உலக வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது
மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டு விட… எட்டி விட நினைக்கின்றது.
ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை
அறிய முடியாது எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும்…
கரை சேரலாம்…! என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக்
கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் தன் முயற்சி கொண்டு கரை காண்பதும் உண்டு.
அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில்
திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும்… தானே கண்ட வழியாக ஓர்
படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில்
செல்லும் பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு
இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்…
உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்..
தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் குருவைத்
தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து
அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே
வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான்.
நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.
உலக வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்து
விட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக்
கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.
இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள்
“அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு
ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத்
துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலக ஆசைக்கெல்லாம்…
குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் ஆகிவிடும்
அல்லவா…!
அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து
இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து
அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.
தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.