
உலகம் உருவாகும் விதமும்… ஒளியான உலகை உருவாக்கும் விதமும்…!
சந்தர்ப்பத்தில் மிகவும் வேதனையான
உணர்வு நமக்குள் வருகின்றது. அப்பொழுது எதை
நினைக்கின்றோம்…? அதை நிவர்த்திக்க…
1.எத்தனை தெய்வங்களை நினைத்தோமோ… எத்தனை கடவுள்களைப் பற்றிச் சொன்னார்களோ…
2.அங்கே தான் போய்ப்
பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
வேதனையான உணர்வுகள் வந்த
பின் உடலுக்குள் என்ன நடக்கின்றது…? தன்னைக்
காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சிகள் மேலோங்குகின்றது. அந்தக்
காப்பாற்றும் உணர்ச்சி தூண்டப்படும் பொழுது உயிருக்குத் தான் தெரிய வருகின்றது… அங்கே தான் அறிவாகின்றது.
உடலுக்குள் சென்றபின்
பிரம்மமாக உருவாகின்றது. அப்பொழுது சிவன் என்ன சொல்கின்றான்…! நான் என்ன செய்வேன்…? விஷ்ணு வரம் கொடுத்து
விட்டான்… ஆகவே விஷ்ணுவிடம் கேட்போம் என்று அழைத்துச்
செல்கின்றார்.
அதாவது இந்த உடலின்
உணர்ச்சிகள் எல்லாம் “உயிரிடமே எண்ணும் எண்ணங்களை இயக்குகின்றது” என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
உயிரான விஷ்ணுவே… எனக்கு வரம் தான் கொடுக்கத் தெரியும்…!
என் மகனான பிரம்மா “அதனால் உருவான இந்த அணுக்கள் அவனுக்குத்
தான் அது தெரியும்… எனவே பிரம்மனிடம் செல்வோம்…” என்று அழைத்துச் செல்கின்றார்.
ஆனால் பிரம்மனோ என் தந்தை
சொல் தட்டாது நான் இதை இயக்குகின்றேன். அதன்படி உருவாக்கவில்லை
என்றால் உலகம் உருவாகாது. விஷ்ணு வரம் கொடுக்கவில்லை என்றால்
உலகத்தில் உருவாகும் தன்மை எதுவும் இருக்காது.
உருவாகும் உணர்வுகள் அது
அணுவானால் உடலான சிவன் அரவணைக்கவில்லை என்றால் ஒரு உருவின் தன்மை வராது. மும்மலம் என்ற நிலையில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.
எல்லோரும் சேர்ந்து
இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வேதனையிலிருந்து
நிவர்த்திக்க கூடிய வழி எவருக்கும் தெரியவில்லை.
1.விஷ்ணு வரம் கொடுத்து
விடுகின்றான்
2.உள்ளே சென்ற பின்
பிரம்மன் அணுவாக உருவாக்கி விடுகின்றான்.
3.அணுவின் மலம் உடலாகின்றது
சிவன் அரவணைத்துக் கொள்கின்றான் என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
இப்பொழுது என்ன செய்வது…? என்று உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் எங்களைக்
காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…!
என்று உணர்வின் ஒலியை எழுப்புகின்றார்கள்.
உடலின் வழி உயிருக்கும்
உயிரின் தன்மை பிரம்மனுக்கும் எட்டப்படும் பொழுது இதுவெல்லாம் யாருக்குத் தெரியும்…? யாரிடம் கேட்டால் வேதனையை நீக்குவதற்குண்டான வழி கிடைக்கும்…? என்று விஷ்ணுவும் பிரம்மனும் சிவனும் கூட்டுச் சேர்ந்து ஆலோசனை
செய்கின்றார்கள்.
கண்ணனுக்குத் தான் இது எல்லாமே
தெரியும்…
1.கண்ணுக்குத் தான்
எல்லாம் தெரியும்…!
2.கண்ணால் பார்த்து
அதன் வழி தான் உணர்வின் தன்மை பதிவானது.
3.ஆகையினால் அவனிடம்
போவோமா…? என்று கேட்கின்றார்கள்.
கண்ணனிடம் சென்று
எல்லோரும் முறையிடுகின்றார்கள்.
அப்பொழுது கண்ணன்
கேட்கின்றான். விஷ்ணு நீ வரம் கொடுக்கவில்லை என்றால் இந்தத்
தொல்லை வராது அல்லவா. அது எப்படி…?
