
எல்லோரையும் காக்க வேண்டும் என்ற நிலை மாறி… “அழிக்க வேண்டும்” என்ற உணர்வே வளர்ந்து விட்டது
இந்த மனித வாழ்க்கையில்
இந்த ஆசை அந்த ஆசை என்று இருந்தாலும் அதனின் வளர்ச்சியில் உலகெங்கிலும் எத்தனையோ வகைகளில் எத்தனையோ நிலைகளில் போர்க்களங்கள் ஆகிக் கொண்டுள்ளது.
அதனால் ஆங்காங்கு வாழும் மக்களின் நிலை என்ன ஆவது…?
ஒவ்வொருவரும் தன்னைக்
காக்க எத்தனையோ விஷமான குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்து
1.தன் நாட்டைக் காக்கப் போகின்றேன்… அதை
வைத்து எதிரியை வீழ்த்தப் போகின்றேன் என்ற இந்த உணர்வை ஓங்கி வளர்த்து
2.அதேபோல மற்ற நாட்டவரும் எதிரிகளிடம் இருந்து காக்க அவனை அழிக்க வேண்டும் என்று அதை நுகர்ந்து
3.தன் உடலுக்குள்
இருக்கும் நல்ல குணங்களை அழித்து விடுகின்றான்.
இவன் உடலில் இருக்கக்கூடிய
நல்ல எண்ணத்தை இவன் அழித்தும்… பதிலுக்கு எதிரியை அழிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் நல்ல குணங்களை
அவன் அழித்திடும் நிலையாகவும் தான்
செயல்படுகின்றனர்.
1.ஆக… யாரைக் காக்க வேண்டும் என்று இப்படி எண்ணினார்களோ அவர்கள் யாரையுமே காக்க
முடியாது
2.அனைவருமே நல்ல குணங்களை
இழந்து மண்ணுடன் மண்ணாக மடியும் நிலைதான் வருகின்றது.
3.மடிந்தாலும் விஷ
பூச்சிகளாகப் பிறக்கும் நிலை தான் உருவாகிக் கொண்டுள்ளது.
எப்படி… எதனால்…?
விஷமான ஆயுதங்களைத் தயார்
செய்து வைத்துள்ளார்கள் அதை வெடிக்கும் போது சுட்டுப் பொசுக்கிப்
பாதிப்பாகும் பொழுது அதனால் ஏற்படும் வேதனையான உணர்வுகள்
1.எந்தெந்த விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றனரோ அதற்கொப்ப
இறந்து விடுவோமே என்ற வேகத்தில் அதை எல்லாம் சுவாசிக்கப்படும் பொழுது
2.குண்டுகளாக் நம்மை அழித்து விடுவான் சுக்குநூறாக ஆக்கி விடுவான் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு
3.அதனின் பய உணர்வுகள்
கொண்டு அதனால் தாக்கப்படும் பொழுது இந்த உடலை அழித்து
4.அந்த உணர்வு தாங்கிய
தன்மையாக மனிதன் இறந்த பின் விஷப் பூச்சிகளாகத் தான் இனி பிறக்க வேண்டி வரும்.
“யுத்தங்கள் நடக்கும்
பகுதிகள் அனைத்திலும்” மனிதர்களாக இருப்பவர்கள் அங்கே இறந்து விட்டால் விஷப் பூச்சிகளாகப் பிறக்கும் நிலையைத் தான் அடைகின்றார்கள். யாராக இருந்தாலும் சரி…!
ஏனென்றால் பாலிற்குள்
விஷத்தை ஊட்டினோம் என்றால் அதைக்
குடித்தால் நம்மை நினைவை இழந்து மடியச்
செய்கின்றது.
இதைப் போன்று தான் மனிதனுடைய ஆசை அலைகள் அனைத்துமே அழிந்து இனி எந்த நிலை ஆகப்போகின்றோமோ என்ற நிலையில் எதிரிகளின் பால் நினைவைச்
செலுத்தி அவர்கள் வீசும் குண்டுகளினால் தன்னை அழித்து
விடுவான் என்ற நிலையில் நல்ல உணர்வுக்குள் இத்தகைய விஷமான உணர்வு இணையப்படும்
பொழுது அதன் அறிவுகள் உடலுக்குள் இது ஊடுருவித்
தாக்கப்பட்டுச் சுக்குநூறாக்கிவிடுகிறது.
இந்தக் குறுகிய காலத்திலே
விளைந்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தின் ஆற்றல் கொண்ட ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டு அதன் வழி உடலாகப் பெறப்படும் பொழுது
1.அடுத்து நல்ல உடல்
பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
2.இந்தப் பூமி விஷமான நிலையிலிருந்து நல்ல நிலை பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
3.அப்படி நல்ல நிலை பெற்று
அதிலே மீண்டும் மனிதர்களாக வரக்கூடிய எக்காலம்…? என்றும்
சொல்ல முடியாது.
இப்பொழுது இருக்கக்கூடிய
காலத்திலே எத்தனை சுகபோகங்களை அழித்தோமோ எத்தனை
வேதனைகளை அனுபவித்தோமோ எந்த வேதனையை வளர்த்துக் கொண்டோமோ வேதனை உருவாக்கும்
உணர்வின் தன்மைகள் இந்த உயிரிலே ஒன்றிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும் “வேதனைப்பட்ட நிலையிலிருந்து நாம் மீளவே முடியாது…”
1.உயிருடன் இந்த
வேதனை துடித்துக் கொண்டு தான்
இருக்கும்.
2.அந்த வேதனையின்
உணர்வின் இயக்கங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
இப்பொழுது உடலில்
இருக்கும் பொழுது உணர முடிகின்றது உடலின் துணை கொண்டு. சந்தர்ப்பத்தால் அதை மாற்றி அமைக்கவும் முடிகின்றது மனிதனாக
இருக்கும் பொழுது தான் மாற்றவும் முடியும்.
ஆனால் மனித உடலில் நீக்க
முடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த வேதனையான விஷம் உயிராத்மாவிலே சேர்க்கப்படும் பொழுது எப்பொழுதுமே விஷத்தன்மை கலந்ததாக இயக்கி “நம்மை வேதனையால் துடிக்கும்படி செய்து விடும்…”
அப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தான் இப்பொழுது வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து
1.நல்ல நினைவிருக்கும்
பொழுதே மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று விஷத்தன்மைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
2.அதற்குத்தான் இதை
எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது.