
அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்
அகஸ்தியன் கண்டதை... துருவன் கண்டதை… எல்லோரும் காண முடியும். அந்த உணர்வுகளை
நுகரப்படும் பொழுது நமக்குள் அது வளர்ந்து நம்மை அறியாமலே
அதைக் காணும்படி செய்யும்.
எப்படி…?
உதாரணமாக கோபத்தையும்
வெறுப்பையும் வேதனையையும் ஒருவன் துர்மரணம் அடைந்ததையும் சிதைந்து கொண்ட உணர்வுகள்
வெளிப்பட்டதையும் நாம் கேட்டுணரப்படும்
பொழுது அது நமக்குள் பதிவாகின்றது.
துர்மரணம் அடைந்தவன் வேகமாகவும்… கோபத்துடன்
தாக்கும் உணர்வுகள்
செயல்பட்ட்தையும்… அப்படிப் பதிவான உணர்வலைகள் இரவிலே தூங்கப்படும்
பொழுது “கொடிய உணர்வின் சத்து…”
1.அந்த ஆவியின் அலைகளை உடல் அதை ஈர்த்துச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே
பட்டு
2.புலனடங்கித் தூங்கும் நிலையில் முன் பின் பார்க்காதவர்களின்
ரூபங்களைக் காணுவோம்.
தலை சிதைந்து அல்லது தலை இல்லாத மனிதனோ…
அதாவது கொலை செய்யும் பொழுது தலை இல்லாத நிலையில் ஓடும். அந்த உடலில் இருந்து சிதைந்த உணர்வுகள் அணுக்களாக மாறியதை… பிறர் சொல்வதை நாம் கேட்டிருந்தாலும் கூட அது பதிவாகி இந்த நினைவுகள்
அலைகளாக நம் சுவாசத்தில் புகுந்து கொடிய உணர்வுகள் சேர்க்கப்படும்
பொழுது ஒன்றுடன் ஒன்று அப்படி ரூபங்கள்
தெரிய வரும்.
இரவிலே தூங்கும் பொழுது பார்த்தால் அது கையில்லாததாக இருக்கும்
காலில்லாது இருக்கும். ஒருவரை ஒருவர்
தாக்க எண்ணும் இந்த உணர்வுகள் நம் உடலில் இருக்கும் நல்ல
அணுக்களில் மோதியவுடன் நம்மை அறியாமல் வியர்த்து விறுவிறுத்து திடீரென்று முழிப்பாகி எழுந்து விடுவோம்.
இந்த உணர்வுகள் எப்படி நம் உடலை இயக்குகின்றதோ இதைப் போலத் தான்
1.இயற்கையின் நிலைகளைத் துருவன் கண்டுணர்ந்து
தனக்குள் படிப்படியாக அவன் நுகர்ந்த ஆற்றல்மிக்க
சக்திகளை
2.ஒன்றில்லாது ஒன்றில்லை என்ற நிலையில் அவனிடமிருந்து வெளிப்பட்ட தீமையை நீக்கிய உணர்வுகள் படர்ந்திருப்பதை
3.நினைவு கொண்டு அந்த
உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கிக்
கொண்டால்
4.இரவில் தூங்கும்
பொழுது சிலருக்கு அவர்களை வான மண்டலத்திற்கே அந்தப் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்வதையும் காணலாம்.
இந்தத் தியான வழியினைக் கடைப்பிடிப்போர் வானிலே மிதந்து கொண்டிருப்பதாகவும்… மிதந்து கொண்டே செல்வதாகவும் அந்த வான மண்டல இயக்கங்களைக் காணவும் முடியும்.
ஒரு சிலர் இரவிலே இதைப் பார்த்துக்
கொண்டிருக்கின்றார்கள். மிதந்து கொண்டே
அதைப் பார்த்த உடனே இதிலே அச்சப்படுவோரும்
உண்டு.
பூமிக்குள் வராது
அப்படியே மேலே சென்று விடுவோமோ…? வீட்டிலே பெண்டு பிள்ளைகளை எல்லாம்
விட்டுவிட்டுச் சென்று விடுவோமோ…? என்ற
இந்த உணர்வுகள் கலந்து விட்டால் திடீரென்று உடலிலே
வியர்வையாகி “பூமிக்குத் திரும்ப மாட்டோமோ…” என்று திடுக்கிட்டு… முழிப்பவர்களும்
உண்டு.
ஏனென்றால் இந்த உணர்வின்
வலிமை புவியின் ஈர்ப்புக்கு வரும் பொழுது இப்படியும் கனாக்கள்
பல நிலைகளில் வருவது உண்டு.
கனாக்கள் வருவதே…
1.எதை நுகர்கின்றோமோ
அந்த உணர்வுகள் உயிருடன் உராய்ந்து
2.உடலுக்குள் சேர்த்து
அது மோதுவது தான் நினைவாற்றலாக வருகின்றது.
குருநாதர் எனக்குள் பதிவு
செய்த… துருவன் கண்டுணர்ந்த உணர்வினை…
அந்த நினைவின் ஆற்றலை நான் பெறுவதற்கு எம்மைக்
காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.
