ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 3, 2021

மகேஸ்வரன் லலிதை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்... உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது...!”

ஓ...ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ...ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி... “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கி விட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்...!

நீலகண்டா...! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும். அதை ஒளியின் அணுக்களாக உருவாக்கும் சூட்சமமும் புரியும்.