
அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்
அகஸ்தியரும் அவர்
மனைவியும் தனக்குள் அறிந்த உணர்வுகளை இருவருமே ஒருவருக்கொருவர் பெற
வேண்டும் என்ற நிலையில் இரு உயிரும் ஒன்றி
வாழ்ந்தனர்.
1.உயிர் எவ்வாறு மின்னல்
போன்ற மின்னிக் கொண்டிருந்ததோ இதைப் போல
2.தன் உடலில் உள்ள
அணுக்கள் அனைத்தையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்து எதனின் ஈர்ப்பிலும் சிக்காது
3.இரு உயிரும் ஒன்றாகி
இரு உடலில் விளைந்த உணர்வுகளும் ஒன்றாகி
4.இந்தப் பிரபஞ்சத்தில்
உருவாகும் சக்திகள் அனைத்தும் நம் பூமிக்குள்
வரும் அந்தத் துருவதிலே நின்று அதனை ஒளியின் கருவாக உருவாக்கி
5.இன்றும் தங்கள்
வாழ்க்கையில் அழியாத நிலைகள் கொண்டு “துருவ மகரிஷியாக…”
வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்
அந்தத் துருவ மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் அருள்
சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்
நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி நாம்
ஏங்கித் தியானிப்போம்.
துருவ மகரிஷிகளின் அருள்
சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து
எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
ஏங்கித் தியானிப்போம்.
சப்தரிஷி மண்டலங்களாக
இயங்கிக் கொண்டிருக்கும் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வலைகள்
1.உங்கள்
புலனறிவுக்குள் ஈர்க்கப்பட்டு உங்கள் உடலுக்குள் ஊடுருவதும்
2.அதனைப் பின் தொடர்ந்து
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியும் உங்கள் புலனறிவிலே
ஈர்க்கப்பட்டு
3.உங்கள் உடலில் உள்ள
அணுக்களில் அது இணையும்.
அந்த உணர்வின் ஒளிகள்
இணைந்து வருவதை உங்கள் நினைவிலே உணர முடியும். உங்களுடன்
இணை சேர்க்கும் பொழுது அதன் உணர்ச்சிகளை உங்கள் உடலில் உணர முடியும்.
உங்கள் எண்ண உணர்வுகள்
அனைத்தும் இணைந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்தி உங்கள்
ஈர்ப்பிற்குள் வருவதும்… உங்கள் நினைவலைகள் துருவ நட்சத்திரத்தின்
ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வருவதையும்… அங்கிருந்து உங்கள்
உடலுக்குள் பாய்வதையும் உணரலாம்.
1.மீண்டும் மீண்டும்
உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்திற்குள் சுழன்று வருவதும்
2.அந்த உணர்வுகளை
நீங்கள் நுகரும் பொழுது உங்கள் சுவாசங்களில் பல ஆற்றல்கள்
உயிரிலே ஈர்க்கப்பட்டு
3.நுகரும் போது அந்த
அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்தி உங்கள் உடலுக்குள் ஊடுருவி அனைத்து அணுக்களிலும் அது கவரப்படும் பொழுது
4.துருவ
நட்சத்திரத்தின் ஒளி அலைகளை விண்ணிலே எப்படிக் காண முடிகின்றதோ அதைப்போல
5.உங்கள் உடலுக்குள்ளும்
அந்த உணர்வுகள் ஒளியாகப் பரவுவதைக் காணலாம்… காட்சியாகவும் தெரிய வரும்.
5.இப்பொழுது சப்தரிஷி
மண்டலங்களின் சக்தியும் காட்சிகளாக
உங்கள் உணர்வுகளிலே தென்படும்.
வான மண்டலத்தில்
வெளிப்படும் பல வர்ணங்களைக் காட்சியாகவும் உங்கள் உணர்வுகளில் நுகர்ந்து அது
மாற்றி அமைக்கும் சக்திகளை உங்களுக்குள் உணரலாம்.
யாம் உபதேசித்த உணர்வுகளை
உங்களுக்குள் பதிவாக்கிய நிலையில்… அண்டத்தில் நமது பிரபஞ்சம் நட்சத்திர
இயக்கங்களுடன் சுழன்று தனிப் பிரிவாகச் சுழல்வதை இப்பொழுது நுகர முடியும். உங்களுக்குள் அந்த உணர்வு தென்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.
பிற மண்டலங்களில் இருந்து
வருவதை நட்சத்திரங்கள் ஈர்த்து ஒளிப்பிளம்புகளாக வெளிப்படுத்தும் போது பல வித
வர்ணங்களாக வருகின்றது.
அந்த நட்சத்திரங்கள்
உமிழ்த்தித் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வுகள் மோதப்படும் பொழுது பல பல வண்ணங்கள்
உருமாறி பல பல வண்ணங்களாக மாற்றமடைந்து
1.அணுத்தன்மையாகப்
பிரபஞ்சத்தில் மிதந்து வருவதையும் அதைக் கோள்கள் நுகர்வதையும்
2.கோள்கள் நுகர்ந்து
வெளிப்படுத்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவருவதையும்
3.சூரியன் கவர்ந்து
அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டுத் தன் ஒளிப்பிளம்பாக மாற்றும் நிலைகளையும்
நீங்கள் பார்த்திருக்கலாம்.
