ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2025

யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்


ஆரம்பத்தில் எத்தனையோ காட்சிகளை எல்லோருக்கும் நான் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில உண்மைகளை அறியும் படியும் செய்தேன் - புவியின் ஈர்ப்புக்குள்.
1.அதிலே மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டதுஉடலின் இச்சைக்குள் நிகழ்ந்தது
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.
 
ஆகவே அதை எல்லாம் நிறுத்தி விட்டு இப்பொழுது உங்களுக்குள் அந்த மெய் உணர்வைப் பெறும் ஆற்றலாக உபதேசிக்கின்றேன்,
 
விஞ்ஞான அறிவால் வரும் காற்று மண்டலம் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது மனிதன் அதை நுகர்ந்து சிந்தனையற்றவனாகச் செயல்படும் உருப்பெறும் அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள நம் சிந்தனையை விண்ணில் செலுத்தி மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்.
 
1.அதனைப் பெற்று நம் உணர்வு கொண்டு தன் அருகில் வரும் மனிதனின் தீமைகளிலிருந்து விடுபடவும்
2.நுகர்ந்த உணர்வுகள் மற்றவரைக் காக்கவும் தன்னைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
3.உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய இது உதவும்.
 
இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால்… வாழ்க்கையில் இந்த உடலின்  இச்சைகுகந்த உணர்வுகளைப் பெறப்படும் பொழுது எந்தத் தெய்வம் செய்யும் என்ற உணர்வுகளைப் பதிவு செய்தனரோ அதே தெய்வச் சிலையாகப் பார்த்துணர்ந்த உணர்வுகள் மடிந்த பின் அதே உணர்வலைகளை அதே ஏக்கம் கொண்டவர்கள் இன்ன தெய்வத்தைக் கண்டேன்…” என்று சொல்வார்கள்.
 
இதுகளெல்லாம் மனிதனுடைய இச்சைக்குள் வளர்த்துக் கொண்ட நிலைகள்.
 
ஆகவே இந்தத் தெய்வக் காட்சிகள் என்பது… மனிதனில் உருவாக்கி வேஷமிடப்பட்டு அதனைப் படமாக்கி மீண்டும் அலைகளாக அனுப்பி (விஞ்ஞான அறிவிலே) அதை நுகரப்படும் பொழுது அதையே எப்படிக் காட்சியாகக் காணுகின்றமோ இதைப் போலத் தான் கண் புலனறிவுகளில் சிலையை உற்று நோக்கி ஆடைகளை அலங்கரித்த அதன் உணர்வை நமக்குள் பதிவாக்கிய பின் உடலை விட்டுச் சென்ற பின் அந்த அலையின் ரூபமாகச் செல்லும்.
1.அதை மீண்டும் குவிக்கப்படும் பொழுது
2.எதனை வலுவாகச் சேர்த்தோமோ அந்த ரூபமாக முருகனாகவும் காளியாகவும் காட்டும்.
 
கொடூர உணர்வின் தன்மை கொண்டு ஒரு பூதகணையைக் காட்டி (துஷ்ட தெய்வங்கள்) கோரப் பல்களைக் காட்டி இதுதான் காக்கும் என்றும் அதற்குப் பல உயிரினங்களைப் பலியிடப்பட்டு அதனை நேசித்துத் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஒரு மனிதன் நுகர்ந்து மடிந்திருந்தால் அதே உணர்வலைகளை உற்று நோக்கி அச்சத்தால் நுகர்ந்தால் கோரப்பல் கொண்ட அந்தச் சிலையின் உணர்வுகள் ரூபங்கள் பட்டு அதைக் கோர உருவமாகக் காட்டும்.
 
கோரமான உருவம் பற்களுடன் வருகிறது என்று சிலர் சொல்வதையும் கேட்கலாம். என் வாய் பேசாது தடுக்கின்றது என்றும் சொல்வார்கள். அச்சம் கொண்ட நிலையாக வேறு எந்தச் செயலையும் செய்ய முடியாதபடி செயலாற்றதாகவும் அது மாற்றும்.
 
மனிதனில் உருவாக்கப்பட்ட உணர்வுகள் இதை எல்லாம் காட்சிகளாகக் காணக்கூடாது. மெய் வழி சென்று மெய் உணர்வைத் தனக்குள் பெற்ற அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெறுவதற்குக் காலத்தால் இந்தக் காட்சியின் தன்மை சிறுகச் சிறுக குறைத்து விட்டேன்.
 
