ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 4, 2025

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்


செடி கொடிகள் வாடிவிட்டால் அதற்குத் தக்க உரங்களை இடும் பொழுது அது வலுவாகி அது தன் இனத்தின் சத்தைச் செழிப்பாக உருவாக்குகின்றது.
 
இதைப் போல
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உரமாக அறிவின் தெளிவாக இணைத்து விட்டால்
2.மனித வாழ்க்கையில் தீமையை வென்றிடும் உணர்வின் சத்தாக அது விளைந்து அதன் வித்தாக நமக்குள் உருவாகி
3.அந்த அருள் ஞானிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ்கின்றார்களோ அதைப் போல
4.அவர்கள் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் சென்று பேரானந்தப் பெரு நிலை என்று அழியா ஒளிச் சரீரம் பெற்று நாம் வாழ முடியும்.
5.”அவன் எந்த வழியில் சென்றானோ அவ்வழியில் நாம் செல்வதற்குத் தான்
6.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னார்கள்.
 
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கும் அந்தத் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் தன்னை அறிந்து விண்ணுலகை அறிந்து நம் பூமி நுகரும் அந்தத் துருவப் பகுதியிலே அமைந்து துருவப் பகுதியிலிருந்து ஆற்றல்களை நுகர்ந்தான்.
 
நமது பூமி பல தாவர இனங்களாக அதனின் சத்தை மாற்றி உயிரணுக்கள் அதை நுகர்ந்து அதில் வரக்கூடிய எண்ணங்கள் கொண்டு பல கோடிச் சரீரங்கள் ஆகி மனிதனாக நம்மை உருவாக்கியது உயிர் என்ற நிலையில் தன்னை அறிந்தவன் அகஸ்தியன்.
 
1.வட துருவத்தில் உருவாகும் உணர்வினை டைமறித்துத் தனக்குள் அதை நுகர்ந்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றான்.
 
நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக அமைக்கின்றது. பின் சூரியனின் சுழற்சி வட்டத்தில் அது சுழலப்படும் போது தூசிகளாக மாறுகின்றது.
 
தூசியின் தன்மைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது நம் பூமியின் அருகில் வரப்படும் பொழுது துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து சூரியனின் வெப்பக் கதிர்களையும் கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் ரவச் செய்கின்றது.
 
விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ளிக்கதிர்களை
1.துருவப் பகுதி வழியாக நுழைவதை… இந்த வாயில் வழியாக அதை அகஸ்தியன் கவர்ந்து தனக்குள் சிருஷ்டித்து
2.உடலில் உள்ள தீ அணுக்கள் அனைத்தையும் கருக்கி விட்டு ஒளிச் சுடராக மாறும் உணர்வின் ஒளியின் கூறாக இந்த உடலிலே விளைய வைத்து
3.எந்தத் துருவத்தின் வழி தன் எண்ணத்தால் எடுத்தானோ அந்த உணர்வின் வலிமை கொண்டு
4.உடலை விட்டுச் சென்ற பின் ன்றும் துருவ நட்சத்திரமாக துருவ மகரிஷி அமர்ந்துள்ளான்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தியினைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அந்தச் சக்தியினை நம் பூமி தனக்குள் கவர்ந்து வந்து கொண்டுள்ளது.
 
இதைத் தான் நாம் கிழக்கே பார்த்து வணங்கும்படி செய்து மேற்கே பார்க்க விநாயகரை வைத்து நாம் வணங்கும் முறைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.
 
ஏனென்றால் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஏற்றால் அதன் வழியில் எந்த நாட்டவராக இருந்தாலும் ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று தான் கருத்தினை அக்காலங்களில் இப்படிப் பதிவு செய்துள்ளார்கள்.