
மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்
நட்பாக இருக்கிறோம்
என்றால் நம்மிடம் ஆயிரம் கஷ்டத்தைச் சொல்வார்கள்.
அதையெல்லாம் உ…ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம். அது நம் நல்ல அறிவை மூடிவிடும்.
1.கஷ்டத்தைக் கேட்டுக்
கொண்டிருந்தால் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகள்.
2.யாம் பதிவு செய்த
ஞானிகள் உணர்வுகளை மூடி மறைத்து விடும்… நினைவுக்கு வராது.
ஆகவே… யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வு உங்கள் நினைவுக்கு வர
வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அதைத் தெளிவாகத்
தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்று அருள் ஞானியான அகஸ்தியன்
தனக்குள் எடுத்த உணர்வின் தன்மை
1.அவன் இருண்ட உலகையும்
கண்டான்… அது ஒளி பெற்ற உணர்வையும் கண்டான்… இந்தப் பிரபஞ்சத்தையும் கண்டான்.
2.அவனில் விளைந்த
உணர்வுகள் அந்தந்தத் தொகுதிகளில் இதை இணைத்து விட்டால்
3.அவன் எவ்வாறு தன் தன்
தொகுதிகளில் தீமைகளை நீக்கினானோ
4.ஒவ்வொரு வளர்ச்சியின்
நிலைகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது வளராது தடுக்கும் நிலைகளை அவன் அகற்றினானோ
5.தனக்குள் தன்னைக் கண்டு
உணர்வின் ஆற்றலாக எப்படிப் பெருக்கினானோ அதை நாமும் பெற முடியும்.
அந்த நிலை நீங்கள் பெற
வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குவது.
ஆக… மற்றவர்கள் படும் வேதனைகளை நுகரக் கூடாது. மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்.
அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் அவர்கள் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அவர்
அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று
1.“அவர் பெற வேண்டும்” என்று எண்ணினால்
2.இந்த உணர்வுகள்
உங்களுக்குள் வளர்ச்சி பெறுகின்றது.
பாசத்தால் பரிவால்
பண்பால் அதைக் கேட்டறிந்தோம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்டுக்
கொண்டிருந்தால்… மூச்சே விடாதபடி கஷ்டத்தையே சொல்லிக்
கொண்டிருப்பார்கள்.
இந்நேரம் வரை யாம் பதிவு செய்ததை
மறந்து விடுவீர்கள். நல்ல அணுக்களின் தன்மையை மாசுபடுத்தி
விடும்.
குப்பைக்குள் மாணிக்கம்
மறைந்திருந்தால் வெளியிலே வெளிச்சம் தெரியுமோ…? காரணம்
அந்தக் குப்பை அடர்த்தி ஆகிவிடுகின்றது.
சூரியனின் ஒளிக் கதிர்கள்
வெயில் அடிக்கும் பொழுது தெரிகின்றது. ஆனால்
இங்கிருக்கும் தூசிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதை மறைத்து விட்டால் சூரியனின்
வெளிச்சம் தெரிவதில்லை… இருண்டு விடுகின்றது.
இதைப்போல் உயிரால் உணர்வின்
ஒலிகள் நமக்குள் வரப்படும் பொழுது பிறர்படும் துயரத்தை அதிகமாகக் கேட்டால் அந்த
உணர்வுகள் நமக்குள் தூசி போன்று நம்முடைய ஒளியையும் மங்கச் செய்கின்றது.
யாராவது உங்களிடம்
கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்றால்
1.அடுத்த கணமே மகரிஷிகளின்
அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களுக்குள் பொருள்
காணும் சக்தி பெருகும் உங்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறுவீர்கள் என்று சொல்லி
விடுங்கள்…
3.திரும்பத் திரும்பச்
சொல்லுங்கள்…. உங்களுடைய உணர்வுகள் தான் அங்கு அதிகமாக வர வேண்டும்,
4.இந்த உணர்வுகள்
பதிவானால் அவருடைய இருளைப் போக்க உதவும்.
இல்லை என்றால் அந்தக்
குப்பை நம்மை மூடி விட்டால் நம்முடைய ஒளியை அது மங்கச் செய்துவிடும்.
நான் எவ்வளவு சிரமப்பட்டு
உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்தாலும் மனித வாழ்க்கையில் வரும்
உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் இப்படி வந்துவிடும்.
