ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2021

மெய் ஞான விழிப்புப்படுத்தும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்பப்பட்டுப் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய மகரிஷிகளின் சக்திகளை
5.நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா...” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை... அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து... வளர்ந்து... விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்
3.விஞ்ஞானத்தால் உருவான நஞ்சினை அகற்றும் வல்லுநராக நீங்கள் மாறுங்கள்...
4.ஒளியான அண்டத்தையே உங்களால் படைக்க முடியும்.