
யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”
விஞ்ஞானி ஒரு பொருளைச்
செய்கிறான் என்றால்… அதிலே இயக்கம் தடைப்படும் பொழுது
1.அந்தத் தடைக்குண்டான
காரணத்தைக் கண்டறிவான்.
2.அதை நீக்க முயற்சி
எடுப்பான்.
ஆனால் தொழில் செய்து
கொண்டுள்ளவர்கள் அதைச் சரியாக இயக்கவில்லை என்றால் “எல்லாம்
போய்விட்டது… என்ன செய்வது…?” என்று விட்டு
விடுவார்கள். பின் அதைத் தெரிந்தவர்கள் வந்து தான் சரி செய்ய
முடியும்.
இதைப் போல
1.உங்களுக்குள் அந்த
அருள் ஞானத்தின் உணர்வுகளை அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை பதிவான பின்…
2.அந்த நினைவைக் கொண்டு
வந்தால்…
3.வாழ்க்கையில் வரும் எந்தக்
குறைகளோ அதை நீக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெறுகின்றது.
அதைப் பெறச் செய்வதற்குத்
தான் இதை எல்லாம் உபதேசிப்பது.
குருநாதர் ஒவ்வொரு
நிமிடமும் காடு மேடல்லாம் அலையச் செய்து…
ஒவ்வொன்றும் எப்படி உருவானது…? என்று அந்த அகஸ்தியனைப் பற்றிக்
கடைசி வரையிலும் கொண்டு வந்து… துருவன் அகண்ட உலகத்தைக்
கண்டபின் இந்த உணர்வுகள்
1.“உலகம் எப்படி
உருவானது…?” என்ற நிலையைக் காட்டப்படும் பொழுது என்
நினைவுகள் இழந்து விட்டது.
2.”விட்டு அடித்தால்”
(அந்த நேரத்தில் குருநாதர் எம்மை அடிக்கின்றார்) என் உடலில் “ஜிர்ர்…ர்ர்…” என்று சுருதி ஏறுகின்றது.
3.அவரின் நினைவுகள் வருகிறது… மற்ற தீமைகளை அகற்றும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.
இப்பொழுது நீங்கள் கூடச்
சொல்லலாம். உங்கள் கஷ்டத்தை என்னிடம் சொல்லும் பொழுது
எனக்கு “ஜிர்ர்…ர்ர்…” என்று கோபம் வரும். அந்த உணர்வு என்ன செய்கிறது…?
1.நீங்கள் சொல்லக்கூடிய
கஷ்டம் எனக்குள் புகாதபடி முதலிலே தடைப்படுத்துவது.
2.தடைப்படுத்திய பின் அதே
உணர்வின் தன்மை தீர்க்கப்படும் பொழுது
3.அவன் அறியாது இடும்
சாப அலைகளை உணர்வான்… அவன் நொறுங்கிப் போவான் என்ற நிலைகளைச்
சொல்வது.
4.இந்த உணர்வுகள் அங்கே
தாக்கப்படும் பொழுது… “கஷ்டம் என்று
சொல்பவருடைய” உணர்வின் வேகத்தைக் கூட்டுவது.
அதாவது…
1.கஷ்டமான உணர்வுகளை எனக்குள்
வராது தடுப்பதும்
2.உணர்வின் வேகத்
துடிப்பு கொண்டு நான் அழுத்தமாகச் சொல்லும் பொழுது
3.எதைக் குறை கூறுகின்றாரோ
அவருடைய நினைவைக் கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது
4.“இந்த உணர்வுகள் ஆழமாகப்
பதியும்…! சொல்வோர் உணர்வுகளில்…!”
5..அடுத்து… யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அங்கே நல்லதாக வளர்ச்சி பெறும்.
ஆகவே… “யாம் வெளிப்படுத்தும் இந்த வேகத் துடிப்பு” யார் எதைச் செய்தாலும் உடனடியாக அதை நல்லதாக மாற்றும்.
ஸொல்வது
அர்த்தமாகிறதல்லவா…!
ஆனால் இதைப் பார்த்த பின்… என்னடா…? சாமிக்குக் கோபம் வராது என்று
சொல்கின்றார்கள். சாமிக்கே இங்கே “இப்படிக்
கோபம் வருகிறது என்று…!”
“எனது கோபம்” எதைத் தடுக்கிறது…? தீமைகள் உங்களுக்குள் வராதபடி
உணர்வின் வேகத் துடிப்பாக வருகின்றது.
ஆனால் “உங்களுடைய கோபமோ…”
1.மற்றவர்கள் எந்தத்
தீமையைச் செய்தாரோ அந்த தீமையே உங்களுக்குள் விளைந்து
2.அவர்களைப் பொசுக்க
வேண்டும் என்ற உணர்வாக வருகின்றது.