ஆரம்பக் காலங்களில் சில நேரங்களில் பக்தியின் நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது சில உணர்வின் இயக்கங்கள் பொருட்கள் எப்படி வருகின்றது…?” என்று அதை எல்லாம் காட்டினேன்.
 
நான் குடியிருந்த தெருவில் முதலில் யாரும் நம்ப மாட்டார்கள். ருக்மணி என்ற அம்மாள் வீட்டிலே பூஜை புனஸ்காரம் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் இருக்கக்கூடிய விநாயகர் அந்தப் பக்கமாக நகர்ந்து செல்லும். அந்த விநாயகர் மீது பல விபூதிகள் வரும். பல பொருள்கள் மாறி மாறி வரும்.
 
அதையெல்லாம் கண்டபின் சாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று அதற்குப் பின்னால் தான் நம்புகின்றார்கள். இந்த அடிப்படையில் தான் என் தெருவிலிருப்பவர்கள் நம்பி இங்கே பலர் வந்தார்கள்.
 
எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் எங்களுக்கும் அந்த விபூதி வேண்டும் என்றார்கள். உங்களுக்கு ஒரு சக்கரம் தருகிறேன் என்று கொடுத்தேன்பின் அதிலிருந்து விபூதி வந்தது,
 
இதைக் கண்டு ஒரு ஐந்து ஆறு பேர் சாமி எங்களுக்குச் சக்கரம் வேண்டும் என்று கேட்டார்கள். சக்கரத்திலிருந்து விபூதி வந்தவுடனே இந்தப் பக்தி என்ன செய்கிறது…?
 
சாமி நமக்குப் பெரிய சக்தி கொடுக்கின்றார் அருள் கொடுக்கின்றார் வரம் கொடுக்கின்றார்…! என்று இப்படித்தான் எம்மை உணர்ந்தார்கள்.
1.ஆனால் இது எப்படி இயக்குகிறது…? என்று அதை அறியும் பற்றினைச் செலுத்தவில்லை.
2.அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் யாம் காட்டப்படும் பொழுது
3.இதிலே தான் சக்தி இருக்கின்றது கடவுளே உருமாற்றி உதவி செய்கிறார் என்று இந்த உணர்வுகளைத் தான் அவர்களால் வளர்க்க முடிகின்றது.
 
ருக்மணி பல பேரைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து பூஜை அறையில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டிபாருங்கள்…! சாமியை நாம் என்னமோ மோசமாக நினைக்கின்றோம்ஆனால் விபூதி எல்லாம் வந்திருக்கிறது…! என்று தெருவில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டுக் காண்பித்தது.
 
அதற்குப் பின் தான் தெருவில் உள்ளவர்கள்… “ஓஹோ…! சாமிக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று நான் அங்கே வரும்பொழுது எல்லாம் விபூதி வாங்குவதற்கு வருவார்கள். இப்படித்தான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
 
இது எல்லாம் தன் உணர்வின் சக்திகள் வளர்ந்திருப்பதை நுகரும் ஆற்றலை அது எப்படி உருவாகின்றது மந்திர ஒலிகளால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் எப்படி அந்த அணுக்களாக மாறுகின்றது…? என்று
1.இந்த நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களின் பதிவையே அங்கே ஊட்டி
2.அவர்கள் எண்ணங்கள் மூலமாகவே விபூதியாக எப்படி அங்கே வருகிறது…? என்று
3.அன்று நான் அப்படிச் சொல்லவில்லை (அதாவது உண்மையைச் சொல்லவில்லை).
 
சாமிக்குச் சக்தி இருக்கிறது…” என்று எதை ஏங்கிப் பெறுகின்றனரோ இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பதிவாகும் பொழுது அவர்களாலேயே அதனை அங்கே இயக்கும்படிச் செய்தது. குருநாதர் காட்டிய நிலைகள் அங்கே சில அற்புதங்களையும் செயல்படுத்திநேன்.
 
ஏனென்றால் நான் செய்தேன் என்று இவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களுக்கு முன்னாலேயே அந்த உணர்வு குவிக்கப்படும் பொழுது
1.சேர்த்து விபூதியை வரவழைப்பதும் அந்த சிலைகள் நகரும்படி செய்வதும்
2.அவருக்குள் அந்த உணர்வின் சக்தியைக் கொடுத்துத் தான் அதை அறியும்படி செய்தேன்.
 
