ஒலியாகி... ஒளியாகி... நீராகி... உருவமானது தான் அண்டவெளியில் அனைத்துமே...!
சப்த நாத சுழலும் சக்தி (ஒலி)... உயிரணுவின் ஈர்ப்பில் எண்ணம் கொண்டு வளரும் செயல் நிலையில்... ஈர்த்தெடுக்கும் அனைத்துச் சப்த அலையின் குண விசேஷ ஆகார அமில நியதி என்ற வகையில்... தன் ஒளி சக்தியின் காந்தத்தைப் புடமேற்றிக் கொள்கிறது.
தனக்குள் புடமேற்றிய நிலையில் எண்ண வலுவாக்கும் சுழல் சக்தியாக எந்த அமிலத்தின் வீரியத்தைக் கொண்டு ஈர்த்ததோ அந்த நட்சத்திர அமில சக்தியின் நிறம் மணம் அனைத்தையும் காத்திடும்
1.ஆதி சக்தியின் நீரமிலத் தொடர்பில் எண்ணம் கொண்டு அத்தகைய உயிரணுக்கள் பிறப்பிற்கு வந்தாலும்
2.சரீரத்தைச் சுற்றியும் அந்தச் சப்த அலை நாதங்கள் சுழல் வட்டமாகச் சழன்று ஓடிக் கொண்டே இருக்கும்.
ஆத்மாவை உணரத் தலைப்படும் ஞானி... ஆத்மாவின் தொடர் சரீரமாக உருமாறும் பஞ்ச பூதங்கள் செயல் தன்மையில்... அந்தப் பஞ்ச பூத ஆரோக்கிய அமிலத்தை ஈர்த்திடும் பக்குவமாக... அமுதமாகச் செயல் கொள்ள சரீரம் ஈர்த்திடும் செயலுக்கு.... பரவெளியில் உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமமே... சரீரம் பெற்ற பிறகு...
1.ஆண் பெண் என்ற இரு சரீரத்தில் செயல்படும் விதம் - உயிரணுக்களின் செயல் தன்மை...
2.ஆணின் உடலிலிருந்து வருவதைச் சுக்கிலம் என்றும்
3.பெண்ணின் உடலிலிருந்து வருவதைச் சுரோனிதம் என்று கூறிய வகைகளில்
4.சிவ சக்தியின் கலப்பு ஆண் பெண் என்று பேதம் உள்ளது.
இருந்தாலும் உயிர் சக்தியின் வலுவிற்கு ஒவ்வொருவரும் உயிரான்ம இணைப்பின் செயலுக்கு வலுக்கூட்டிக் கொள்ளும் பஞ்சபூதத் தொடரில்
1.ஆண் சுக்கிலத்தையும் பெண் தன் சரீரத்தில் சுரோனிதத்தையும்
2.உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு வலுக் கொள்ள வேண்டும்.
அதாவது சரீர கலப்பில் உயிர் தொகையை (குழந்தைகளை) உருவாக்குவது போல் எண்ண வலுவின் வீரிய சக்தியால்
1.ஆத்ம ஐக்கிய நிலையில் ஒத்த எண்ணம் கொண்டு
2.சிவசக்தி ஜோதிக் கலப்பாக மூலத்தில் படைப்பின் படைப்பு சக்தி கொண்டு
3.நமக்கென்று ஒரு மண்டலத்தையே சிருஷ்டிக்கலாம்.
சரீரம் கொண்ட நிலையில் காந்த ஒளி அலைகளை எண்ணம் கொண்டு பாய்ச்சி “நெற்றிக் கண்” என்ற ஞான விழிப்பார்வையால் அறிந்து ஈர்க்கும் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்குத் தன்னைச் சுற்றி ஓடும் சப்த நாத அலைகளை ஈர்த்துச் செயல் கொண்டால் அதுவே தான் பெறும் சக்திக்கு உறுதுணையாகப் பாதுகாப்பு வளையமாக நம்மைக் காத்திடும்.
வளர்ச்சியின் நல் வினைச் செயலுக்கு எதை எண்ணி ஈர்க்கின்றோமோ...
1.அந்த எண்ணத்தின் ஜீவத் துடிப்பிற்கே வலுக்கொடுக்கும்
2.அதிதீவிர எண்ண வலுக்கூட்டும் அபூர்வ ஒலி ஈர்ப்பாக
3.உயர் ஞான ரிஷி பத்தினி சக்தியை ஈர்த்திடும் நிலைக்கு
4.அதே தொடரில் ஈர்க்கப்படும் அனைத்துச் சக்தியின் வழிமுறைக்கும்
5.இச்செயலின் தொடரில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்...!