வொரு சரீரத்தையும் பெற்று வளர்ச்சியில்
மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதை உணர்த்துவதற்குத் தான் இந்த இயற்கையின் சக்தியைக் கண்டுணர்ந்த
ஞானிகள் விநாயகரை ஆதிமூலம் என்று காண்பிக்கின்றார்கள்.
1.முன் சேர்த்துக் கொண்ட
வினைகளுக்கு நாயகனாக இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம்
என்று
2.யானைத் தலையை மனித உடலில்
இணைத்து “விநாயகா” என்று
மனித உடலைக் காட்டுகின்றார்கள்.