அவருடைய எண்ணங்கள் வளர்ச்சி எதுவோ அதனின் உணர்வலைகள் பாயப்படும் பொழுது அதில் உள்ள காந்தப்புலன் நினைவாற்றலை அங்கே குவிக்கும்… அதன் வழி எல்லாமே நடக்கும்.
 
ஆனால் அதற்குப் பிற்பாடு அது எதுவும் வரவில்லை நடக்கவில்லை. காலத்தால் பல உண்மையின் உணர்வுகளைச் சொல்லச் சொல்ல உண்மையின் நிலைகள் அங்கே வர வர அவை எதுவும் வராது.
 
ஏனென்றால் சாமிக்குச் செய்யத் தெரியாது என்று அல்ல. எல்லாவற்றையும் கவர்ச்சி செய்வதற்கு வந்தார் என்று என்னைப் பெரிய ஆளாகக் காட்டி என்னைப் போற்ற வைக்கவும் முடியும்.
1.அதனால் எனக்கு என்ன பலன்…?
2.உங்களுக்கு என்ன பலன்…? – ஒன்றும் இல்லை.
 
ஏனென்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுடன் ஒன்றி மனிதனின் எல்லையான சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும்.
 
1.ஞானிகள் சென்ற பாதையிலே நாம் செல்ல வேண்டும். அந்த உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.இருள் சூழ்ந்ததை நீக்கிடும் ஆற்றலை நமக்குள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் மனிதனில் தீமைகளை வென்று ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் செல்லும்படி செய்து
4.அங்கிருந்து வரும் உணர்வலைகளை நுகர்வதற்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
 
அதைத் தான் ரிஷியின் மகன் நாதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று காட்டியது. மனிதனான அகஸ்தியன் ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக உருப்பெற்றுள்ளார்.
 
அதிலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உருவான உணர்வின் தன்மையை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ அவர்களுக்குள் அது நாரதனாகச் சென்று
1.தீமைகள் அகற்றும் உணர்வாக ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் சென்று அந்த உணர்வினை அடக்கி
2.தீமைகளை அடக்கிடும் சக்தியாக இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது என்று தான் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.
 
ஆனால் அது எல்லாம் இன்று அந்த நிஜம் பொய் ஆகிவிட்டது பொய் நிஜமாகிவிட்டது…”
 
இப்பொழுது பொய்யைக் காட்சியாகக் காணும் போது அதை நிஜமாகக் காணுகின்றீர்கள் அல்லவா…!
2.அதே சமயத்தில் உங்கள் உணர்வின் நினைவாற்றலை உங்களை நம்பாது பொய்யாக்கி விடுகின்றீர்கள்.
 
உணர்வின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து… “சாமி சொல்கிறார் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே…!” என்று ஏக்கமாகும் பொழுது நம்மால் முடியவில்லை…! என்று உங்கள் சக்தியைப் பொய்யாக்கி விடுகின்றீர்கள்…”
 
இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதன் தீமைகளை வென்று ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கூர்மையாக நுகர்ந்தறிந்து அதனை வளர்த்து இருள் சூழ்ந்த உணர்வை நீக்கி அருள் பெறும் உணர்வின் தன்மையை என்றும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலையில் வாழும் அந்த நிலையை இந்த மனித சரீரத்திலேயே நீங்கள் பெற வேண்டும்…”
 
இத்தகைய கூர்மை அவதாரத்தை நீங்கள் எடுத்தால் ஒளியின் சரீரமாக மாறலாம்.
 
ஒவ்வொரு உயிரினமும் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட மற்ற உயிரினங்களை கூர்மையாக உற்றுப் பார்த்து அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதனின் வலுவை எடுத்து வளர்ச்சி பெற்றுத் தான் ரூபங்கள் மாறியது.
 
அகஸ்தியனும் அவன் மனைவியும் விண்ணின் ஆற்றலை துருவத்தின் வழிக் கூர்மையாக ஏங்கிப் பெற்றர். தீமை அகற்றும் வலிமை பெற்றனர் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரம் ஆனது.
 
