ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2025

போகன் உருவாக்கிய "மனோசிலை… காயகல்பம்…!"

போகன் உருவாக்கிய "மனோசிலை… காயகல்பம்…!"


மனித உடலில் எடுத்த உணர்வின் ஒலிகளைப் பாய்ச்சி அந்த வலுவைக் கூட்டி மந்திர ஒலிகளால் பதிவான பின் அந்த மனிதன் மடிந்து விட்டால் அந்த உணர்வின் ஒலிகள் கொண்டு பல நிலைகளை அறியலாம்.
 
அதாவது இப்பொழுது நாம் பேசும் உணர்வுகளைப் போல ஒவ்வொரு உலோகத்திற்கும் தனித்த ஒலியின் நாதங்கள் உண்டு. அதனைத் தனக்குள் எடுத்து அந்த நாதங்களைப் பாய்ச்சி அந்த உணர்வுகளைத் தனக்குள் எந்தெந்த நிலை என்று ஒலியைப் பாய்ச்சி விட்டால்
1.எந்த மனிதன் இறந்தானோ அதனைத் திருப்பி எடுத்து நினைவு கொண்டு
2.பூமிக்கடியில் உள்ள பொருள்களை அறியும் நிலை கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3அங்கே அடியில் உள்ள உலோகங்களைக் காண முடிகின்றது.
 
ஏனென்றால் பல கோடி உணர்வின் தன்மை பெற்றவன் மனிதன். இதற்குள் இணை சேர்க்கப்பட்டு உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கொடுக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து கிளம்பும் அதிர்வுகளைப் பாய்ச்சியபின் தூரத்தின் தன்மை தனக்குள் கணக்கிடப்பட்டு
2.இந்த இடத்தில் நீர் உள்ளது இந்த இடத்தில் உலோகங்கள் உள்ளது என்று
3.மனிதனின் உணர்வின் துணை கொண்டு அறிந்தார்கள் அக்காலத்தில்.
 
அதன் வழி கொண்டு தான் மனிதனுக்குள் பெற்ற வலிமையின் உணர்வுகள் அதைக் கண்டறியப்படும் பொழுது உலோகக் காலங்களாக மாறுகின்றதுமந்திரக் காலங்கள்.
 
உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது பூமிக்குள் மறைந்த எதிர்நிலை கொண்ட மண்ணில் விளைந்த மனோசிலை கந்தகம் மற்ற பொருள்களைக் காணுகின்றார்கள்.
 
அதாவதுஅது மண்ணில் விளைந்த உப்புச்சத்து. சூரியனுடைய காந்த சக்தி மண்ணிலே அமிலங்களாகக் கலக்கப்படும் பொழுது ஒரு வெட்கையின் தன்மை வரும்.
1.அதை மீண்டும் வேக வைத்து அந்த உப்பை உறையச் செய்து கந்தகத்துடன் அளவுகோல் கொண்டு இணைக்கச் செய்து
2.மோதும் பொழுது வெடிக்கும் தன்மையாக அதற்குண்டான நிலைகளைச் (வெடி பொருள்களை) சேர்க்கின்றான் அன்று போகன்.
3.மனோதத்துவ ரீதியில் உணர்வின் தன்மையை நீக்குவதற்கு மனோசிலை என்று கொண்டு வந்தான் போகன்
 
வைத்திய ரீதியிலே மருந்துகளை உலோக நிலைகளை எடுத்து விஞ்ஞானிகள் சேர்க்கை சேர்ப்பது போன்று மெய்ஞானியான போகர் பல நிலைகளைத் தனக்குள் உருவாக்கி மனோசிலை என்று உருவாக்குகின்றார்.
1.அதை மனித உணர்வின் எரிபொருளுடன் கலக்கப்படும் பொழுது அது உடலுக்குள் ஊடுருவி வெடிக்கும் தன்மையாக வந்து
2.அந்த அதிர்வால் தீமை செய்யும் அணுக்களை மடியச் செய்தான் அன்று.
 
பாறைகளைப் பிளக்க வேண்டும் என்றால் அதே மனோசிலை வைத்து எதிர் நிலையான நெருப்புகளை உருவாக்கப்படும் பொழுது அந்தப் பாறைகள் தகர்த்து எறியப்படுகின்றது.
 
