நம் பூமி விண்வெளியிலிருந்து பல நிலைகளை எடுக்கும் பொழுது துருவப் பகுதியில் சில அலைகள் வரும் பொழுது குவித்து என்ன செய்யும்...? இன்னொரு பக்கம் போகும். பரவலாகக் கொண்டு வருவதற்கு இந்த மாதிரி ஆகும்.
தென் துருவப் பகுதியில் இதே மாதிரிச் சில அலைகள் வரும். அந்தப் பகுதிகளில் விமானம் சென்றால் கரைத்துவிடும். இதைப் போன்ற சில விபத்துகள் உண்டு.
ஆனால் பூமிக்குள் இருக்கும் இதையெல்லாம் நாம் ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
1.இயற்கையின் நிலைகள் இப்படி இருக்கிறது என்று உணர்த்துவதற்காகவும்
2.சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொன்னது.
ஆனால் அது என்ன...? இது என்ன...? என்று இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் இந்தப் பூமியில்தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
1.இதைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் பெற்றோம் என்றால்
2.நாம் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் போகலாம்.
ஆனால் மனிதன் எதை வேண்டும் என்றாலும் அறிந்து கொள்ள முடியும்...! என்பதற்காகச் சொன்னோம்.
உதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இன்னென்ன மண் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்கின்றோம். எல்லாம் சேர்த்த பிற்பாடு தவறு ஏற்படுகிறது. தவறைத் திருத்த வேண்டுமா இல்லையா...?
அது போல் தான் இந்த உடல் வாழ்க்கையில் புவியின் பிடிப்பிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி...? என்றால் அந்த மகரிஷிகள் அருள் வழி தான்,
ஆக அந்த மகரிஷிகளின் உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் குறுகிய காலத்திற்குள் சப்தரிஷி மண்டலம் போகலாம்.
1.ஆனால் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால்
2.இங்கே போய்... அங்கே போய்... முடிவில் அந்தச் சப்தரிஷி மண்டலம் அடைய முடியாது.
ஆனால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். ஆனால் அறிவின் தன்மை மழுங்கி விடும்.
நம் குருவின் (ஈஸ்வரபட்டர்) தன்மை எதுவாக இருக்கின்றது...? என்றறு உணர்தல் வேண்டும்
1.குரு இட்ட கட்டளையை மீறி...
2.நம் ஆசையின் நிலைகளைக் குருவாக்கி விட்டால்
3.இதன் நிலைகளைத் தான் பார்க்கச் செல்லும்.
இங்கே பார்க்க வேண்டியது தான்...! அதற்குள் காலம் கடந்துவிடும்...! அதற்குள் இந்த உடல் மடிந்துவிடும்... இந்த உடலுக்குள் சேர்த்த நிலைகள் நிலை இழந்துவிடும்...!
ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் நேரமில்லை. நஞ்சுகள் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த உடல் நன்றாக இருக்கும் பொழுதே அருள் ஞான உணர்வுகளை விளைய வைத்துக் கொள்ளுங்கள்...! என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு).
அதற்காக வேண்டித் தான்...
1.உங்கள் உணர்வுகளை எந்தெந்த அளவிற்கு அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளில் கொண்டு வர வேண்டுமோ
2.அதைச் செயல்படுத்தி உங்கள் நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கச் செய்கின்றோம்.
எந்த நேரத்தில்... எந்தச் சந்தர்ப்பத்தில் இனி எது வந்தாலும் “ஈஸ்வரா...!” என்று உயிரை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். அந்த உணர்வு நமக்குள் வலுப் பெற வேண்டும்.
அது இல்லையென்றால் வளர்க்க முடியாது. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள் இந்த வலுவின் தன்மை கொண்டு வருவதற்குத்தான் தொடர்ந்து உபதேசிப்பது.