நாம் ஒவ்வொருவருமே
கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை
வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பின்
தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அந்தந்தக் குடும்பத்தைச்
சார்ந்தவர்கள் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு..
1.எங்களுடன்
வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
2.முன்னோர்களின்
உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று ஏககாலத்தில் இதைச் சொல்லும்
பொழுது
3.உடனடியாக
அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் விண் செலுத்த முடிகின்றது.
காரணம்...
1.அவர்கள்
(முன்னோர்கள்) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறியவில்லை என்றாலும்
2.அவர்கள் சார்புடையோர்
அந்தக் குடும்பத்தில் உள்ளோர்கள் நுகர்ந்து அறிந்துள்ளார்கள்.
3.அந்த உணர்வின்
வலிமை கொண்டு வரும்பொழுது
4.மேலே சொன்னது
போல் எல்லோரும் சேர்த்துச் சொல்லும் போது
5.அந்த உணர்வுகள்
அவரவர் செவிகளில் பட்டு... கண் வழி கவர்ந்து... மூக்கு வழி நுகர்ந்து... உணர்வின் தன்மை
உடலில் பெருகி...
6.அதனின் வலு
கொண்டு நாம் விண்ணில் செலுத்தும் பொழுது எளிதில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைகிறது.
முன்னோர்களின்
உடலில் கடுமையான நோய் இருந்திருந்தாலும்... அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
படரப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகளைக் கரைத்து விடுகிறது. உயிருடன் ஒன்றிய உணர்வுகள்
அங்கே ஒளியாக நிலைக்கின்றது.
ஆக... குடும்பத்தை
சார்ந்தவர் அனைவரும் காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தி எடுக்கும்பொழுது அடிக்கடி
முன்னோர் மூதாதையரின் உயிரான்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்... பிறவியில்லா
நிலை அடைய வேண்டும்... பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும்... என்று இந்த உணர்வுகளை
எடுத்துக் கொண்டே வர வேண்டும்.
ஏனென்றால் அவர்களுடன்
பழகி உணர்வுகள் என்றும் நமக்குள் உண்டு. காலை துருவ தியானத்தில் அடிக்கடி எண்ணி அவர்களை
விண் செலுத்தும் பொழுது
1.நம் உடலில்
பரம்பரை நோய் வராது மாற்றப்படுகின்றது
2.பரம்பரை குணம்
என்ற நிலைகள் மாற்றப்படுகின்றது.
முன்னோர்கள்
அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பு கொண்டு சாபமிட்டு தீய உணர்வுகளை எடுத்திருந்தாலும்
அந்தச் சாப வினைகள் நமக்குள் மறையத் தொடங்குகின்றது.
இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில்
இதைப் போன்று எடுத்து அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் அடையச் செய்தால் நம் மூதாதையர்கள்
இதற்கு முன்
இதை நாம் செய்யத் தவறி இருந்தாலும் கூட நம் மூதாதையர்களின் உயிர் ஆன்மாக்கள் அந்தச்
சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய
வேண்டுமென்று நாம் அவசியம் தியானிக்க வேண்டும்.
1.அவர்கள் ஆன்மாக்களை
நாம் விண்ணுக்குச் செலுத்தச் செலுத்த
2.நம்முடைய
உணர்வுகள் வலுப்பெற இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் பரவப் பரவ
3.முன்னோரின்
ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தாலும்
4.அந்த உடலிலும்
தீய சக்திகளை வளர்த்திருந்தாலும்... அந்த உடல் மடிந்து வெளி வந்தபின்
5.நாம் பாய்ச்சும்
இந்த அருள் உணர்வுகள் பட்டபின் அங்கே உந்தித் தள்ளினால் இந்த உணர்வு வலுப்பெறுகின்றது
6.ஒவ்வொரு நாளும்
அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
7,காலை துருவ
தியானத்தில் செய்தால் அவர்கள் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடைகின்றனர்.
அங்கே உடல்
பெரும் உணர்வுகளைக் கரைத்து விட்டால் பரம்பரை நோய்கள் நமக்குள் மறைகின்றது. அதே சமயத்தில்
அவர்களை நாம் பிறவியில்லா நிலை அடையச் செய்கிறோம்.
ஞானிகள் காட்டிய
அருள் வழியில்... மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் வாழ்ந்து பிறவியில்லா நிலை
அடைதலே நம்முடைய தியானத்தின் நோக்கம்.
ஆக.. இந்த பேரருளைப் பெருக்க... அருள் ஞானத்தைப் பெருக்க... இந்த உடல் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.