இந்தச் சரீர இயக்கத்தின்
கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில்
மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
அதாவது...
1.வெளியிலிருந்து
சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது
வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்
இப்படிப்பட்ட மனித
இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது...
1.எந்த உணர்வுக்கொப்ப
வாழ் நாள் செல்கிறதோ... வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல
2.அதன் சுழற்சியில்
சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.
இதிலிருந்து மனிதனில்
மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?”
என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம்
“ரிஷித் தன்மை” பெற முடியும்.
இந்தப் பூமியில்
சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது…?
நம்முடைய உணர்வின்
எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது.
அத்தகைய உயிர் அணுக்களுக்குள்
எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும்
எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில்
பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின்
வளர்ப்பும் செழிப்பும் இருக்கும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின்
நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)
இந்த நிலையில் இருந்து
தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.
இந்தக் கலியிலேயே
பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட
சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்... இராமர்...!” என்ற தன் எண்ணத்தில்
ஈர்க்கப்படுகின்றான்.
அதன் தொடர்பால் அந்தச்
சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே
இருக்கின்றான்.
அப்பொழுது விண்ணிலிருந்து
வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள்
அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின்
ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா
மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது... பாலயோகீஸ்வரர்...!
எதைத் தொடர்ந்து
எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின்
விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை
மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.
மனிதன் “நான் என்பது
யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய
உயிர் தான் தன் உயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்தால்
அந்த நிலையை எய்தலாம்...!