ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2021

உலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது - ஈஸ்வரபட்டர்

 

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது...? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்...” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்...” அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படாவிட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டு விட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

அதைப் போன்று தான்
1.மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி...
2.களைகளைக் களைந்து...
3.தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு...
4.நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி...
5.ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்...
6.ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு ஞான வித்தை ஈர்த்திடும் செயலே...
7.விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்...!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலக வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற... கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலக இயல்பு என்ற மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கல் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்ள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கிப் புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்...!”

ஒவ்வொருவரும் விவசாயி போல் ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கிவிட்டால்... பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்...?

விவசாயியினால் காக்க முடியாமல் போன பலனை... பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை... ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்...?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்...?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்... உலக வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்... எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை...!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வுகள் அனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு... சக்தியின் முயற்சிக்கு... “என்றும் எனது ஆசிகள்...!”