நான் வரம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் உருவாகாதே என்று விஷ்ணு சொல்கிறான்.
பிரம்மனிடம் கேட்கின்றான்… நீ உருவாக்காமல் விட்டுவிடலாம் அல்லவா என்று. என் தந்தை சொல்படி நான் உருவாக்கவில்லை என்றால் உலகம் எதுவும் உருவாகாது
என்று பிரம்மன் சொல்கிறான்.
கண்ணன் சிவனிடம்
கேட்கின்றான். வேதனையை உடலுக்குள் வராதபடி… அரவணைக்காதபடி நீ விட்டு விட்டால் தொல்லை வராதல்லவா. உடலுடன் அரவணைக்கும் போது தானே தொல்லை வருகின்றது தெளிவாகக் கேட்கின்றான்.
வருவோரை நான்
அரவணைக்கத்தான் தெரியும் அதுதான் என்னுடைய வேலை என்று சிவன் சொல்கிறான். இப்படி மூன்று பேரும் மூன்று வேலைகளை
வெளிப்படுத்துகின்றார்கள்.
வேதனையிலிருந்து விடுபட ஏதாவது
வழி வேண்டும்…? என்று எல்லோரும் கண்ணனிடம்
கேட்கின்றார்கள்.
1.அதாவது கண்ணிலே இந்த
எண்ணங்கள் வருகின்றது… சிறிது நேரம் யோசிப்போம் என்று கண்ணன்
சொல்கின்றான்.
2.சிறிது நேரம் வானை
நோக்கிப் பார்க்கின்றான். யார்…? இந்தக்
கண்கள்.
3.அப்படிப் பார்க்கும்போது
“அதோ வருகின்றான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் அவனிடம் கேட்போம் என்று சொல்கிறான்
ரிஷி என்றால் அகஸ்தியன்
துருவனாகி துருவ மகரிஷியாகி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெற்றது துருவ
நட்சத்திரம். அது தான் ரிஷி.
ஏனென்றால் எல்லாவற்றையும்
சிருஷ்டித்துக் கொண்டது உயிர்தான்.
1.ஆறாவது அறிவால் தீமைகளை
நீக்கிடும் உணர்வு கொண்டு ஒளியாகி ஒளியின் சரீரம் பெற்றது…
ஏழாவது நிலை பெற்றது சப்தரிஷி.
2.சப்தரிஷி என்றால் உணர்வின்
நாதங்களால் இயக்கப்பட்டு
3.அந்த நாதத்தின்
இயக்கமாகத் தீமைகள் தனக்குள் வராதபடி இயக்கும் சக்தி பெற்றது என்று தெளிவாகக்
கூறுகின்றார்கள்.
நம்முடைய காவியத்
தொகுப்புகளில் தவறில்லை.
வேதனைப்படும் உணர்வைச் சூரியன்… அந்த நாராயணன் வெப்பம் காந்தம் விஷம் என்று இயக்க அணுக்களை
அனுப்பி அதைக் கவர்ந்து தனக்குள் எடுத்து இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டே
இருக்கின்றான்.
வேதனைப்படும் உணர்வினை
எடுக்கும் பொழுது அந்த வேதனையின் தொடர்கள் நமக்குள் வருகின்றது. ஆனாலும்…
1.அந்த வேதனையை நீக்கி
உணர்வினை ஒளியாக மாற்றியவன் துருவ நட்சத்திரம்.
2.அதிலிருந்து ஒளி
அலைகள் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.
3.வெப்பம் காந்தம்
விஷம் என்ற நிலையில் அதைக் கவர்ந்து கொண்டால் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின்
அறிவாக இயக்கும் இயக்க அணுவாக அது மாறுகின்றது.
இதையும் தெளிவாக்குகின்றது
நமது சாஸ்திரங்கள்.
அதோ வருகின்றான் நாரதன் என்று
கண்ணன் சொன்னபின் மற்ற எல்லோரும்…
1.ஐயோ அவன் கலகப்
பிரியன் ஆயிற்றே…! பல தொல்லைகள் கொடுப்பானே…!
2.அவன் பரிசீலனைக்கெல்லாம்
நாங்கள் தப்ப வேண்டுமே…! என்ன செய்வது…? என்று இந்த மூன்று பேரும் சொல்கின்றார்கள்.
“கலகம் நன்மையில் தானே
முடிகின்றது” என்று கண்ணன் சொல்கின்றான்.
ஓருவன் வேதனைப்படுகின்றான்
என்றால் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நாமும்
வேதனைப்படுகின்றோம்.
வேதனை உணர்வுகள் நமக்குள்
போன உடனே உயிரிலே படும் போது குருக்ஷேத்திரப் போராக மாறுகின்றது.
அதாவது உயிரிலே படும்
பொழுது விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் சென்ற பின் அது அணுவாகப் பிரம்மம்
ஆகி விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை சிவமாகி விடுகின்றது.
அவன் எப்படி
வேதனைப்பட்டானோ அந்த உணர்வு நம் உடலாக மாறும் பொழுது
1.வேதனை எப்படி
இயக்குகின்றது…? என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது
சாஸ்திரங்கள்.
2.இது எல்லாம்
ஞானிகளால் நமக்குக் கொடுக்கப்பட்டவை தான். இதற்கு மேல் என்ன
விளக்கம் வேண்டும்…?
கண்களால் கவர்ந்து கொண்ட
உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று கண்ணனிடத்தில் கேட்ட பின்
சொல்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.கண்களால் தான்
அறிந்து தப்பும் உணர்வுகளைக் கொடுத்து தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியது
2.அதனால் தான் கண்கள்
அதோ வருகின்றான் நாரதன் என்று சுட்டிக் காட்டுகின்றது.
தியானத்தில் நாம் என்ன
செய்கின்றோம்…?
சூரியன் காந்த சக்தி கவர்ந்து
வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை “நமது குரு காட்டிய வழியில் அந்தச் சக்தியைப் பெற வேண்டும்” என்று கண்களால் ஏங்கப்படும்
பொழுது அந்த உணர்வு இங்கே பதிவாகின்றது.
துருவ நட்சத்திரத்தின்
சக்தியை நுகர்ந்து நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அந்த வேதனையை மாற்றி அமைக்க
முடிகின்றது.
வேதனைப்பட்டவனையோ நோய்வாய்ப்பட்டவனையோ
பார்த்தால் நாம் என்ன சொல்கின்றோம்…? நல்ல
மனிதன் “இப்படி ஆகிவிட்டானே வேதனைப்படுகின்றானே…” என்று சொல்கின்றோம்.
அதே சமயத்தில் ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகிறான்
என்றால் “எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் பாவி…” என்று அவன் மீது விடாப்பிடியாக இருப்போம்.
நல்ல மனிதன்
கஷ்டப்படுகின்றான் என்று
1.அந்த வேதனையைத் தான் சொல்ல
முடிகின்றதே தவிர
2.அதை மாற்றியமைக்கும்
உணர்வு நமக்குள் வருவதில்லை.
அதை மாற்றுவதற்குத் தான்
இந்தத் தத்துவத்தைச் சொல்வது. “அதோ வருகின்றான் நாரதன்…” என்று சாஸ்திரங்கள் நமக்கு
வழிகாட்டுகின்றது.
ஆதன் வழிப்படி துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் அங்கே இணைத்து
விட்டால் தீமை என்ற உணர்வுகள் உள்ளே போகாது அது தடுத்து விடுகின்றது. தடுத்தபின் வேதனை உணர்வுகள் நிறுத்தப்படுகின்றது.
துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை உடல் முழுவதும் செலுத்தப்படும் பொழுது எல்லா அணுக்களுக்கும் அதை இணைக்கப்படும்
பொழுது நாரதன்…! தீமை உள்ளே புகாதபடி எல்லா அணுக்களும் வலுவாகின்றது.
சிறிது நேரம் இவ்வாறு
எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது “உடலுக்குள்
வேதனையை ஈர்க்கும் சக்தி அங்கே குறைகின்றது…” அப்பொழுது
நமக்கு முன் இருக்கும் அந்த தீமை “அனாதையாகின்றது…”
அனாதையாக இருப்பதைச் சூரியனுடைய
காந்த சக்தி அது தன் ஈர்ப்பால் கவர்ந்து இழுத்துச் சென்று விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை
அடைகின்றது
2.ஆன்மா நலமாகும்
பொழுது உடலும் நலமாகின்றது
3.உயிரான்மாவும்
புனிதம் (ஓளி நிலை) பெறுகின்றது.