ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2025

மனிதனின் கடைசிக் கடமை

மனிதனின் கடைசிக் கடமை


யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி நினைவை விண்ணிலே செலுத்தி கடவுளின் அவதாரம் என்று கூறிய அகஸ்தியன்
1.அவன் எவ்வாறு மெய் ஞானம் பெற்றான்…? என்ற நிலையும்
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அவனில் விளைந்த உணர்வுகளை வியாசகர் தனக்குள் பெற்றதையும் நாம் பார்ப்போம்.
 
அவனில் (வியாசகர்) விளைந்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அவன் கண்டுணர்ந்த உணர்வை அறிய நாம் தியானிப்போம்.
 
வியாசகர் சந்தர்ப்பத்தால் தன்னை மீன் காத்ததை எண்ணி ஏங்குகிறான். காரணம்… எதைக் கொன்று அவன் புசித்தானோ அதுவே தன்னைக் காத்தது என்ற நிலையில் நினைவினை விண்ணிலே செலுத்துகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெறுகின்றான்… அகஸ்தியன் உணர்வைப் பெறுகின்றான்.
 
அந்த உணர்வின் அறிவை தனக்குள் எவ்வாறு கண்டான்…? என்ற அந்த வியாசகர் பெற்ற மெய் ஞானத்தை நாமும் பெறுவோம்.
 
மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து பாற்கடலைக் கடைந்தான் என்ற பேருண்மையை அவனுள் கண்டறிந்ததை… அவன் தெளிவாக்கிய உணர்வினை உருவமாக்கி அருவத்தின் தன்மை தனக்குள் பெறும் சக்தியாகப் பின் வந்த ஞானிகள் தெளிவாக்கினார்கள்.
 
அதை அறிவதற்கு
1.வியாசகர் கண்டறிந்த அந்த உணர்வின் சத்தை நாம் ஏங்கிப் பெறுவோம்.
2.அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பின் வந்தோருக்கு வழி காட்டிய உணர்வையும் உயிரின் இயக்கத்தையும் நாம் காண
3.நம் வலிமையைக் கூட்டி… கூர்மையாக அவன் காட்டிய உணர்வுடன் எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
4.அதன் உணர்வின் அறிவாக நாமும் அறிந்திட நம் நினைவைச் செலுத்துவோம்.
 
பல அணுக்களின் சேர்க்கையாக மேரு என்ற மலை போல் அது உருப்பெற்று விஷத்தன்மையால் தாக்குண்டு இயக்கும் அந்த வரிசைத் தொடர் அணுக்களின் தாக்குதலால் பூமி எவ்வாறு சுழல்கிறது…? துருவப்பகுதி வழியாக எவ்வாறு நுகர்கின்றது…? பூமி தனக்குள் ஒவ்வொன்றையும் தாவர இனங்களை எப்படி உருமாற்றுகிறது…? என்ற உணர்வின் நிலையை
1.வியாசகர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நாமும் காண்போம்.
2.வியாசகர் தனக்குள் உணர்ந்த உணர்வின் தன்மை விளைய வைத்த அந்த உணர்வினை நாம் நுகர்வோம்.
3.அதன் அறிவாக அவன் கண்டறிந்த உணர்வினை நாமும் அறிவோம்.
 
சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்வதும் துருவப் பகுதி வழியாக நுகர்வதும் பூமிக்குள் பல உணர்வுகள் தனக்குள் மற்றதுடன் இணைத்து தாவர இனங்களாக உருவாக்குவதையும் அந்த மகா ஞானி கண்டுணர்ந்து அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளை நாமும் காண்போம்.
 
பூமி துருவப் பகுதி வழியாக நுகர்வதை அந்தத் துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்கியதைத் பூமி தனக்குள் இணைக்கப்படும் பொழுது பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம்…” என்று உணர்த்திக் காட்டினான் அன்று வியாசகன்.
 
பிரபஞ்சத்தில் மிதக்கும் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து உணர்வின் இயக்கமாக ஆலகால விஷத்தைச் சிவன் தன் கழுத்திலே நிறுத்திக் கொண்டான் என்ற நிலையில் துருவப் பகுதியில் விஷத்தின் தன்மை அடக்கி அதைச் சிறுகச் சிறுகப் படரச் செய்கின்றான்.
 