அதே போல் அந்த மெய்ஞானியான அவன் மனோசிலை கந்தகம் போன்ற பல பொருள்களை அளவுகோல்படி இடப்பட்டு
1.மருந்தின் தன்மையாகக் கொண்டு வரப்படும் பொழுது அழியாத் தன்மையும்
2.வெடித்த பொருள் போகத் தொக்கி நிற்பது தீமையான அணுக்களுக்கு எதிர்நிலையாகிக் கொன்று விடுகின்றது உணர்வின் அதிர்வுகள்.
 
அப்போது நமக்குள் உணரலாம்.
 
ஆகவே இதைக் கண்டுணர்ந்தவன் போகன். இதைப் போல எத்தனையோ வகைகளில் ஒவ்வொரு நிலைகளைப் பெற்றவன் அவன்.
 
போகனைக் கண்டவுடன் குருநாதர் திருடன் திருடன்…” என்று சொல்வார். ஏன் சாமி…? அவனைத் திருடன் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்பேன்.
 
1.அவன் எல்லாவற்றையும் திருடும் சக்தி பெற்றவன்.
2.தாவர இனத்திலிருந்து வரக்கூடிய சத்தை நுகர்வான் அதைத் திருடுவான்.
3.அதைத் தனக்குள் எடுத்து தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவான்.
4.இப்படி அவன் எல்லாச் சக்தியையும் திருடுகின்றானப்பா…! என்பார் குருநாதர்.
 
ஒரு தாவர இனச் சத்து என்று இருந்தால் அதை நுகர்வான். அதைத் தன் உடலுடன் போகிக்கின்றான். அதனால் தான் போகர் என்று சொல்வது. அதை மோகிக்கின்றான் போகிக்கின்றான்…” ஒரு பொருளின் சத்தை அறிய வேண்டும் என்று மோகம் கொள்கிறான் அந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இரண்டற இணைத்துப் போகிக்கின்றான்.
 
அதனால் தான் போகர்…” என்று அந்தக் காரணப் பெயருக்குண்டான விளக்கத்தைக் குருநாதர் சொல்கிறார்.
 
கரு உருவாக்கப்படும் பொழுது இதனின் உணர்வின் தன்மை உதிரங்கள் நீக்குவதுண்டு. கரு உருவாக்கும் இதற்குத் தடையாக இருக்கும் உணர்வினை நீக்கப்படும் பொழுது கழிவின் தன்மை வருகின்றது.
 
அதனுடைய கருவின் தன்மை உருவாகப்படும் போது இந்த உணர்வின் அணுக்கள் ஹார்மோன் அதிகமாக இருக்கும் பெண்களின் உணர்வுகள் இது விந்தானாலும் அதனுடைய நிலைகள் மனோதத்துவப் பிரகாரம் பெண்களின் உணர்வுகளை இதனுடன் சேர்த்து அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
 
அது எவ்வாறு உருவாக்குகிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அதைச் சொன்னாண்.
 
கருக்களின் உருக்களில் சீனாவின் பக்கம் நெருங்கப்படும் பொழுது அங்கிருக்கும் சீதோஷ்ண நிலைகளால் அணுக்களின் கருக்கள் மனிதனுக்குள் ஏராளமா உருவாகின்றது.
 
இதைக் கண்டுணர்ந்து
1.அந்த அணுக்களின் மோக உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அந்த எண்ணங்களை உருவாக்கும் பொழுது தான் அபின்களைக் கொடுக்கின்றான்.
2.அதைக் கொடுத்துத் தன் நிலையை மறக்கச் செய்து மோகத்தை உருவாக்கப்படும் பொழுது
3.அதனால் ஈர்க்கும் அணுக்களின் தன்மையைத் தாவர இனங்களை அதில் இணையச் செய்கின்றான்.
 
அவன் அன்று செய்தது.
 
சாதாரண அணுக்கள் வந்தது என்றால் மனிதனுக்குள் எடுத்து அது புழுக்களாக எப்படி உருவாகின்றதோ இதைப் போல பல அணுக்களின் தன்மை கொண்டு ஒவ்வொரு குணங்கள் கொண்ட நிலையும் அதற்குத் தக்க பச்சிலைகளை விரிக்கின்றான்.
 
இந்த மோகம் கொண்டு உணர்வின் தன்மை கவரப்படும்போது அதன் உணர்ச்சிக்குத் தக்க பச்சிலைகளில் அது ஒட்டுகின்றது. அந்தப் பச்சிலைகளில் ஒட்டும் பொழுது தான் இந்த உணர்வின் தன்மை ஜீவன் பெறும் தன்மையே வருகின்றது.
1.ஜீவன் வரப்படும் பொழுது தான் நாத விந்துகள் என்று கணக்கிடப்பட்டு
2.அந்த உணர்வினைத் தனக்குள் எடுத்துக் காயகல்பமாக அவன் மாற்றுகின்றான்.
 
