
யாம் கொடுக்கும் சக்தியை “நீங்கள் எண்ணி எடுத்தால்…” அதை உணரும் வழி
1.எப்படி இருந்தாலும்
உடலை விட்டு நம் உயிர் பிரிந்து தான் ஆகும்.
2.கோடிச் செல்வம் இருந்தாலும் உடலுக்குள் உயிர் இருக்காது.
செல்வத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி “அவன் என்ன
செய்வான்…? இவன் என்ன செய்வான்…?” என்ற
இந்தப் பயம்தான் வரும் பயத்தைத் தான்
வளர்க்க முடியும்.
இதிலிருந்து நாம் எந்த நிலையிலும் தீமைகள் தன்னைத் தாக்காது
மன உறுதி கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்
உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.
மன உறுதி
கொண்டிருந்தாலும் அதிர்ச்சியான நிலைகளில் ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப்
பார்த்த பின் நம் உடலுக்குள் வந்த உடனே பயம் ஏற்படுகின்றது.
ஏனென்றால்
1.நம் உடலில் உள்ள
அணுக்களுக்கு எதிர் நிலையாகும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்
2.அந்த அதிர்வுகள்
நமக்குள் வருகின்றது.
அந்த அதிர்வான உணர்வுகள் நமக்குள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்த பின்…
பயத்தை ஊட்டும் உணர்வின் தன்மை உடலில்
தசைகளில் ஏற்பட்டு விடுகின்றது. அல்லது இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுடன் சேர்த்துப் பயத்தை ஊட்டுகின்றது அந்த
உணர்வின் அதிர்வுகள் தான்.
இதைப் போன்ற தீமைகளிலிருந்து தப்ப நாம் என்ன செய்ய வேண்டும்…?
குருநாதர் 20 வருடம் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அவரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் இப்பொழுது உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
எத்தனை பேர் இதை எடுத்துக் கொள்கின்றார்கள்…!
எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதே வழியில் எத்தனை பேர் ஆசைப்பட்டு எடுக்கின்றார்கள்…?
1.கொஞ்சப் பேர் தான் வருகின்றார்கள்
2.அவர்களும் கூட… ஏதோ தொழிலுக்காக என்று எண்ணித்தான் வருகின்றார்கள்
3.நினைத்தது
நடக்கவில்லை என்றால் இந்தச் சாமியிடம் என்ன இருக்கிறது…? என்று போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
4.யார் எதைச்
செய்தாலும் இந்த உடலில் என்ன வைத்திருக்கிறோம்…? என்று தெரியாது…!
ஆகவே… உயர்ந்த சக்திகளை
நீங்கள் எடுத்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை
அடைய வேண்டும்.
ஜோதிடம் பார்த்து எல்லாம்
பார்த்து “எல்லாம் போய்விட்டது”
என்று வேதனையைத் தான் வளர்க்க நேரும். கடைசியில் பேயாசையாக அது வருகின்றது.
அந்த உணர்வுடன்
இறந்தால் இதே போன்று ஆசை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்து அங்கே போய்ப் பேயாகத் தான் ஆட்ட முடியும்.
அந்த உடலை வீழ்த்திய பின் மற்றதை மிரட்டி வாழும்… பார்த்த உடனே அச்சப்படச் செய்யும் அத்தகைய உடலமைப்பாகத்தான் உயிர் உருவாக்கி விடும்.
இன்று மனிதனாக
இருக்கின்றோம்… நாளை அந்த நிலை ஆகிவிடும்…!
டாக்டர்கள் எப்படி
இன்ஜெக்ஷன் செய்து உடனடியாக மருந்தை ரத்தத்தில் கலக்கச் செய்து விஷ அணுக்களைத் தணியச் செய்து உற்சாகமூட்டி உடல் நலம் பெறச் செய்கின்றார்களோ அதே போல் தான்
1.துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை ஆத்ம சுத்தி மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.உங்கள் கண்ணின்
நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து
3.உயிரின் நினைவு
கொண்டு அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்சினால் “சிவன் நெற்றிக் கண்ணைத்
திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…”
நாம் புறக்கண்ணால் பார்க்கின்றோம். அதை நுகர்ந்து உயிரான அகக்கண்ணால் உணர்கின்றோம்.