மீண்டும் தெளிவாக்குகின்றேன்…! தீமை எனக்குள் வராது தடுப்பதும்… அந்த
நினைவாற்றல் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பை அருள் மகரிஷிகள் உணர்வுகளைச் சொல்லித்
தீமைகள் வராது தீமை செய்வோர் எவரோ அவர்கள் உணர்வார்கள் என்று சொல்லப்படும் போது…
1.இந்த உணர்வின் தன்மை
வளர்ச்சி அடையப்படும் பொழுது அங்கே திருப்பம் வரும்.
2.எனக்கு இப்படி
ஆகிவிட்டதே…! என்ற உணர்வுகள் வரும் பொழுது திரும்பும்.
ஆனால் நம்முடைய உணர்வுகள் (தியானம் செய்த) அங்கே பாய்ச்சப்பட்டு… அவன் அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற வரிசைத் தொடரைச்
செய்யப்படும் பொழுது சிறுகச் சிறுகப் போய் அவன் உடலிலே விளையும்.
1.தீமைகளின் பாதிப்பால்… திரும்ப நன்மையை எண்ணி ஏங்குவான்.
2.அப்பொழுது நாம் இங்கே
எண்ணி… அது யாரோ… அந்த உணர்வின் தன்மை
எடுத்துக் கலந்து வெளியிட்டது அங்கே சென்ற பின்…
3.அவர்களுக்கு ஒரு “திருப்புமுனையாக” மாறும்.
அவர்கள் திரும்பி அதை
ஏங்கிப் பெறும் அந்தத் தகுதி ஏற்பட்டால் அங்கே வருகின்றது. இல்லை என்றால் என்னதான் சொன்னாலும் அங்கே எடுபடாது.
காரணம்…
1.விஷத்தால் ஒடுங்கப்படும்
பொழுது தப்பிக்கும் உணர்வுகள் வருகின்றது
2.தப்பிக்க ஏங்கும்
நிலையில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவான நிலையில்
3.”அதிலிருந்து விடுபட
வேண்டும்” என்ற உணர்வை நாம் கூட்டக் கூட்ட
4.இந்த உணர்வுகள் அங்கே
மறைந்திருந்து தன் (அவர்கள்) உணர்வை மாற்றி
அது திருப்புமுனையாக மாறும்.
அதனால் தான் சில நேரங்களில் உங்களிடம் யாம் கோபமாகப் பேசுவது.
ஆனால் வேறு விதமாக இதை
எடுத்துக் கொள்கின்றார்கள் சாமிக்கே இப்படிக் கோபம் வருகிறது… சாமிக்குக் கோபம் வரலாமா…? இப்படிப் பேசுகிறார் என்று…!
1.என் கோபம் யாரையும்
கெடுதலாக ஆக்காது.
2.தீமையான உணர்வுகள்
உள்ளே போகாது தடுக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை
அழுத்தமாகப் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வுகளை இயக்காது தடைப்படுத்தும்.
குருநாதர் அவருக்குக்
கோபம் வரும் பொழுதெல்லாம் “நான் அடி வாங்க வேண்டி வரும்…” என்னை அடித்த பின் அவர் சிரிப்பார். அப்புறம் விளக்கம் சொல்வார்.
1.உனக்குள் அந்தக்
கெட்டது வராமல் இருப்பதற்காகத் தான் நான் கோபித்தேன்
2.என் உணர்வு உனக்குள்
புகுந்து… கெட்டது நுழைய விடாது பாதுகாக்கும் என்பார்.
ஆனால் இப்பொழுது
இருக்கக்கூடிய நிலைகளில் (நீங்கள்) கோபமாகப்
பதிவு செய்து விட்டால்… இந்த உணர்வின் தன்மை எதிரியாகக்
கருதி விட்டால் எதிரியின் தன்மையாகத் தான் வரும்.
1.ஆனால் அந்தக்
கோபத்தின் தன்மை (சாமியின் கோபம்)
2.தன் இருளை நீக்க
உதவும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தால் இருளை நீக்கும்.
ஆகவே ஒவ்வொருவரும்
1.எதை இணை சேர்த்து
2.எதனுடன் கொண்டு
வந்தால் எதன் நிலை வருகின்றது…? என்று அறிந்து கொள்ள
வேண்டும்.
உதாரணமாக தீ (நெருப்பு) சுடுகின்றது. அந்தத் தீயை வைத்துத்தான் பல ஆக்கப் பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு
வேக வைக்கின்றோம். அந்த உணவுப் பொருள் சுடச் சுட வெந்து
வருகிறது.
ஆனாலும் அதை அப்படியே சூடாகச்
சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆசை
வருகின்றது…! கையை வைத்தால் சுரீர் என்று சுடுகின்றது. இருந்தாலும் அதை ஆற்றி ஆற்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அப்படிச்
சாப்பிடுகின்றோம்.
இதைப் போன்று தான்
1.அந்த அருள் ஞானிகள்
உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது சில மோதல் தன்மை வரும்.
2,அது நன்மை செய்யும்
சக்தியாக வருகிறது என்பதை உணர்தல் வேண்டும்.