
ஆதியிலே அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றியது எமது குருநாதர் தான்…!
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய
குருதேவர் எனக்கு உபதேசித்ததை உங்களுக்கும்
உபதேசிக்கின்றேன்.
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டா… எமது குருநாதர் - ஆதியிலே “அகஸ்திய
மாமகரிஷியாகத் தோன்றிய
அவர்…”
2.தனக்குள் கற்றுணர்ந்த
நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலை
3.துருவப் பகுதியின் ஆற்றலை நுகர்ந்து
உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்
அவர் எவ்வாறெல்லாம் சக்தி பெற்றார்…? என்ற நிலையை எனக்கு உபதேசித்தார்… உபதேசித்தது
மட்டுமல்ல…!
1.அந்த அகஸ்திய
மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க
சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற
அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.
இன்று நாம் கதைகளில்
படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல… அன்று பல இலட்சம்
ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர் அவர்.
ஒன்றுமறியாத
காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற
ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டி
2.அந்த உண்மைகளை
எல்லாம் அறியும்படி செய்தார்.
அன்று அகஸ்தியர் பெற்ற
அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு
வருகின்றேன்.
1.27 நட்சத்திரங்களின்
சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி
மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி
செய்கின்றேன்.
3.இதை அலட்சியமாக எண்ண வேண்டாம்.
27 நட்சத்திரம் என்பது
இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்”
நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத்
தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி
அனுப்புகின்றது.
எந்தெந்த நட்சத்திரம்
அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன்
உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.
அதனின்று உமிழ்த்தி வெளி
வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப்
பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச்
திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.
அதனின்று இந்தப்
பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண்
உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை
உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று
மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால்
(முகப்பில் உள்ளது) கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல்
பெறுகின்றான்.
தன் எண்ணத்தின் முகப்பு என்றால்… உதாரணமாக கோபம் என்றால்
அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அணுமதிக்கின்றது.
அதே போன்று இந்த
எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த
எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்)
மாறுகின்றது.
எண்ணத்தின் உணர்வலைகள்
தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும்
பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.
எடுத்துக் கொண்ட உணர்வின்
சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு
மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின்
“மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை
ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக
இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அந்தச் சப்தரிஷி
மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எண்ணத்தால் இயக்கி… ஆற்றல்மிக்க அந்த
மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து… 27
நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த
சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைக்கச் செய்வதே
தியானத்தின் முக்கியப் பொருள்.
என்ன…? பெரியதாக 27 நட்சத்திரங்கள்
சக்தியைப் பெறச் சொல்கிறார்…? என்று எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் 27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் எனக்குக்
கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக்
கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை
எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின்
சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின்
சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்ற
எண்ணத்தைப் பரப்பி
5.அந்த உணர்வின்
நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள்
உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில்
விளைந்ததை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஞானிகள் மனித வாழ்க்கையில் வந்த
இருளை நீக்கிப் பெற்ற ஆற்றலையும்
9.ஒளிச் சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.
குருநாதர் உபதேசித்த அந்த அருள்
வழிப்படி…
1.எதனை எதனின் அளவுகோல்
எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க
வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி
முறைப்படி உங்களுக்கு உபதேசித்து வருகின்றேன்.
4.உங்களை அறியாது வரும்
தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
எப்படிப் பிறர் செய்யும் தீங்கான
உணர்வுகள் தீய வினைகளாகி உடலில் நோயாக வருகின்றதோ இதைப் போல் “அந்த நோயை மாற்றவல்ல”
அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “உங்களை அறியாமலே அந்த நல்வினைகளை
ஓங்கச் செய்கின்றேன்…”
அதை நினைவு கொண்டு நீங்கள் எடுக்கும்
போது இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வாக உங்களுக்குள் விளைந்து… பொருள்
கண்டுணர்ந்த அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள்
நீங்கள் சென்று… பெருவீடு பெரு நிலை என்ற நிலையாக “ஒளிச் சரீரம் நீங்கள் பெற வேண்டும்”
என்ற இச்சையில் தான் இதை உபதேசிக்கின்றேன்.
கீதையிலே சொல்வது போன்று
நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! நீங்கள்
அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் உங்களுக்குள் பெருக வேண்டும் என்ற இந்த உணவின் நோக்கம் கொண்டு தான்
இதை வெளிப்படுத்துகின்றேன்.
இதைக் கேட்டுணர்ந்த நீங்களும் இதையே பின்பற்றினால் அதன் வழி கொண்டு
1.பிறர் வாழ
வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
2.அந்த வாழ வேண்டும்
என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
3.உங்களுக்குள்
இருக்கும் தீமையை விளைவிக்கும் சக்திகள் அது ஒடுங்கி
4.மெய் உணர்வைக் காணும் சக்தியாக உங்கள் பேச்சு மூச்சும்
வெளிப்பட்டு
6.விஞ்ஞான உலகால்
ஏற்படுத்தப்பட்ட நஞ்சினை வென்று
6.இந்தப் பூமியிலிருந்து நஞ்சினை அகற்றிடும் ஆற்றலாக நீங்கள்
ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
அத்தகைய ஆற்றலை இந்தப் பூமிக்குள் உருப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும். அத்தகைய
மூச்சலைகளாக உங்கள் மூச்சு வெளிப்பட வேண்டும்.
அந்த நிலை பெற வேண்டும்
என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வைப்
பெற்றால் ஒழிய இனி வரக்கூடிய தீமையான விளைவுகள் இருந்து
தப்பிப்பது மிகவும் கடினம்.
ஆகவே இனி வரும்
நிலையில்
1.இந்த உலகிற்கு அருள்
வழி காட்டக்கூடிய அரும் பெரும் சக்திகளாக
2.நீங்கள் ஒவ்வொருவரும்
வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.