ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.
நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.
ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையப்படும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.
ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.
இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள்.
நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.
எக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.
ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… உடலிலே அணுக்களாக விளையும்.
ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது
இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை
யார்..?
சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.
உடல் சிவம்… சுவாசிப்பது நந்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.