குடும்பங்களில் பெண்களைத்
திருமணம் செய்து கொடுத்து இருப்பார்கள். சந்தர்ப்பத்தில்
அவர்கள் இம்சைப்படுவார்கள். கணவன் அவருடைய சாப அலைகளால்
நன்மை ஏற்பட விடாதபடி மனைவிக்குப் பல தீமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
அந்தச் சாப அலைகளின்
இயக்கம் வரும் போது பெண்களை மகிழ்ச்சியாக அங்கே வாழ விடாது செய்யும். நாம் கட்டிக் கொடுத்த பெண் அங்கே வேதனைப்பட்டால் நம் நிலை
எப்படி இருக்கும்…?
அந்த உனர்வின் வேகங்கள்
கூடும் போது பொழுது நான் இருளைப் போக்கும் நிலையாக உயர்ந்த சக்தியைக் கொடுத்தாலும்
அதை மறைத்து விடும். நல்லதை எடுக்கும் திறன் இழந்து விடுவோம்.
நான் செய்தேன்… இருந்தாலும் என்னால் எங்கே முடிந்த்து…?
எதை எடுப்பது…? என்ன செய்வது…? என்று
முடியாத நிலைகள் வந்த பின்… அடுத்தாற்போல் என்ன
நினைப்பார்கள்…!
செத்த பிற்பாடு என்ன ஆகப்
போகின்றோம்…? போகட்டும் போ…!
என்று இந்த உணர்வின் தன்மை சோர்வடைந்து சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது.
ஆகவே… இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே
வருகின்றது.
மற்றவரிடத்திலோ நண்பரிடத்திலோ
உறவினர்களிடத்திலோ இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் வேகங்கள் கூடும். அந்த நண்பன் தியான வழியில் இருந்தாலும் இந்த வளர்ச்சி அதிகமாகப்
போகும் பொழுது இதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.
இந்நேரம் வரை உபதேசித்த
உணர்வின் ஆற்றலை…
1.அகண்ட உலகையும் இருண்ட
நிலைகளை நீக்கிய உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை இவ்வளவு தூரம் உபதேசித்து
2.பல வருடம் யாம்
கஷ்டப்பட்டு வளர்த்த உயர்ந்த வித்தை உங்களுக்குள் ஊன்றினாலும் இதை அது மறைத்து
விடும்…
3.சோர்வும் விரக்தியும்
தான் ஏற்படும்.
இதைப் போன்ற நிலைகளை
மாற்றுவதற்குக் “கூடுமானவரை மற்றவருடைய துன்பங்களைக் கேட்டறிவதைத்
தவிர்க்க வேண்டும்…”
அப்படி அவர்கள்
சொன்னாலும் அடுத்த கணமே மகரிஷியின் அருள் ஒளி நீங்கள் பெறுவீர்கள் குடும்பத்தில்
இருள் நீங்கும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறுவீர்கள் என்ற இந்த உணர்வினைத்
திரும்பத் திரும்ப எண்ணி எடுத்தல் வேண்டும்.
1.நாம் எடுத்த நல்ல
உணர்வை அவர்கள் உணர்வு மறைத்திடாது
2.நினைவு கொண்டு அதை நாம்
மாற்றுதல் வேண்டும்.
ஒரு சிலர் கஷ்டம் வந்து
விட்டால் அதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களுக்குள்
அது வரப்படும் போது அதனால் சோர்வடைந்து நீங்கள் போகும் பாதையை தடைப்படுத்தி விடும்.
அவ்வாறு ஆகாதபடி தடுப்பதற்குத்
தான்
1.யாம் உபதேசம்
கொடுக்கப்படும் பொழுது அந்த இருளான நிலைகளை இது மறைக்கும்.
2.அப்படி மறைத்துத்
திரும்ப இந்த உயர்ந்த உணர்வுகளை அதனுடன் இணைத்து மீண்டும் இயக்குவது.
3.தீமை உங்களுக்குள்
அடைத்திடாது அதை அகற்றும் உணர்வுகளை “அடுக்கடுக்காகச் செயல்படுத்திக் கொண்டே வருவது…”
இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத்
தெரிந்து கொண்டு எம்முடைய உபதேசங்களை அடிக்கடி நீங்கள் கேட்டுப் பதிவாக்கி… உங்கள் நல்ல அறிவை எந்த்த் தீமையும் மறைத்திடாது… வளர்ச்சியின் பாதையிலே தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்குத்தான் “திரும்பத் திரும்ப இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…”