ஏனோ சிவன் இந்த உலகைக் காக்க விஷத்தைத் தனக்குள் அடக்கிக் கொண்டான் என்று காவியத் தொகுப்பில் இதனை முன் மொழிந்திருப்பார்கள்.
 
விண்ணிலிருந்து வரும் சக்திகளை நுகரப்படும் பொழுது
1.நமது பூமி நீள வடிவமாக அது வளர்ந்து கொண்டே செல்வதைக் காணலாம்.
2.துருவப் பகுதியிலே உறை பனியாக உறைந்து அடுக்கு வரிசையாக வரும்.
 
அதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்யும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து உங்கள் உணர்வுகள் அனைத்தும்
2.நமது பூமியை மேலிருந்தே பார்க்கும் நிலையாக இந்த உணர்வுகள் தோன்றும்.
3.நமது உணர்வுகள் மிதக்கும் தன்மை அடையும் அங்கிருந்து பூமியைப் பார்க்கும் சந்தர்ப்பம் உருப் பெறுகின்றது.
 
உறைந்த பனிகள் கடலாக மாறி வெப்பத்தினால் ஆவியாக மாறி மேகங்களாகக் கூடுவதும் இதிலே தாவர இனங்கள் உருப்பெறுவதும் தாவர இனங்கள் உருமாறுவதும் அதில் உயிரினங்கள் உணவாக உட்கொண்டு அது அது சேர்த்த நிலைகள் கொண்டு தன்னை வளர்த்திடும் நிலையாக… இதையெல்லாம் கண்டறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நாம் நுகர்வோமென்றால் அவன் கண்ட பேருண்மையை நமக்குள்ளும் நாம் காணலாம்.
 
வியாசக பகவான் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.தியானத்தில் அமர்ந்துள்ள அனைத்து உயிராத்மாக்களும் வியாசக பகவானின் உணர்வுகள் பெற்று
2.வியாசகரின் அருள் ஞானமாகத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றிப் பேருண்மையின் உணர்வை உணர்ந்து  
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
 
அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளைப் பின் வந்த அரசர்கள் யாக வேள்விகளை நடத்திச் சிலைகளை உருவாக்கி உணர்வின் தன்மை பதிவாக்கி பதிவின் அலைகள் மனிதனுக்குள் உருப்பெறச் செய்தார்கள்.
 
அந்த மனிதன் உடலை விட்டு அகன்ற பின் அதே உணர்வின் அலைகள் இங்கே படர்ந்திருப்பதும் அதே தெய்வத்தினைப் பக்தி கொண்டு செல்வோர்கள் எண்ணி ஏங்கும் பொழுது அந்தச் சிலையின் உணர்வைத் தனக்குள் வளர்க்கப்பட்டு சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளும் அலங்காரங்களும் படங்களாக உருவாக்கப்பட்டு அதனின் உணர்வலைகளாக வெளிப்படும் பொழுது அதனை மீண்டும் குவித்து டிவிக்களில் நாம் உருவங்களாகக் காணுவது போன்று காணலாம்.
 
அதாவது… மனிதனுக்குள் பக்தி என்ற உணர்வை வளர்த்து எந்தச் சிலையை உருவாக்கினோமோ அதனை மனிதனின் உடலில் எந்தப் பக்தி கொண்டு எடுத்தார்களோ அது எல்லாமே “அலைகளாக இன்றும் உள்ளது…”
 
உதாரணமாக முருக பக்தி கொண்டு உடலை விட்டு வந்த அந்த உணர்வலைகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை
1.இப்போது நீங்கள் வானை நோக்கி எண்ணி
2.ஆறாவது அறிவின் உணர்வாக வளர்த்துக் கொண்ட அந்த முருகனைக் காண வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.
3.அந்த அலைகள் குவிந்து முருகனாகக் காட்சி தெரியும் மேல் நோக்கிப் பாருங்கள்.
 
காட்சி…” என்றால் மனிதனுக்குள் எந்தெந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு இந்தப் பூமிக்குள் அலைகளாகப் பரப்பப்பட்டதோ “அதைக் குவிக்கப்படும் பொழுது
1.அந்தந்த உருவங்களை மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது
2.டிவிக்களில் காணுவது போன்று குவிந்து உருவமாகக் காட்டும்.
 
