ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 26, 2025

கண்ணுக்குத் தெரியாதபடி… “அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி” யாரும் எதையும் செயல்படுத்த முடியாது

கண்ணுக்குத் தெரியாதபடி… “அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி” யாரும் எதையும் செயல்படுத்த முடியாது


உதாரணமாக சோர்வான எண்ணத்தை நாம் எடுக்கிறோம் என்றால் இந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… “ஹூம் என் உடலுக்கே முடியவில்லை…” என்று வந்து விடுகிறது.
1.சோர்வை வலுவாந பின் உடலுக்கு முடியாது போய் விடுகின்றது.
2.மீண்டும் அதிகமான நிலைகளில் வேதனையை ஊட்டும்
 
அந்தச் சோர்வின் வலிமை வரும் பொழுது அது அர்ஜுனன். அந்த உணர்வினைக் கண்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது
1.அங்கே அந்த வேலைக்குப் போமுடியாது…! சரி நீ இரு…! என்று
2.இந்த உணர்வினை உபதேசித்து அதாவது இந்த உடலுக்கு தக்கவாறு அந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றார்.
 
நாம் எடுத்துக் கொண்ட நினைவின் அலைகள் எதுவோ அதிலே எதிர் நிலைகள் தாக்கப்படும் பொழுது அந்த நிலை வந்து விடுகின்றது.
 
அதே சமயத்தில் மகிழ்ச்சியாக இருந்து ஒரு காரியத்தைச் செயல்படப் போகும் போது “ஒரு வேண்டாத எதிரி அங்கே வருவான்…” என்றால் அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு
1.மகிழ்ச்சியான உணர்வுடன் மோதப்படும் பொழுது ஆத்திரத்தைத் தூண்டுகின்றது.
2.என் வலுவான எண்ணங்கள் கொண்டு அயோக்கியன் போகின்றான் பார்…” என்ற எண்ணத்தை எனக்குள் உணர்த்தி உபதேசிக்கின்றது.
3.அவரிடம் போனால் ஏதாவது செய்துவிடுவான் அதனால் நீ இப்படித் தப்பிச் சென்று விடு…! என்று வழிகாட்டுகின்றது.
 
ஒருவன் பால் எதிரியாக இருக்கிறோம் என்றால் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையைப் பார்த்த பின் எதிரி போகின்றான் என்ற நிலையும் தனக்குள் வலுவான தன்னைக் காக்கும் எண்ணங்களைக் கண்கள் ஊடுருவி நீ இப்படிக் காத்துக் கொள்…” என்ற நிலையை இந்த ஞானத்தைப் போதித்து இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றான்.
 
இது தான் கீதா உபதேசம் என்று சொல்வது.
 
1.நமக்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வும் அர்ஜுனன்…! அவன் சகலகலா வல்லமை பெற்றவன்…! என்று
2.உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் அதிலே எதை எண்ணுகின்றோமோ அதனதன் வல்லமையை அது காட்டும்.
 
அந்த வல்லமைக்குத் தக்கவாறு எண்ணிய நினைவில் இந்தக் கண்ணன் வழிகாட்டி அதனுடைய நிலைகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைக் கண்ணின் இயல்பான நிலையும் நம் உடலுக்குள் அது இயக்குவதையும் வியாசக பகவான் காட்டுகின்றார்.
 
நம் உடலின் உறுப்புகளில் கண்ணின் நிலைகள் புழுவிலிருந்து வரப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து அதை வளர்த்து அந்த உணர்வின் தசையாக நமக்குள் உருவாகி அந்த மணத்தின் தன்மை கொண்டு நாம் எப்படிச் செயல்படுகின்றோம்…? என்ற நிலை தான் கீதா உபதேசத்தின் தெளிவான நிலைகள்.
 
கண்ணன் மகா ஞானி என்று சொல்கின்றோமே தவிர இந்தக் கண்ணன் யார்…? நமக்குள் சாரதியாக இருப்பது யார்…?
 
ரோட்டிலே சென்றாலும் நம் கண்கள் தான் சாரதியாக இருந்து வழி காட்டுகிறது.
1.இது மேடு இது பள்ளம்…!
2.இங்கே வேகமாக வண்டி வருகின்றது… அங்கே மாடு மிரண்டு வருகின்றது… ஆகவே இந்தப் பாதையில் நீ செல்
3.இங்கே உன்னுடைய எதிரி வருகின்றான் ங்கே உன் நண்பன் வருகின்றான் அவனிடம் நீ அணுகு
4.அவருடைய உதவி உனக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது யார்…?
5.நம்முடைய கண்ணான கண்கள் தான் ஒவ்வொரு நொடியிலும் அதை உபதேசிக்கின்றான்.
 
நமக்குள் இருக்கக்கூடிய குணம் கொண்டு கண்ணால் நாம் பார்க்கப்படும் பொழுது எதிரியின் வேகமான உணர்வுகளைக் கண் இழுத்தாலும் நமக்குள் இருக்கும் வலுவான எண்ணங்களுக்குள் அதைச் சமப்படுத்தும் பொழுது
1.அந்த உணர்வின் நினைவைத் தூண்டி வலுவான எண்ணங்களைக் கூட்டி
2.அதனுடன் இயக்கச் செய்யும் இந்த ஞானத்தை ஊட்டுகின்றது நமது கண் தான்.
 
அதைத்தான் கண்ணன் கீதா உபதேசம் செய்தான் என்று அவன் ஒரு பெரிய மண்டலத்தையே நமக்குள் அமைத்திருக்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பேரண்டத்தின் நிலைகள் இங்கே செயல்படுகின்றது என்று காட்டினார்கள்.
 
அதனால் தான் கண்ணன் சொல்கின்றான்…! என்னை அறியாது…” எச்செயலும் யாரும் செயல்படுத்த முடியாது என்று…!
 
நம் கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி யாரும் எதையும் செயல்படுத்த முடியாது.
1.எதைக் கூர்ந்து கவனித்தோமோ அந்த உணர்வின் சக்தியைப் படமாக்கி
2.அந்த உணர்வின் சக்தியை உடலாக்கி
3.அந்த உணர்வின் எண்ணங்களை உருவாக்கி வைப்பது இந்தக் கண்கள் தான்.
 
ஆகவே தான் கண்கள் தோன்றிய பின் ஒவ்வொன்றையும் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அதைப் படம் எடுத்து அந்த உணர்வின் சக்தி தனக்குள் வலுக் கூடி கூர்மை அவதாரமாக நாம் எண்ணிய நிலைகள்… அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உருமாற்றிக் கொண்டு வந்தது.
 
ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நம்முடைய கூர்மை அவதாரம் எதில் இருக்க வேண்டும் என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்து உணர்த்தினார்.
 
கீதாச்சாரம் என்ற நிலையில் அன்று வியாசக பகவான் எதை உணர்த்தினாரோ
1.அந்த உணர்வலைகள் நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
2.அவர்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தையும் நாம் பெற முடியும்.