ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2025

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா


ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம் அந்த வேதனையான உணர்வை நுகர்ந்தோம் என்றால் உயிரான விஷ்ணு உள்ளே புக வரம் கொடுக்கின்றான்…”
 
ஆனால் உள்ளே சென்ற பின் வேதனைப்படுத்தும் அணுவாக உருவாகி விடுகின்றது. அந்த வேதனைப்படும் உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.மனிதனை உருவாக்கி அணுக்களுக்குள் அது கலந்து விடுகின்றது.
2.மனிதனை உருவாக்கிய அணுக்கள் தான் தேவாதி தேவர்கள் என்பது.
 
மனித உடலை உருவாக்கிய தேவர்கள் வேதனை என்ற உணர்வைக் கண்ட பின் எங்களால் எதையும் செயல்படுத்த முடியவில்லை…” என்ற வேதனையுடன் சிவனிடம் வருகின்றனர்.
 
இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து எங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்…!” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றார்கள்.
1.வேதனையான உணர்வுகளை நுர்ந்தால்
2.முதலில் உடலிலே தான் அந்த வேதனை தெரிய வரும்.
 
மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் தேவாதி தேவர்கள் என்று நாம் அறியும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.
 
சிவனிடம் எல்லோரும் வந்து முறையிடும் பொழுது நான் என்ன செய்வேன்…? வருவோர் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய செயல்…”
 
வை அனைத்தும் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான். நாம் விஷ்ணுவிடம் கேட்போம் என்று எல்லா உணர்வுகளும் சேர்த்து உயிரான விஷ்ணுவிடம் வேண்டும்படி வருகின்றார்கள்.
 
விஷ்ணுவிடம் கேட்டாலோ எனக்கு வரம் கொடுக்கத் தான் தெரியும் பிரம்மன் அல்லவா உருவாக்குகின்றான் அவனிடம் கேட்போம்…!” என்று அங்கே வருகின்றார்கள்.
 
பிரம்மாவோ என் தந்தை சொல்படி நான் உருவாக்கித் தான் ஆக வேண்டும்.
1.அப்படி உருவாக்கவில்லை என்றால் உலகம் எப்படி உருவாகும்…?” என்று
2.நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு காரணப்பெயர் வைத்து இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.
 
இருப்பினும் இதிலிருந்து விடுபட யாரிடம் கேட்பது…?
 
விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் மூன்று பேரும் சேர்ந்து இந்த உடலுக்குள் இருக்கும் தேவாதி தேவர்கள் மனித உடலை உருவாக்கிய அனைத்து உணர்வும் ஒன்று சேர்த்து யாரிடம் கேட்பது…? என்ற நிலைகளில் எண்ணி ங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
கண்கள் தோன்றிய பின்பு அந்தக் கண்களால் தான் உற்றுப் பார்த்துப் பல தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருப்பவன் துருவ மகரிஷி.
 
தீமைகளை எல்லாம் அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால்
1.அது “ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!”
2.அவனிடம் கேட்டால் வழி கிடைக்கும் என்று நம் கண்கள் (கண்ணன்) உணர்த்துவதாகக் காட்டுகின்றார்கள்
 
வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம்… நமக்குள் அந்த வேதனை வருகின்றது. இதை நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்தால் வேதனை என்ற அந்த விஷத்தை நீக்க முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.
 
அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்தப்படும் பொழுது
2.வேதனையான உணர்வு வராது தடுக்கும் நம்மைச் சிந்திக்கும்படி செய்யும்.
 
உடலுக்குள் வரும் வேதனையை அடக்கி எந்த வேதனையான உணர்வுகளை உற்று நோக்கிக் கவர்ந்தோமோ அவர்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனைப்படும் அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.
 
ஆகவே… வேதனையை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.
2.உடலுக்குள் அது சென்று தீமையை வென்றிடும் பிரம்மனாகி விடுகின்றது.
3.தீமையை அகற்றிடும் உணர்வின் வலுவாகும் பொழுது சிவனான உடலுக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.
 
இதனைத் தெளிவாக்குவதற்குத் தான் குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று காட்டினார்கள்.
 
குரு விஷ்ணு நம் உயிர் எல்லாவற்றிற்கும் குருவாக இருக்கின்றது. குரு பிரம்மா நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அந்த குணத்தின் தன்மைகள் குருவாக இயக்கும். குரு சாட்சாத் மகேஸ்வரா எல்லாவற்றையும் உருவாக்கும் அந்தச் சக்தி மனித உடலுக்குள் உண்டு என்பதை
1.மனிதனானவன் அவன் தன்னைத்தானே தான் வணங்கி தனக்குள் எவ்வாறு உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும்…? என்று
2.குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று இதைத் தெளிவாக்கி நாம் தெரிந்து கொள்ளும் சக்தியாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
 
இதன் வழி உங்கள் வாழ்க்கையில் உங்களை நீங்கள் அறிந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வளர்ந்து தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற எது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.