தியானத்தின்
மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு...”
கண்களின் வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு முன்னே
மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
1.வேகம் என்ற
சொல்லில் – அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்
2.முயற்சி என்ற
ஞான சூத்திரம் கொண்டு - உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்.
“பிடர்தல்...”
(பிளந்து அறிதல்) என்ற எண்ண உந்து சக்தியின் துணையால்... நாம் பயணமாகும் இந்த மெய்
ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது... அதை நம் அறிவின்
ஞான எண்ணம் கொண்டு சமைத்து... அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து...
ஆக்கம் கொண்ட செயல் முறைகளில் அதைச் செயல்படுத்துதல் வேண்டும்.
சிலர் தங்கள்
சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின்
பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமிக்கு
அடியில் செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர
அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும்
பொழுது
4.அதில் செலுத்தப்படும்
எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.
சரீரத்தின்
எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும்
பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடத்தில்
நீரோட்டம் உள்ளதோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய
உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச்
சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
இதைப் போல்
மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப்
பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால் “அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும்
முடியும்...”
1.சிறு குழந்தைகள்
படங்களைப் பார்த்துப் பதிவாக்கிய பின்
2.அந்தப் படத்தின்
கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல்
3.நாம் சுவாசிக்கும்
அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும்
4.கருத்தாற்றலை
உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.
அந்தச் சூட்சமச்
செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும்
பக்குவத்தையும் பெற்றிடலாம்.
இந்த வலு வீரியத்தைக்
கூட்டிடும் சக்தியின் தொடராகத் தன்னுள் வலுக் கொள்ள வேண்டும் என்றால்...
1.காந்த அமில
குண வீரிய தாய் சக்தியும்... ரிஷிபத்தினி (மனைவி) சக்தியும் சேர்த்து
2.சிவ சக்தியாக
உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.