ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2025

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா


பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் நம் பூமியான பரமாத்மா கவர்ந்து தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. அப்படி மாற்றும் பொழுது தனது சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் தனக்குள் பவையும் பல கலவையாகிப் பாறைகளாகவும் உலோகங்களாகவும் மற்ற நிலைகளாகவும் உருவாக்குகின்றது.
 
1.அது உருவாக்கி உமிழ்த்தி வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
2.மீண்டும் இந்தப் பரமாத்மாவில் பல கலவைகளாக மாறுகின்றது.
 
ஆகவே இந்த ஆன்மாவில் விளைந்து கூட்டமைப்பாக வெளிப்பட்ட அந்த உணர்வின் ஆவியின் தன்மையைச் சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து பரமாத்மாவாக மாற்றுகின்றது.
 
இந்தப் பரமாத்மாவில் ஒன்றுடன் ஒன்று பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தாவர இனங்கள் விளைகின்றது. தாவர இனங்கள் விளையப்படும் போது அதுவும் பல பல கலவை கொண்டு உருவாகின்றது.
 
உதாரணமாக ஒரு விஷச் செடியை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அந்தச் சத்தினைப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.
 
பரமாத்மாவாக பூமியிலே படர்ந்து கொண்டிருக்கப்படும் பொழுது இந்த விஷச் செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ன்றினால் இந்தப் பரத்தில் ன்றினால் பரத்தின் துணை கொண்டு பரமாத்மாவில் இருக்கும் விஷச் செடியின் சத்தினை அது நுகர்ந்து தன் இனத்தின் வித்தினை வளர்க்கின்றதுஅந்தச் செடி வளர்கின்றது.
 
இதைப் போல் தான் எண்ணிலடங்காத தாவர இனங்கள் உருமாறி அது அது வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பரமான இந்தப் பரமாத்மாவாக மாற்றிக் கொண்டுள்ளது.
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் சகல தாவர இனங்களும் வளர்ந்து
2.தன் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது இதே பரமாத்மாவில்.
 
உயிரணு தோன்றி பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக மாறுகின்றது. ஜீவான்மாவாக மாறிபின் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது இந்தப் பரமாத்மாவிலிருந்து தனது உடலைச் சுற்றி வரும் ஆன்மாவாக மாறுகின்றது.
 
தனது ஆன்மாவாக மாறிய பின்உயிர் உடலில் இருக்கும் ஜீவான்மாவிற்கு உணவைக் கொடுத்து வளர்க்கின்றது.
 
வேதனைப்படுபவரை சங்கடப்படுபவரை சலிப்புப்படுபவரை வெறுப்பப்படுபவரைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் அனைத்தும் பரமாத்மாவிலே கலக்கின்றது.
1.உற்றுப் பார்த்து நுகர்ந்தறிந்தால் அதே உணர்வின் அணுவாக நம் உடலில் ஜீவான்மாவாக உருவாக்கி விடுகின்றது.
2.ஜீவான்மாவாக உருவாக்கி விட்டால் உயிரின் துணை கொண்டு பரமாத்மாவிலிருந்து தனது ஆன்மாவாக மாற்றி
3.தனக்குள் விளைந்து தன் உடலுக்குள் இருக்கும் ஜீவான்மாக்களை வளர்க்கின்றது.
 
ஒரு செடி விளைந்தால் எப்படித் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றதோ இதைப் போல நமது சகஜ வாழ்க்கையில் எத்தகைய நல்ல குணங்கள் பெற்றிருப்பினும் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு குரோதம் கோபம் பகைமை உணர்வுகள் இதைப் போன்ற நிலைகள் அதிகமாக நமக்குள் வளர்ச்சியாகி விளைந்து விட்டால் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களின் பெருக்கமாகிவிடும்…”
 
ஏனென்றால் நமது ஜீவான்மாக்கள் தீமையின் உணர்வை வளர்க்கப்படும் பொழுது நம் உடலான பத்தில் பல தீமைகள் உருவாகி மனித உடலான இந்தப் பரதத்தில் அதை மாற்றும் சக்தியாக வருகின்றது.
 
1.எப்படி ஒரு வித்து முழுமையான பின் அதைக் கொண்டு மற்ற நிலைகள் விளைகின்றதோ
2.பல கலவை கொண்டு அக்ரிகல்ச்சரில் வித்துக்களை உருவாக்குவது போன்று
3.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தீமையின் விளைவுகள் அதிகமானால்
4.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் சேர்த்து உயிரான்மாவாக மாறுகின்றது.
 
உடலை விட்டு உயிரான்மா சென்றால் இதே வேதனை கொண்ட உடலைப் ரமாக்கி… வேதனை உணர்வைத் தனது ஆன்மாவாக்கி… அதன் வழியில் வாழ்க்கையின் வழித் தொடர ஆரம்பித்து விடும்.
 
இதிலிருந்து நாம் மாற்றுவதற்கு துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் இந்தப் பரமாத்மாவிலே தான் படர்ந்துள்ளது.
1.அதை நமக்குள் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி உடலில் பெருக்கிக் கொண்டால்
2.நமது ஆன்மாவும் தூய்மையாகின்றது மன வலிமையும் பெறுகின்றது நமது உடலும் நலமாகின்றது.
3.உடலுக்குள் இருக்கும் ஜீவான்மா தெளிவடைகின்றது ஒளியின் தன்மை பெறத் தொடங்கி விடுகின்றது.
 
நட்சத்திரங்களில் இருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னலாக வெளிப்படும் அந்த ஒளிக் கற்றைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் அலைகளாக மாற்றுகிறது.
 
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால்
2.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நாமும் நகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கும் நஞ்சினை மாற்றிடும் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.
 
ஆகவே நமது வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தப் பேரருள் உணர்வுகளைப் பெற்று நம் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடைந்திட உயிரான்மாவை ஒளிமயமாக மாற்றி ஒளிச்ரீரம் பெற்றிட குரு அருளும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.