அவன் சொன்ன முறைகள் வேறு. அதற்குப் பின் வந்தவர்கள் கற்றுணர்ந்த கவியின் புலமைகள் வேறு. ஒருவன் கற்றுணர்ந்த நிலையில் கற்பனையில் தான் மற்ற நிலைகளைச் செய்தார்களே தவிர அந்தப் போகன் அன்று சொன்ன நிலைகளை இவர்கள் செய்யவில்லை.
 
ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு எம்மைத் தெளிவாக்கினார்.
 
எதனையும் ஊடுருவித் திருடும் பழக்கம் பெற்றவன் போகன்….! இச்சையின் நிலைகள் கொண்டு ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை எப்படித் திருடுகின்றோமோ இதைப் போலத் தான் போகனும் எதனையும் கண்டுணரப்படும் பொழுது மோகம் கொள்கின்றான்.
 
அந்த உணர்வின் தன்மை கருவின் தன்மை தனக்குள் திருடுகின்றான்.
1.உலகெங்கிலும் பறக்கும் தன்மை கொண்ட அணுக்களைத் தனக்குள் சேமிக்கின்றான்.
2.ஒரு நொடிக்குள் இயக்கப்படும் போது கவன உணர்வின் அணுக்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டபின் பறந்து செல்கிறான்…”
 
மந்திரக்கோலை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் தன்மை இணைத்துக் கொண்ட பின் கரையான் மந்திரம் என்று செயல்படுத்துவார்கள்.
 
கரையான் தன் மலத்தை இட்டபின் இயற்கையில் விளைந்த மரத்தின் சத்தை ஆவியாக மாற்றி உணவாக எடுத்துக் கொள்கின்றது. இயற்கையில் \மண்ணில் விளைந்த மரத்தை மீண்டும் மண்ணாக மாற்றுகின்றது. நம்மால் அவ்வாறு ஒரு மரத்தைச் சீக்கிரம் கரைத்து மண்ணாக மாற்ற முடியுமா…?
 
இதைப் போல உயிரணு அதற்குள் சேர்ந்த அமிலங்கள் இந்த மரத்தைத் துரித நிலை கொண்டு கரைகின்றது.
 
அதில் விளைந்த உயிரணுவையும் தன்னுடன் இணைத்து ஒன்று எளிதில் கரையக்கூடியதும் மற்றொன்றை உருவாக்கும் நிலைகள் பெற்று இவர்கள் உருவாக்கும் நிலைகள்மாந்திரீகமாக மாற்றுகின்றார்கள்.
 
உணர்வின் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் இணைக்கச் செய்து அந்த அணுவின் தன்மை உருவாக்கப்பட்டு மீண்டும் அதே ஒலிகள் வரப்படும் பொழுது அது கரைக்கப்படும்.
 
கரையான் மந்திரம் என்பது இதுதான். மனிதன் சில நிலைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றான் என்று குருநாதர் காட்டுகின்றார்.
 
ஆனால் போகன் கவனக் குளுவின் நிலைகள் கொண்டு எதனதனை உருவாக்கப்பட்டு எந்த எல்லையில் உருவாக்கப்பட்டதோ அதை எடுத்து உணர்வின் ஒலி அலைகள் பாய்வதைத் தனக்குள் இணைத்து நினைவின் ஆற்றலைக் கொண்டு ஜீவணுக்களை உருவாக்கப்படும் பொழுது பறவையின் உணர்வின் தன்மையைத் தனக்குள் கவர்கின்றான்.
1.அந்த உணர்வு வரப்படும் பொழுது எதனின் எண்ணங்களை எடுக்கின்றானோ உடல் எடையற்றதாக மாறுகின்றது.
2.குறித்த இடங்களுக்குச் அந்த எல்லையைச் சென்றடைகின்றான்.
 
அவன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட சக்திகள்
1.ஒவ்வொரு இடங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை எப்படி வளர்க்க வேண்டும்…?
2.எதனைப் பெருக்க வேண்டும்…? என்று 5000 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தியவன் போகன்.
 
இதைப்போல் ஒவ்வொரு ஞானிகளும் பெற்ற சக்திகளைச் சுட்டிக் காட்டினார் குருநாதர்.