
மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்
மனிதனின் சகஜ
வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தாலும் பண்பு பரிவு பாசம்
கொண்டு வாழும் பொழுது பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து அதை
அறிந்துணர்ந்த பின் அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களின் வேதனையான உணர்வுகளைத் தனக்குள் அதிகமாக நுகர்ந்து
விடுகின்றோம்.
அப்படி நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக வளர்ச்சி அடைந்து இந்த
நோயாளியின் உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றால் கேட்டறிந்த நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.அவ்வாறு வந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் இந்த உடலுக்குள் விளைந்து
2.மனிதன் என்ற பண்பையும்
இழக்கச் செய்து விடுகின்றது.
கணவனும் மனைவியும்
இருவருமே அந்த வேதனை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். வேதனை உணரவைப் பகிர்ந்து கொண்டாலும் எந்த வேதனையைக் கவர்ந்து கொண்டார்களோ இந்த உடலின் நிலை கொண்டு இன்னொரு ஆன்மா
இங்கே சேர்ந்து விடுகின்றது. ஆக
கணவனுக்கு மனைவி இல்லை.
கணவனும் இதைப் போன்று பல
தீமையான உணர்வுகளைப் பரிவுடன் கேட்டறிந்தாலும் தீமை அதிகரித்து
விட்டால் அதன் வழி இந்த உடலிலே கடும் நோய்கள் உருவாகி
விடுகின்றது.
இதன் வழி பெற்றாலும் தன்
வாழ்க்கையில் அந்த விஷத்தின் தன்மை அதிகரிக்க இந்த உடலை
விட்டுச் சென்றால்
1.இன்னொரு விஷத் தன்மை கொண்ட உடலாகத் தான் உருவாகுமே தவிர மனித உடல்
பெறுவது என்பது முடியாத நிலை.
2.கணவனும் மனைவியும்
இங்கே பிரிக்கப்படுகின்றது.
இதிலிருந்து மீள வேண்டும் என்றால் கணவனின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
இந்த உணர்வைத் தனக்குள் வலுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பின்… உடலை விட்டு பிரிந்து சென்ற கணவனின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
1.என்னுடன் இணைந்து வாழ்ந்த பண்பு கொண்ட பரிவு கொண்ட உணர்வுகள் நிலைத்த அறிவாக
பேரொளியாகப் பெற்று
2.பெரு வீடு பெரு நிலை
என்று நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
மனைவி கணவனை இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.
இதைப் போல மனைவியினுடைய உயிரான்மா பிரிந்து விட்டால்
கணவன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா
ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
மனைவியின் உயிரான்மா சப்தரிஷி
மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு
பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா
ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இப்படி எண்ணினால்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெற்றோமோ
2.சூட்சும நிலை அடைந்த அந்த ஆன்மாக்களை அங்கே செலுத்தி விடலாம்.
அங்கே செலுத்திய பின்
என்றென்றும் ஒளியின் சுடராக எங்கள்
குடும்பத்திற்குள் இருளை அகற்றும் அருள் சக்தியாக வர வேண்டும்
என்று எண்ணி ஏங்கிடல் வேண்டும்.
இந்த முறைப்படி செய்தால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவியும் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றாக
இணைந்து வாழ்வீர்கள்…”
இந்த உணர்வுகள் இருக்கப்படும் போது அந்த
உணர்வின் வலுவால் “நீங்கள் என்றுமே
பிரிவதில்லை…” உடலை விட்டுப் பிரிந்தாலும் அவருடைய உணர்வுகள்
உங்கள் உடலில் உண்டு.
1.கணவர் உடலை விட்டுப் பிரிந்தால் பெண்கள் மாங்கல்யத்தைக் கழற்றி
விடுகின்றார்கள்.
2.அவ்வாறு செய்வது ஞானிகள்
காட்டிய வழியில் தவறான வழியாகும்.
கணவனுடைய உணர்வுகள்
தனக்குள் உண்டு. சப்தரிஷி
மண்டலத்துடன் இணைந்து வாழ்ந்திடும் உணர்வுகள் எங்கள்
குடும்பத்தில் வரும் அறியாது சேர்ந்த இருளை நீக்கி எங்கள்
குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று மனைவி
கணவன் உயிரை உயர்ந்த நிலை கொண்டு எண்ணினால் இந்த உணர்வு இங்கேயும்
வளர்கின்றது… குடும்பத்திற்குள் அறியாது
வரும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.
மனைவி கணவனை இவ்வாறு எண்ணுவதும் கணவன் மனைவியை
இவ்வாறு எண்ணுவதும் இதைப் போல் இணைந்தால் இதன் வழி வரும்
சந்ததியினருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் படரப்பட்டு தீமையிலிருந்து விடுபடும் சக்தி
பெறுகின்றார்கள்.
ஞானிகள் காட்டிய இந்த அருள் வழிப்படி நடந்தால்
1.இந்த உடலுக்குப் பின் யார் முந்திச் சென்றாலும் அவர் ஒளிச் சரீரம்
பெறுகின்றார்கள்.
2.அதே உணர்வைப் பற்றுடன் பற்றும் பொழுது எளிதில் அங்கே சென்று இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து ஒளியைப் பெருக்க இது உதவும்.
பெண்கள் மாங்கல்யத்தை
நீக்குவது என்பது கணவனை நீக்குவது என்பதாகும். மாங்கல்யம்
இங்கு இருந்தால்தான் அவருடைய நினைவே வரும்.
அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து அதன் வழி
கொண்டு இரு உணர்வும் ஒன்றாகச்
சேர்த்து அருள் வழி வாழவும் இதைப் பின்
தொடர்ந்து வரும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானத்தை ஊட்டவும் அருள்
உணர்வுகளை வெளிப்படுத்தவும்
1.அவர்களும் இதைப் பின்தொடர்ந்து வரப்படும்
போது உங்கள் ஆன்மா வெளிப்பட்டாலும்
2.குழந்தைகள் இதே முறைப்படி
செயல்படுத்தும் போது இந்த உடலுக்குப்
பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய உதவும்.
3.ஆகவே பெண்கள்
மாங்கல்யத்தை நீக்காது கணவனின் நினைவு கொண்டு அந்த
மாங்கல்யத்தை எடுத்து
4.“நாங்கள் அருள் வழி பெற வேண்டும்… ஒன்றி வாழும் அந்த அருள் சக்தி எங்களிலே வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் இவ்வாறு செய்தீர்கள் என்றால் இந்த பிறவியின் முழு பயனையும் நீங்கள் அடைகின்றீர்கள். சிந்திக்கும் வலிமை பெற்று நம்
குரு அருளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வளமாக வாழ்ந்திட எமது
அருளாசி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.