ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2025

“தன் இனம்” பெருக வேண்டும் என்பதற்குத்தான்… ஞானிகள் தான் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்

“தன் இனம்” பெருக வேண்டும் என்பதற்குத்தான்… ஞானிகள் தான் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்


விஞ்ஞானிகள் இன்று மண்ணுக்குள் பதிந்திருப்பதை காந்தப் புலனறிவு கொண்ட ஒரு டப்பாவில்” வைக்கின்றான். இது… பூமியில் இருக்கும் இந்த உணர்வுகள் எதனுடன் கலந்ததோ அதன் இனத்தைக் காற்றிலிருப்பதை அது ஈர்க்கும்…”
 
அதைக் கண்டு கொள்வதற்காக மேலே விமானத்திலே பறந்து
1.அதிலிருந்து ணர்வலைகளை ஊடுருவிப் பாய்ச்சப்படும் போது ஈர்க்கும் சக்தியை அதிகமாகின்றது.
2.அதற்குள் இருக்கும் அளவுகோல் மானிகளை இதனுடன் இணையச் செய்து
3.பூமிக்குள் இன்ன இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் இன்னது இருக்கிறது என்பதை விஞ்ஞானி அறிகின்றான்.
 
ஆனால் அன்று ஆதியிலே அகஸ்தியன் தாய் கருவிலேயே” விஷத்தை அடக்கும் உணர்வுகள் கொண்டு விளைகின்றான். பிரபஞ்சத்தில் உருவாகும் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றான்… துருவன் ஆனான்.
 
1.வாலையும் புவியலையும் உயிரியிலையும் கண்டறிந்த பின் உயிரியலின் ஆற்றலைப் பெருகும் நிலையும்
2.நம் பூமியில் பரவிக் கிடந்த பல கோடித் தாவர இனங்களின் வலிமை கொண்டு அந்த எண்ணங்கள் கொண்டு தன்னை அறியும் ஆற்றலும்
3.இது எந்த வகையில் வந்தது என்று துருவத்தினை நுகரப்படும் பொழுதுதான் விண்ணின் ஆற்றலைத் துருவன் நுகர்கின்றான்.
4.இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகிறது…? என்பதையும் காண்கின்றான்
5.இந்தப் பிரபஞ்சத்திற்கு மூல காரணமாக எது எது இயக்குகிறது…? என்று தனக்குள் அறிகின்றான்.
 
அதே சமயத்தில் இந்தப் பேருண்மைகளை நம் குருநாதர் எப்படி அறிந்தார்…?
 
1.துருவத்தைப் பின்பற்றுகின்றார் துருவனின் உணர்வைக் கவர்கின்றார்.
2.கவர்ந்த உணர்வின் தன்மை அவருக்குள் அறியும் ஆற்றலாக வருகின்றது.
 
அதன் உணர்வை வளர்த்துக் கொண்ட நிலை தான் எமது பாலும் அந்த உணர்வின் கருக்களைப் பதியச் செய்து அந்தக் கருவின் வித்தினை நினைவு கொள்ளும் பொழுது அதன் உணவை நானும் நுகர முடிகின்றது அறிய முடிகின்றது.
 
அதிலே  விளைந்த உணர்வின் வித்தை இப்பொழுது சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அதை நீங்கள் கேட்கும் போது ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உலகை அறிய முடிகின்றது உங்களைக் காக்கும் உணர்வும் வருகின்றது.
3.இந்த இரண்டையும் பிணைத்துத்தான் இப்போது உபதேசமாகக் கொடுக்கின்றோம்.
4.குருநாதர் எமக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதன் வழியே தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
 
ஏனென்றால்… மனிதனாகப் பிறந்த பின் கார்த்திகேயா பல கோடி உணர்வுகளிலிருந்து எதிரி வருகிறது என்று அந்த உணர்வால் அறிகின்றது… உணர்வின் வலுவை அறிகின்றது… அதனின் உணர்வைத் தனக்குள் கவருகின்றது... விளைந்த பின் அதிலிருந்து தப்பிக்க எண்ணுகின்றது அதன் வலுவும் கூடுகின்றது.
 
இவை அனைத்தும் இணைந்து எதனை உற்றுப் பார்த்துக் கூர்மையானதோ அதனின் வலிமை இதற்குள் விளைகின்றது. இந்த நினைவு ஓங்கி வளர்கின்றது.
 
வலிமையாகி உடலை விட்டுச் சென்ற பின் எதைக் கூர்மையாக எண்ணியதோ அதன் உடலுக்குள் சென்று அதன் வலிமை கொண்டு அதனின் உருவமாக மாறுகின்றது” என்று இதையெல்லாம் காவியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.
 
கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரத்தில் உயிரின் உணர்வுகள் எதைக் கூர்மையாகக் கண்களால் உற்று நோக்கி வலிமையாக்கிக் கொண்டதோ அதன்படி அந்த வலிமை பெறுகிறது என்று வியாசகர் அதை உணர்த்துகின்றார்.
 
கண்ணின் உணர்வுகள் அனைத்துடனும் இணைக்கப்பட்ட நிலையில்
1.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதனை நினைவுபடுத்துவதற்குத் தான் வியாசகரைப் பகவான்… என்றார்கள்.
2.காரணம் அதைக் கண்டுபிடித்து உருவாக்கியவன் அவன்.
 
கண்ணைக் கண்ணன் என்றாலும் கண்கள் பெற்ற உணர்வினைத் தனக்குள் நுகர்ந்தறிந்து பரமாத்மா. இந்தப் பரமில் உள்ள அனைத்திலும் கலந்துள்ளது. ஒவ்வொரு உயிரினங்களும் கண்ணின் நினைவாற்றல் கொண்டு கவர்ந்து அந்த உணர்வின் நிலையாக விளையச் செய்து ரமான பூமியில் பரமாத்மாவாகக் கலந்துள்ளது.
 
கண்ணின் செயலாக்கங்கள் உருவாக்கப்பட்டு
1.மீண்டும் இந்தப் பூமியில் படர்ந்திருப்பது மனிதனுக்குள் பரமாத்மாவாக மாறுகின்றது.
2.பூமிக்குப் பரமாத்மாவாக மாறுகின்றது… நமக்குள் பரமாத்மாவாக இயக்குகின்றான்.
 
வியாசகரால் உணர்த்தப்பட்ட உண்மை இது…!
 
காரணம் ஞானிகள் கொடுத்த காரணப் பெயர்கள் அனைத்துமே தெளிவானதே. தான் கண்டுணர்ந்ததைத் தன் இனங்கள் பெருக வேண்டும் என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.