1.புறக்கண்ணால் துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற
வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏங்கி
2.நம் அகக் கண்ணான உயிருடன் மோதச் செய்து
3.துருவ
நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதை ஈர்க்கும் சக்தி கொண்டு வந்தால்
4.உயிரில் உள்ள காந்தம்
கண்ணின் தன்மை கொண்டு வந்து அதை இழுக்கும்.
நாம் அப்படி இழுக்கக் கற்றுக் கொண்டால் தீமை என்ற அணுக்கள் உடலில்
இருக்கின்றதல்லவா… அதற்கு ஆகாரம்
செல்லாதபடி முதலில் தடைப்படுத்தும்.
தடைப்படுத்தப்படும் பொழுது தீய உணர்வுகள் அதற்குக் கிடைக்காமல் போனால் அந்த அணுக்கள் சோர்வடையும். சோர்வடையும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள்
பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற ரத்த நாளங்களில் உள்ள
ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும்
என்று எண்ண வேண்டும்.
பரிதாபப்பட்டு ஒருவருக்கு
உதவி செய்கின்றோம். இறக்கும்போது அவன் என்ன
செய்கின்றான்…? “மகராசன்…!” நல்ல நேரத்தில் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணுவான்.
அப்போது அந்த உணர்வுகள்
கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் வந்து சேரும்… ஜீவான்மாவாக மாறிவிடுகிறது.
1.அவன் எப்படி
வேதனைப்பட்டானோ துயரப்பட்டானோ அந்த உணர்வு உங்கள்
ரத்தத்திலிருந்து அதனுடைய உணர்வை எடுக்கும்.
2.ரத்தத்தில் தான் அதனின்
ஜீவிதமே இருக்கும்… தன் உணர்வை வளர்க்கும்.
3.உடல் முழுவதும்
சுற்றி வரும் பொழுது… போகும் இடமெல்லாம் உடலில் குடைச்சல் வரும்.
அதே சமயத்தில் ரத்தத்தின்
உணர்வுடன் சேர்த்து உயிர் பாகம் சென்றால்
உணர்ச்சிகளாக இயக்கி அதன் இயக்கமாக நம் நினைவை இழக்கும்படி
செய்துவிடும்.
உடலில் எந்தக் கோளாறும் இருப்பதில்லை. ஆனால்… ஐயோ
என்னை அடிக்கின்றான்… பிடிக்கின்றான்…! என்று சொல்பவர்கள்
இன்று எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்.
அதே சமயத்தில் பழி
தீர்க்கும் உணர்வைச் சேர்த்து “உன்னை நான் விடமாட்டேன்... நான் கொன்றே தீருவேன்… எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்கள்” என்று பூதகணங்களாக வளர்ந்து உடலுக்குள் வந்தால்
உடலையே அழித்திடும் நிலையாக வரும்.
1.ஆக எதன் உணர்வைச் சேர்த்ததோ ரத்தத்திலிருந்து அதனுடைய வேலையைச் செய்யத்தான்
செய்யும்.
2.அப்பொழுது அதை
மாற்றுவது யார்…?
துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே எண்ணி
அந்த ஜீவான்மாக்களுக்கு உணவு சேராதபடி தடைப்படுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்
என்று உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.
கண்ணின் நினைவை உடலுக்குள் அப்படிச் செலுத்த வேண்டும்.
நண்பர்களுக்குள் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணும் போது உடலை
இயக்குகின்றது.
அதே துரோகம் செய்த உணர்வு
நமக்குள் இருக்கும் பொழுது அவனை எண்ணும் போது நமக்கு
பதட்டமும் இப்படிச் செய்தானே என்று ஆத்திரத்தை ஊட்டும் உணர்வுகள் வரும் பொழுது… நாம்
மற்றவர்களையும் சந்தேகப்பட்டு இங்கேயும்
வெறுக்கும்படி செய்து “நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாதபடி”
தடுத்து விடுகின்றது.
இது போன்ற
சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து என் உடலில் இருக்கக்கூடிய
ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஜீவணுக்களின் நுனியிலும் இந்தக் காந்த சக்தி
உண்டு. கண்ணால் கவரப்பட்டு உணர்வின்
தன்மை கரு முட்டையாகி அது அணுவாக மாறுகின்றது.
1.அதனால் அந்த அணுக்களில்
அந்த அருள் சக்தியை மோதச் செய்ய வேண்டும்.
2.கண்ணின் நினைவை
நேரடியாக இணைக்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் காந்தத்தைச் செலுத்துகின்றோம்.
சிறுகச் சிறுக இப்படிச் சேர்த்துப் பழகினால் இன்னொரு உடலில் இருந்து நம் உடலுக்குள்
தீமை செய்ய வந்தாலும் “அதை நாம் அருள் ஒளி கொண்டு மாற்றலாம்…”
இல்லை என்றால் எந்த
இன்ஜெக்ஷனுக்கும் அது கட்டுப்படாது. அதன்
உணர்வையே நமக்குள் செயல்படுத்தும். மற்ற எதையும் வைத்து அதை மாற்ற முடியாது.
மந்திரத்தை வைத்து
இன்னொரு ஆவியை ஏவலாம். இரண்டு மாதம் மூன்று மாதம் அமைதியாக இருக்கும்.
மறுபடியும் அந்த ஆவியின் தன்மை வேலை செய்யும்.
இது போன்ற தீமையிலிருந்து
நாம் தப்ப வேண்டுமா இல்லையா…?
அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் உங்களை
அறியாது சேர்ந்த தீமைகள் இருந்து விடுபட வேண்டும் அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும் இந்த உடலைக்
காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய பிரார்த்தனையே இருக்கின்றது.
ஒரு வெறுப்படைந்தவனுடைய உணர்வு எப்படி இயக்குகின்றதோ அதைப் போன்று
1.நீங்கள் அந்த உயர்ந்த
சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.இந்த உணர்வுகள்
உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டே
இருக்கும்.
3.சில நேரங்களில்
நீங்கள் அதைக் கவனிக்கலாம்.
4.அந்த நேரத்தில்
சிந்தனையைச் செலுத்தி… அந்த உயர்ந்த
சக்திகளை எடுத்தால் நன்மை பயக்கும் சக்தியாக அதைப் பெற
முடியும்.
5.ஏதோ ஒரு விதமான
உற்சாகம் கிடைக்கின்றது என்று சொல்வீர்கள்… அடுத்து அந்த
நினைவால் உயர்ந்த சக்தியை எடுக்கலாம்.
6.சில நேரங்களில்
உங்களுக்கு அந்த நல்ல வாசனைகள் வரும். இனம் புரியாத
ஒரு உற்சாகம் வரும்.
7.அன்று சந்தோசமாக
இருக்கும்.. காரியங்கள் சீராக நடக்கும்.
இது எல்லாம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கிறேன். அதையே பயிற்சியாகக் கொடுத்து உங்கள் உடலில் இருக்கும் அணுக்களுக்கு
கண்ணின் நினைவு கொண்டு அருள் ஞான உணர்வைப் பதிவு செய்கின்றேன்.
கண்ணால் பதிவு செய்யும்
பொழுது எலும்புக்குள் ஊழ் வினையாகப்
பதிவாக்கி விடுகின்றது.
