ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2025

மாரி

மாரி


நமது சகஜ வாழ்க்கையில் பண்பும் பரிவும் அன்பும் பாசமும் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நோயுடன் வேதனைப்படுகிறார் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்து உணர்ந்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம்.
 
அவ்வாறு உதவி செய்யப்படும் பொழுது
1.அவர் உடலில் இருந்து விளைந்த நோயை நாமும் நுகர்ந்தறிவதனால் அதே உணர்வின் சக்தி நமக்குள் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
2.அது மாறி (மாரி) நமக்குள் தாயாக வந்து விடுகின்றது.
 
நாம் அடிக்கடி அந்த நண்பனை (நோயாளியை)ண்ணும் பொழுது நமக்குள் அந்த உணர்வின் வளர்ச்சி ஏற்பட்டு நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் சக்தியாக வந்து விடுகின்றது.
 
அது தான் மாரியம்மாள்…!
1.ஏனென்றால் அவர் கசந்த வாழ்க்கை வாழ்ந்தார்
2.அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையையும் கசந்த வாழ்க்கையாக உருவாக்கி விடுகின்றது.
3.ஆகையினால் தான் மாரியம்மன் கோவிலில் வேப்ப மரத்தை ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள்.
 
கசந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நோயாளியைப் பார்த்தபின் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியின் உணர்வை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமையான உணர்வுகளைக் கருக்கிடல் வேண்டும்.
 
அந்த நோயாளிக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்த உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
 
இது போன்று
1.நமக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளை கேட்டறிகின்றோம்.
2.அதை நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் மாறி (மாரி) தீமைகள்  நமக்குள் விளையாயாது தடுப்பதற்குத் தான்
3.மாரியம்மன் ஆலயத்தில் அக்னி குண்டத்தை வைத்திருப்பார்கள்.
 
பகைமையான உணர்வை நுகர்ந்தால் நமக்குள் அது தீமையாக விளைந்துவிடும். அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…? என்பதனை உணர்த்துவதற்குத் தான்
1.இந்த வாழ்க்கையில் தீமையோ துன்பங்களோ நோயோ அதையெல்லாம் கேட்டறியும் பொழுது
2.அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது தடுப்பதற்கு அன்றைய ஞானிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறும்படி செய்கின்றனர்…”
 
இதன் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் நாம் எவரைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி என்ற உணர்வை உருவாக்குதல் வேண்டும்.
 
இல்லை என்றால் பிறருடைய தீய உணர்வுகள் அது மாறி(ரி) நமக்குள் நோயாக வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் தடுக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் காட்டி அருள் வழியில் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கினோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபடலாம்நம்மையும் காத்திடலாம் என்று இந்தப் பொது விதிகளை அமைத்தனர்.
 
நம் சகஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் நோய்களைப் பற்றியோ பகைமைகளைப் பற்றியோ கேட்டறியும் பொழுது நுகரப்படும் பொழுது அது வளர்ந்து விடுகின்றது.
 
பகைமை கொண்டால் அவரை அழிக்க வேண்டும் என்றும் கொடூர நிலை கொண்டு கொலை செய்வதும் போன்ற கொடுமைகள் செய்யும் உணர்வுகளாக உருவாகி விடுகின்றது.
 
இத்தகைய தவறான நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் மாரியம்மன் ஆலயத்திற்குள் வரப்படும் பொழுது அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சந்திப்போர் அனைவரது உடல்களிலும் படர வேண்டும்
2.எங்களை அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகள் மாற வேண்டும்
3.அருள் ஒளி எங்களுக்குள் பெருக வேண்டும்
4.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் பேரின்பம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் செய்தால்
5.நாம் எடுத்துக் கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது… நமக்குள் வந்த தீமைகளைப் பொசுக்குகின்றது.
 
அதற்குப் பின் இந்த ஊரும் உலகமும் உலக மக்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணி நாம் பரவச் செய்தல் வேண்டும்.
 
எங்கள் தெரு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் ஊரில் படர்ந்துள்ள பகைமை உணர்வுகள் மாற வேண்டும் சகோதர உணர்வுகள் வளர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.
 
எங்கள் தெரு மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும். மத பேதம் இல்லாது இன பேதம் இல்லாது மொழி பேதம் இல்லாது அரசியல் பேதம் இல்லாது வாழும் அந்தச் சகோதர உணர்வுகள் எங்கள் ஊர் முழுவதும் உலகம் முழுவதற்கும் படர வேண்டும் என்று அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரப்புவோம் என்றால்
1.நமக்குள்ளும் அந்த வளர்ச்சி பெறுகின்றது
2.கைமை உணர்வை நீக்கிடும் ஞானமும் கிடைக்கின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமையும் பெருகுகின்றது.
4.தன்னை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.
 
பாலிலே பாதாமைப் போட்டால் அது நல்ல சத்தாக மாறுகின்றது. ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டால் பாதாமினுடைய சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.
 
இது போன்று நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் பகைமைணர்வுகள் உள்ளே புகுந்து விட்டால் அது தீமையான உணர்வின் அணுக்களாக விளைந்து விடுகின்றது.
 
அதை மாற்றுவதற்காக… ஏகோபித்த நிலைகள் கொண்டு சமுதாயத்தில் மக்கள் அனைவரும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
இதைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.அவர்தம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி
2.வாழ்க்கையில் பேரின்பம் பெரு வாழ்வு பெற எமது அருளாசி உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.