ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2021

பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் பேரானந்தப் பெரு நிலை கொண்டு வாழும் அகஸ்தியனைப் போன்று நாமும் வாழ வேண்டும்

உயிரணுவாகத் தோன்றிப் பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான பின் அகஸ்தியன் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளான்.
 
அவன் வழியைப் பின்பற்றியோர் அனைவரும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றனர்.
1.பிறவி இல்லா நிலை அடைந்து என்றும் நிலை கொண்டுள்ளனர்
2.எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு...!
 
அதாவது...
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு இயக்கும்
2.எந்த உணர்வுடன் கலந்து ஒரு இயக்கமாக அது இயக்குகின்றதோ
3.அதே இயக்கத்தின் மோதலில் (வெப்பம்) ஒளியாக மாற்றி
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றான்.
 
ஒரு நஞ்சு கொண்ட பாம்பினம் மற்ற உயிரினங்களில் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அங்கே இருள் சூழச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்கிறது.
 
இப்படி வளரும் நாகப் பாம்பு தனக்குள் அந்த விஷத்தின் தன்மை வளர்க்க வளர்க்க
1.அந்த விஷப் பையே ஒளியின் சுடராக மாறிவிடுகின்றது...
2.”நாகரத்தினமாக” மாறுகின்றது...!
 
பாம்பினம் விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அடைகின்றது. ஆனால் விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுத்துத் தான் அந்த உணர்வின் தன்மை பெறுகின்றது.
 
நாகம் மட்டுமல்ல... மற்ற பாம்பினங்களும் தனது விஷத்தைப் பாய்ச்சி பிற உயிரினங்களை இரையாக்கினாலும் விஷங்கள் வடிக்கப்பட்டு விஷம் அதிகரித்து உடையும் பொழுது அதனின் ஒளிச் சுடர் வரும்.
 
இதைப் போல் மனிதனின் நிலைகளிலும்...
1.உயிர் வாழும் (இருக்கும்) இடங்களில் இந்த உணர்வின் தன்மை கொண்டு “முத்தாக” விளையும்
2.முத்தாக விளையும் தன்மை வரப்படும் பொழுது உடல் மடியும்.
3.உடலில் வளர்த்த மற்ற உணர்வுகள் அலைகளாக மாறும்.... முத்தாக ஆன பின் செயலற்றதாக ஆகும்.
 
மனிதனின் இச்சைக்குள் பல காலம் வாழ்ந்தால்... 120 வருடத்திற்கு மேல் வளர்ந்தால் அந்த உடலிலேயே ஒரு அணுவின் தன்மை முத்தாக விளையும்.
 
யானைக்கும் அதுவே... மற்ற உயிரினங்களுக்கும் மற்றது சாடாத நிலைகள் வரும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டு அதிலே விளையும்.
 
ஆனால் உணர்வின் அணுக்களை ஒளியான ஜீவனுள்ள அணுவாக மாற்றிடும் தன்மை பெற்றவன் அகஸ்தியன்.
1.அவன் ஒளியின் சுடராக உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக
2.பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் மகிழ்ச்சியாகப் பேரானந்தப் பெரு நிலையுடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.
 
அவன் உணர்வைக் கருவாக்கி உருவாக்கி அந்த உணர்வின் தன்மையை ஒளியின் சுடராக மாற்றும் வல்லமை நம் அனைவருக்கும் உண்டு.

நேற்றைய செயல் இன்றைய சரீரம்.. இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரமாக மனிதர்கள் ஆக வேண்டும் என்ற அந்தத் தத்துவத்தைத்தான் மூலக் கருத்தாக விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டினர் ஞானியர்.