செல்ஃபோன்களில் பதிவாக்கிய பின் அழைத்தால்
அந்த நம்பர் எப்படித் தெரிய வருகின்றதோ அதைப்போல அந்த அருள்
உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
1.மீண்டும் நினைவாக்கும் போது அந்தச்
சக்தியை நீங்கள் பெற முடியும்.
2.அருள் உணர்வுகளை உங்களால் நுகர
முடிகின்றது அறிய முடிகின்றது.
3.ரத்தத்தில் அது
சேர்ந்து கெட்டதை அகற்றுகின்றது… நல்லதை உருவாக்க ஜீவன் கொடுக்கின்றோம்.
ஆனால் வீணாகக் கவலைப்பட்டு சஞ்சலப்பட்டு சங்கடப்பட்டு வெறுப்படைந்து வேதனைப்பட்டால் மீண்டும் அதை வளர்த்து மனித உடலிலே
நோயாகி… அடுத்து மனிதனல்லாத உடலை உருவாக்கத்தான் அது
உதவும்.
ஜோசியம் ஜாதகம் நல்ல
நேரம் கெட்ட நேரம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம்… தீமையை நீக்க வேண்டும் என்று எந்த நேரத்தில் எண்ணுகின்றீர்களோ அதுவே
உங்களுக்கு நல்லது.
1.தீமை வரும் பொழுது
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைப் பயன்படுத்தி
2.என் உடலில்
இருக்கக்கூடிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று
எப்பொழுது எண்ணுகின்றீர்களோ “அது எல்லாம் நல்ல நேரமாகின்றது…”
மனிதனுக்கு ஜாதகம் இல்லை… அவன் உருவாக்கும் சக்தி பெற்றவன்.
நல்லதை உருவாக்கப்படும் பொழுது நல்ல நேரம் வருகின்றது… நல்ல
செயல் நடக்கின்றது… மன பலம் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது.
“எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லைப்படுத்தினான்” என்று எண்ணினால் அந்த நேரம் கெட்ட நேரம் ஆகின்றது.
தொழில் செய்து நஷ்டம் ஆகிவிட்டது பையன் சொன்னபடி கேட்கவில்லை
என்று எண்ணினால் அது எல்லாம் கெட்ட நேரம் தான்.
என் பையன் நல்ல ஒரு தெளிவானவனாக வரவேண்டும் தொழில் சீராக வேண்டும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பிள்ளைக்கு
நல்ல நேரம்… நமக்கும் நல்ல நேரம் ஆகின்றது…!
நல்ல நேரமாக ஆக்க வேண்டும் என்றால் அதற்கு வலு வேண்டும் அல்லவா. சாதாரணமாக நினைக்க முடியாது.
1.அதற்குத்தான் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.அதை நீங்கள் பெற்று
உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் அதை நினைக்கும் போதெல்லாம் நல்ல நேரம் ஆகின்றது.
வேதனை என்று வரப்படும்
பொழுது சர்க்கரைச் சத்து ரத்தக்
கொதிப்பு ஆஸ்மா போன்ற நோய்கள் கடுமையாகின்றது. நான் நாளை என்ன செய்வேன்…?
என்ற திகைப்பானால் வேதனை வெறுப்பானால் சளியாக உருமாறும் நிலையும் வந்து விடுகிறது. அடிக்கடி
சலிப்பும் சஞ்சலமும் உருவானால் உப்பு சத்து உருவாகின்றது.
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு “எதிர்ப்பான நிலை வரும் பொழுது…
அது செயலற்றதாக மாறி…” இந்த உடலையே
சீர்குலைக்கச் செய்கின்றது.
அதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள்
விடுபடுவதற்குத் தான்
1.எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்திலும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்ச
வேண்டும்
3.அறியாது சேர்ந்த
இருள்கள் நீங்க வேண்டும்
4.உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் உயர வேண்டும்
5.உங்கள் பார்வை
பிறருடைய தீமைகள் வராது தடுக்க வேண்டும் என்று இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்.