வான மண்டலங்களில்
நட்சத்திரப் பொறிகளின் இயக்கத்தையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பல வர்ணங்களில் வெளி வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
1.அந்த வர்ணங்கள்
பூமிக்குள் புகுந்து பாறைகளுக்குள் ஊடுருவதையும்
2.பிளந்து…
அதாவது ஒரு குகைக்குள் நாம் நுழைவது போன்று நினைவாற்றல்
வந்திருக்கும்.
அதே சமயத்தில் பூமிக்குள்
கொதிகலனாகச் சேர்ந்து மாற்றம் அடைந்து இருப்பதையும் பூமியில் எதிரொலிகள் உள்ளே
நிலநடுக்கங்கள் வருவதையும் உணர்ந்திருக்கலாம்.
அதனின் விரிவாக்கங்கள்
உங்கள் உடலுக்குள் ஊடுருவி
1.அண்டத்தில் இருப்பது
பிண்டத்திற்குள் அணுக்களாக மாற்றமாகி
2.துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது பளீர்ர்… என்று வெளிச்சமாக உங்கள் உடலுக்குள் தெரிந்திருக்கும்.
இது எல்லாம் தெரியவில்லை என்று யாரும் சோர்வடைய வேண்டாம். எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள முடியும் எல்லோருக்கும் இந்த உணர்வுகள்
கிடைக்கும்படி அதை இணைத்து அந்த வளர்ச்சிக்குக் கொண்டு வருகின்றோம்.
செடிக்கு உரமிடும் பொழுது
அதைத் தன்னுடன் இணைத்துத் தன் இனமான சக்தியைக் கவரும் பொழுது அது சீராக
வளர்கின்றது. அதைப் போல்
1.அனைவரும் அகஸ்தியன்
கண்ட விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.அந்த நம்பிக்கையில்
தான் சொல்கிறேன்.
எமது குருநாதர் அண்டத்தின்
ஆற்றலைப் பெற எமக்குப்
பயிற்சியாகக் கொடுத்தார். அவர் காட்டிய வழியில் அண்டத்தையும்… பிரபஞ்சத்தையும்… புவியின் ஈர்ப்பையும்…
1.அண்டத்தில் இருப்பது
இந்தப் பிண்டத்திற்குள் அணுக்களாக எப்படி மாற்றம் அடைகின்றது என்பதையும்…
2.துருவ மகரிஷி
தனக்குள் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றியதையும்
3.அதன் உணர்வைப் பின்
வந்த மனிதர்கள் ஏழாவது நிலையாகப் பெற்றுச் சப்தரிஷி
மண்டலங்களாகச் சுழண்று கொண்டிருப்பதையும்…
4.இந்தப்
பிரபஞ்சத்திற்குள் தனி சுழற்சியாக அது சுழன்று
கொண்டிருப்பதையும் காண முடியும்.
நாளுக்கு நாள்
உங்களுக்குள் தெளிவடையும் நிலையாக இது வளர்ச்சியடையும். அதை அறிந்திடும் அறிவும் வளரும்.
தியானமிருக்கும் பொழுது
உங்கள் அனைவருக்குமே ஒரு மிதப்பது போன்ற உணர்ச்சி தோன்றி இருக்கும் வான மண்டலத்தை
நோக்கி மேலே மிதப்பது போன்று தோன்றியிருக்கும். புவியீர்ப்பின் பிடிப்பைக் கடந்து எடை குறைந்ததாகத்
தெரியவரும்.
அகஸ்தியன் தான் பெற்ற
சக்திகளைத் தன் மனைவிக்கு எப்படிப் பெறச் செய்தாரோ மனைவி பெற்ற நிலையை மீண்டும்
அவர் பெற்று இருவரும் ஒன்றாக இணைத்து மாற்றமடையச் செய்த அந்த அருள் சக்தியைத்
1.தியானத்தில்
அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவருமே பெற்று நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
2.உடலை விட்டுப் பிரிந்து
சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த முடியும்.
3.விண் செலுத்தி அந்த
ஆற்றலைப் பெறும் பொழுது கணவன் ஒளிச் சரீரம் பெற்றதும் அதே போல் மனைவி ஒளிச் சரீரம்
பெற்றதும் தெரிய வரும்.
ஏனென்றால் கணவன்
உணர்வுகள் மனைவியிடம் உண்டு மனைவியின் உணர்வுகள் கணவனிடம் உண்டு. யாரும் பிரிந்தில்லை.
அதன் வழி எடுக்கும் அந்த
ஆற்றல் பெருகும் போது அதன் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைச்
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து மனித வாழ்க்கையில் கணவன் மனைவி எவ்வாறு ஒன்றி வாழ்ந்தார்களோ அதைப்
போன்று “இரு உயிரும் ஒன்றாகிப் பெரு வாழ்வு வாழும் ஒளியின்
சரீரமாக வாழும் நிலையாக மாற்றிக் கொள்ள முடியும்…”
இந்தத் தியானத்தில்
எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு இரவு முழுவதும் வான மண்டலத்தில் உங்கள்
நினைவுகள் சஞ்சரித்து
1.வானஇயல் புவியியல்
உயிரியல் என்ற அடிப்படையில் நினைவு கொள்ளும் பொழுது பல அற்புதங்கள் விளையும்.
2.உங்கள் உடலில் உள்ள
பிணிகள் குறையும்… மன பலம் பெறுவீர்கள்… அருள் ஞான உணர்வுகள் வளர்ச்சி பெறும்
அந்த நிலை நீங்கள்
அனைவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.