1.பல பல பிறவிகளில்
நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல்
தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற் சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் –
PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த
வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!” (நாம்)
4.ஏற்கனவே செய்யப்பட்ட
முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு
வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில்
இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.
தீமையோ நன்மையோ எந்த
வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி
நடக்கும் செயலைத் “தன் விதி”(தலைவிதி) என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின்
வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை
வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு
இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை
ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.
மூலமும் இவனே ஆகின்றான்…!
மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன்
காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின்
நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…?
என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…?
எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின்
(உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு
பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப்
பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று…
7.ஆதி சக்தியால்
(இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து
வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே
உரமாக்கிடலாம்.
ஆகவே இந்த ஜென்மத்
தொடரில்…
1.தொடர்ந்து செய்யப்படுகின்ற
வினையின் செயலை நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால்
ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும்
அதே தொடரில் - செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.
சந்தர்ப்பத்தால்
வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண்
செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப்
பயனாக்கிடலாம்.
இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!” (நாம் தான்…!)