“நாபிக் கமலம் என்ற ஜோதி...” தன்னுள் கிளைத்து... எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்... அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்... காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது... சிந்திக்கத் தலைப்படும் பொழுதுதான் உயர் ஞானமாக எழும்.
அறிவின் நற்குணம் - சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று... வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி...
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.
ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்...!” என எண்ணித் தெளிந்து... பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்...!”
கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்...” வேண்டும்.
படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது...
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்
அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்...! என்று பொருள் கண்டு தெளிந்து...
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே... அன்பு நிலைக் குணமாக “அருளல்...” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்...!