இந்த உணர்வுகள் உன்னை எப்படி
இயக்குகின்றது…? அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்ற உண்மையைச் சொல்லப்படும் பொழுதுதான் அவர்
வழியில் துருவன் பெற்ற ஆற்றல்களை… அவன் எவ்வாறு எல்லாம்
தனக்குள் வந்ததை மாற்றி அமைத்தானோ “அதையும் நான் பெறும் தகுதியாக குருநாதர் ஏற்படுத்தினார்…”
அவர் எவ்வழியில் உணர்த்தி இதைப் பெறும்
தகுதியை எனக்கு ஏற்படுத்தினாரோ அதன் வழியில் உங்களுக்குள்ளும் இதைப் பதிவாக்கி அந்தத்
தகுதியை ஏற்படுத்துகின்றேன்.
1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி
இந்த உணர்வுகள் உருவானது என்ற நிலையையும்
நினைவுபடுத்தி
2.அதனின் வலிமை கொண்டு
நீங்களும் இதை அறிந்து உங்களுக்குள் இது விளைந்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி
3.உங்கள் சொல்… கேட்போர் உணர்வுகளிலும் ஆழமாகப் பதிந்து
4.அவருக்குள் விளைந்த
தீமைகளை அகற்றிடும் நிலையாக இது உருவாக வேண்டும்.
5.அருள் மகரிஷிகளின் உணர்வுகள்
வளர்ந்து விட்டால் பதட்டத்தையும் மற்ற தீமைகளையும் அடக்கி “வெளிச்சமாக…” உங்கள்
உடலிலிருந்து வரும்.
பழனியில் இருக்கும் ஒருவருக்கு இது போன்று கிடைத்தது. அவர்
எதையுமே கூர்மையாக உணரக்கூடியவர். இந்த
உபதேசத்தைக் கொடுக்கப்படும் பொழுது கூர்மையாகக் கவனித்தார். இப்படி எல்லாம் நடக்குமா…!
என்று ஆச்சரியக் குறியுடன் எண்ணினார்.
இரவிலே தூங்கிக்
கொண்டிருக்கும் பொழுது பளீர்ர்… என்று ஒளிகள் அவர் உடலிலிருந்து வெளிப்படுகின்றது. அவர் அரண்டு எழுந்திருக்கின்றார்… சப்தமிடுகின்றார்.
சப்தத்தைக் கேட்டு அவர் மனைவியும் எழுந்து பார்க்கின்றது. கணவர் உடலிலிருந்து
வரும் வெளிச்சத்தை அதுவும் பார்க்கின்றது. அந்த இடமே வெளிச்சமாக மாறுகின்றது.
இந்த வயதிலேயே இதையெல்லாம்
கண்டு விட்டால் நான் இனி என்ன செய்வது என்று தனக்குத் தானே அச்சுறுத்திக் கொண்டு என்னிடம் வந்து
இதைக் கேட்டார்.
1.வெளிச்சத்தைப் பார்த்த நாளிலிலிருந்து எனக்குப் பயமாக உள்ளது.
2.மனிதனாகப் பிறந்தேன்… என் ஆசை எல்லாம் போய் விட்டால் நான் என்ன பண்ணுவது…? என்று அவர்
இதைப் பிடிவாதமாகப் பிடிக்கின்றார்.
3.உண்மைகளை அவர் நுகர்ந்தாலும் அவருடைய பிடிவாத
உணர்வுகள் அது இயக்கிக் கீழே அழைத்துச் சென்றது.
அவரின் பிடிவாதத்திற்குக் காரணம் என்ன…?
இந்த மனித வாழ்க்கையில் மற்றவர்களின் பழக்க வழக்கங்களைச் சேர்க்க விரும்புகின்றார். நண்பர்களுடன் அதிகமாகச் சேர்ந்து “மது
குடிக்கும் பழக்கம் இருக்கின்றது…”
மதுப் பழக்கம் உள்ளவருடன் இணைந்து வரும் பொழுது அது அதிகமாகி
விட்டது… தன் ஒழுக்கம் அவரிடம் மறைந்தே விட்டது.
1.உயர்ந்த சக்திகளைக் கொடுத்தும்
இதை அவர் வலு சேர்க்கவில்லை.
2.தன் உடலின் இச்சை வரப்படும் பொழுது அதனுடைய மாற்றங்கள்…
3.மற்றவன் தான்
செய்யும் உணர்வு வரப்படும் பொழுது அவருடைய நிலை ரொம்பவும் மோசமான நிலைக்குப்
போய்விட்டது.
4.உயர்ந்த உணர்வுகல் கிடைத்தும்
அவருக்குப் பலனில்லை.
ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை உடலின் இச்சைக்குத்
தான் வருகின்றது. உடலின் இச்சைக்கு வந்தாலும் பல செயல்களைப் பார்த்துப் பலவீனம் அடையப்படும் பொழுது
மன நிலை குழம்புகின்றது.
அதை அடக்குவதற்கு மதுவைக் குடிக்கின்றார்… தன் நிலையை மறக்கின்றார். மறக்கும் உணர்வுகள் தனக்குள் வளர்க்கப்படும் பொழுது
தன் நிலையையே இழக்கச் செய்கின்றது.
1.ஏனென்றால் இது
எல்லாம் மனிதனுக்குள் வரும் ஆசையின் உணர்வுகள்…!
2.அது வளர்ந்து
விட்டால் நான் உயர்ந்த உணர்வுகளைக் கொடுக்கும் போது
3.அதை நீங்கள் “பயனற்றதாக ஆக்கி விடக்கூடாது… என்பதற்குத்
தான் “உங்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கின்றேன்…”