இந்தப் பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையுமே ஒளியின் சரீரமாகத் தனக்குள் கருவாக்கி உருப்பெற்று அகண்ட பேரண்டத்தில் என்றும் 16 என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
 
அதைக் கூர்மையாக எண்ணி அதன் வலிமையை பெற்றோம் என்றால் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையில் நாமும் வாழ முடியும்.
 
ஆகவே… மனிதனின் கடைசி எல்லை என்பது… உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் எல்லையை நாம் அடைவதுதான்.
 
ஆனால்… உடலில் ஆசை கொண்டு அந்த உணர்வு உயிருடன் ஒன்றி விட்டால் அந்த உணர்வுக்கொப்ப இன்னொரு கூட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த ரூபமாக நம்மை மாற்றி அதன் உணர்வாக நம்மை இயக்கிவிடும். இது அனைத்தும் உயிரின் செயல்களே.
 
நாம் எதை எண்ணுகின்றோமோ அதனையே அது உருவாக்குகின்றது அதன் செயலாக நம்மை இயக்குகின்றது அதன் ரூபமாக நம்மை மாற்றுகின்றது.
 
தனக்குள் பயமோ வெறுக்கும் நிலையோ தீமைகள் செய்து அது வலுப்பெற்ற பின்
1.அத்தகைய வலுவை நாம் நுகர வேண்டியதில்லை.
2.அருள் ஞானிகள் உணர்வை நாம் பெறுவோம்.
3.நமது பார்வையில் பிறருடைய இருளை நீக்கிடும் சக்தியாக மாற்றுவோம் என்ற இந்த வலிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 
பிறருடைய தீமை நம்மைத் தாக்காது. இந்த உணர்வு அவர்களுக்குள்ளும் ஊடுருவி அவர்களும் உண்மையை உணரும்படி செய்யும்தீமையிலிருந்து விடுபடுவார்கள். நமக்குள் வரும் தீமையைத் தடுக்கும் ஆற்றலும் வருகின்றது.
 
அதனைப் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை அனைவரும் எளிதாகப் பெறும்படி வழிகாட்டுகின்றோம்.
 
அகஸ்தியர் காட்டிய விநாயகர் தத்துவத்தை முன்னணியில் வைத்துக் காலை துருவ தியானத்தில் கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைக் கணவன் மனைவி நீங்கள் இருவரும் பெற்று இரு உடல்களிலும் வளர்த்து இரு உணர்வையும் ஒன்றாக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் சக்திகளாக நீங்கள் பெற்றுப் பழகுங்கள்.
 
பிறவி இல்லா நிலையை இந்த உடலிலேயே பெறுவோம் என்ற  உணர்வுடனே இந்தப் பயணத்தைத் தொடருங்கள். இந்த அலையின் தொடர் கொண்டு உங்களுக்குள் தீமைகளை அகற்றும் சக்தியாக வளரும். அதை நீங்கள் காணலாம்.
 
பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அச்சுறுத்தும் உணர்வு கொண்ட நிலை இருந்தால் அந்தப் பயமான உணர்வு வந்து அது அச்சுறுத்தும் உணர்வாகக் குவிந்து உயிரிலே மோதப்படும் பொழுது இரவிலே அறியாதபடி புலனறிவிலே சொப்பணங்களைக் காணுவதும் காணாத உருவங்களைக் காண்பதும் அந்த அச்சத்தினால் உடல் நடுக்கம் ஆவதும் டல்கள் வேர்ப்பதும் அஞ்சி எழுந்து ஓடும் நிலைகளும் கூட வரும்.
 
1.அத்தகைய அஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
2.அந்த அச்சத்தை நீக்கிடும் அச்சமான இருளைப் போக்கிடும்
3.அந்த மகரிஷியின் அருளை கணவன் மனைவியாக நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.திருமணமாகாதவர்கள் அன்னை தந்தை உணர்வோடு இணைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
 
அருள் ஞானம் பெற வேண்டும் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் மன பலம் பெறுவீர்கள் மன உறுதி பெறுவீர்கள் தெளிந்த நிலை பெறுவீர்கள்
 
அத்தகைய சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் எனக்குக் காட்டிய அனைத்தையும் உங்களுக்கு அப்படியே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
 
ஆகவே அருள் உணர்வுகளை வளர்த்து அருள் வாழ்க்கை வாழுங்கள் அருளானந்தம் பெறுவீர்கள்…”