வியாசகரும் அகஸ்தியரும் வானுலக ஆற்றலைத் தனக்குள் வளர்த்து இந்த உண்மையின் தன்மை உணர்த்தி அவர் உடலில் பெருக்கப்பட்டு அருள் ஞான ஒளியாகக் கண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் எடுக்கப்படும் பொழுது வியாசகர் கண்ட உணர்வுகள் பூமி விஷத்தின் தன்மையால் சுழல்வதும் துருவப் பகுதி வழி கவர்வதும் உணர்வுகள் தனக்குள் மாற்றம் அடைவதும் தாவர இனங்களாக உருப்பெற்றதும் அதை மற்ற உயிரினங்கள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும்…” காண முடிந்திருக்கும்.
 
இந்த்த் தியானம் இருக்கும் பொழுது மேரு என்ற மலையை மத்தாக வைத்து என்று சொல்லும் பொழுது இந்தப் பூமியினுடைய இயக்கத்தைச் சிலர்  காட்சியாகப் பார்த்திருக்கலாம்.
 
இது எல்லாம் வியாசகர் அன்று கண்டறிந்த உணர்வுகள்…!
 
அகஸ்தியன் கண்டறிந்த அலைகளை அவன் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களைக் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வை… அக்கால மொழி கொண்டு வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.
 
ஆகவே நாம் காண வேண்டியது எது…?
 
அகஸ்தியன் துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.
 
இவ்வாறு எண்ணி ஏங்கப்படும் பொழுது
1.துருவ மகரிஷியாகும்போது கணவனும் மனைவியும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இருவரும் பரிமாறிக் கொண்டதை
2.அவர் உடலிலிருந்து அந்த அலைகள் வந்து படர்ந்து இருப்பதை நாம் காண்போம்.
 
வானை நோக்கி உற்றுப் பாருங்கள்…!
 
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரப்பும் பொழுது
1.அந்தக் காலத்தில் வாழ்ந்த அவர்கள் உடலின் அமைப்பு
2.அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.
 
துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக அவர்களுக்குள் இணைந்து ஒளியின் சரீரம் பெற்று எங்கே நிலை கொண்டார்களோ அந்த எல்லைக்குச் சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்றதையும் நீங்கள் காணலாம்.
 
துருவ மகரிஷியும் அவருடன் இணைந்த அருந்ததி அக்காலத்தில் வாழ்ந்த நிலைகளும்
1.அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரமாகத் துருவப் பகுதி வழியாகச் சென்றதைக் காணலாம்.
2.துருவ நட்சத்திரத்தினுடைய ஒளியையும் காண முடியும்.
 
இந்த உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின்…
1.துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இரவிலே படுத்தால்
2.அந்த உணர்வுகள் கலந்து உயிருடன் ஒன்றிப் பெருகி அந்த உணர்வின் ஆற்றலைப் புலனறிவிலே காண முடியும்.
 
ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு கவர்ந்து நம்மை எப்படிக் காணச் செய்கின்றார்களோ இதைப் போலத்தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலில் இருந்து வெளி வந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றி வைத்துள்ளது… நாமும் அதைக் காண முடியும்.
 
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வை எமக்குள் பதிவாக்கி உணர்வின் நினைவை எடுக்கச் சொல்லி
2.அருள் ஞான வித்தாகக் கேட்போருக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து வினைக்கு நாயகனாக ஆக்கி
3.நினைவு கொள்ளும் பொழுது படர்ந்திருக்கும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து கண் புலனறிவில் நிச்சயம் காண முடியும்.
 
இருந்தாலும்… சில உண்மைகள் படக் காட்சிகளாகத் தெரிய ஆரம்பித்தால் திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது உருவத்தைக் கண்டால் அஞ்சி ஓடுவோர் பலர் உண்டு.
 
பயத்தின் நிலை அடைந்து விடுவார்கள். ஆகையினால் அத்தகைய உணர்வின் தன்மை காட்சியாகக் கிடைக்கக் கூடாது என்பதற்கும்
1.ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வினை உங்களுக்குள் வளர்ப்பதற்கும் தான் இதைச் செய்வது.
2.சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம்.
3.நாம் காண வேண்டியது… பெற வேண்டியது… உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் திறனைப் பெறுவது தான்
 
மனிதனின் கடைசிக் கடமை அது தான்…!