ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2021

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்...!”

நம் உடலில் உள்ள கல்லீரல் இருக்கிறது என்றால் அது உப நிலைகளை வைத்து அது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை வடிகட்டிக் கொடுக்கின்றது.
 
அதே போல் பித்தப்பை என்றால் அதன் உணர்வுகள் தனக்குள் எடுத்து பித்தத்தை வடிகட்டி மீண்டும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடன் கலந்து எடுக்கும் போது ஜீரணிக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றது.
 
1.பித்தத்தின் சுரப்பு மாறினால் அஜீரணமாகும்
2.அதிகமானாலும் குறைவானாலும் அஜீரணமாகும்
3.சம அளவு கிடைத்தால் தான் ஜீரண சக்தி சீராகும்.
 
வேதனை என்ற உணர்வு நமக்குள் அதிகரித்தால் அதனால் விஷத்தின் தன்மை அதிகமாக அந்தப் பித்தப்பை உமிழ்த்தினால் அந்த உறுப்பின் தன்மை பாழாகும்.
 
பொதுவாக... நாம் உணவை உட்கொள்ளும் போது அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் சுரந்து உணவைச் சீக்கிரம் கரைத்து விடுகின்றது.
 
ஆனால் விஷத்தை அதிகமாகக் கூட்டும் போது பித்தம் அதிகமாக உற்பத்தியாகும் நிலை வருகின்றது. அதனால் பித்தப்பை சுருங்கி விடுகின்றது.
 
1.தனக்கு வேண்டியதைக் கவரும் நிலையோ அல்லது அதிகமானதை வடிகட்டும் நிலையோ
2.அந்தச் சமப்படுத்தும் நிலை இல்லை என்றால்
2.அதன் மூலம் விஷத் தன்மை உடலில் சேமிப்பு அதிகரிக்கத் தொடங்குகின்றது.
 
பயில்வான்கள் எடுத்துக் கொண்டால் பத்துக் கோழி பத்து முட்டை என்று இப்படி எத்தனையோ சாப்பிட்டுப் பழகுவார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன ஆகும்...?
 
இவ்வளவு கடினமான உணவை உட்கொள்ளும் நிலை வரும் போது அதற்குத்தக்க விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தி இழந்து அவன் சீக்கிரமே துர்மரணம் அடைந்து விடுவான்.
 
ஆனால் சமமாக இருக்கும் வரை உற்பத்தியின் நிலைகள் சீராக வருகின்றது.
1.அதிகமாகப் பித்தங்கள் சுரக்கும் தன்மை ஆகிவிட்டால்
2.சிந்தனையற்ற நிலையாகி முரட்டுத்தனமான புத்தியிலே வளர்வான்.
 
இத்தகைய முரட்டுத்தனமானால் விஷத் தன்மைகள் வளர்ந்து பித்த சுரப்பிகளில் அது அதிகமாகின்றது.
 
ஒரு யானை தன் உணவுக்காக வேண்டி கடினமான தட்டைகளை எடுத்து அதைத் தன் வாயினால் மென்று உட்கொள்கிறது. அதே சமயத்தில்
1.அதற்குள் ஊறும் உமிழ் நீரின் விஷத் தன்மைகள் பட்ட பின்
2.அந்தத் தட்டைகளில் உள்ள சத்தை ஆவியின் தன்மையாக மாற்றி அதை மிருதுவாக மாற்றுகின்றது. (பிஸ்கட் போல் கரைகிறது)
 
அதே போல் அந்த மிருகத்தின் நிலைக்கொப்ப விஷத்தின் தன்மை கொண்டு... மனிதன் விஷமான உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளும் போது அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றிவிடுகின்றது.
 
1.இன்று “பயில்வான்” என்று சொல்லலாம்
2.ஆனால் நாளடைவில் அவர்களுடைய உறுப்புகள் பாழடைந்து விடுகின்றது...
3.ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது... சீக்கிரம் மரணம் அடைந்து விடுகின்றனர்.
 
ஆகவே இந்த உடலின் தன்மை எந்த நிலையில் இருந்தாலும் நாம் நீடித்திருக்கின்றோமா...? இந்த உடலில் இருக்கும் பொழுது எல்லாம் சேமிக்கின்றோம்... வளர்கின்றோம்...! ஆனாலும் எத்தனை காலம் வாழ்கின்றோம்...? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்...!
 
 
என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் நான் ஒன்றுமில்லாதவன். இங்கே வந்தேன். இந்தத் தபோவனம் என்ற கட்டிடத்தைக் கட்டி வைத்தாகிவிட்டது.
1.இருந்தாலும் இதை “எனது...” என்று சொந்தம் கொண்டாட முடியுமா...?
2.எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்புடன் நீங்கள் செய்கின்றீர்கள்... செயல்படுத்துகின்றீர்கள்.
3.இதை எனது (ஞானகுரு) என்று சொந்தம் கொண்டாடினால் என்ன ஆகும்...?
 
நீங்கள் எதற்காக இதைச் செய்தீர்கள்...?
 
தபோவனம் வரும் அனைவருக்கும் நல் உணர்வு பெறவேண்டும் என்ற அந்த அன்பு கலந்த உணர்வுடன் செய்தீர்கள். ஆனால் ஒரு சிலர் என்ன செய்கின்றார்கள்...?
 
என்னிடம் (ஞானகுரு) சக்தி இருக்கின்றது என்று சொன்னால் ஏமாற்றி எதையாவது முன்னாடி கொண்டு வந்து தர்மத்தைச் செய்வது போல் சொல்லி “நான் சொல்வதைச் செய்...” என்பார்கள்.
 
இதனின் செயல்கள் என்ன செய்கின்றது...? இது எல்லாம் சுயநலனுக்காகச் செய்வது...! அவர்களின் ஆசையில் நான் சிக்கினேன் என்றால் எனது ஆசையும் இங்கே கூடும். அப்படி ஆகக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.
 
ஆகவே... நான் உபதேசித்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு... என்னால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது...? என்ற உண்மையை உணர்ந்து நீங்கள் நன்மைகளைப் பெற்றீர்கள்.
1.அதன் வழியில் நன்மையைச் செயலபடுத்த நீங்கள் இயல்பாகச் செய்யுங்கள்.
2.அந்த உயர்ந்த பண்புடன் செய்தால் தான் அது எல்லோருக்கும் நல்லதாகும்.
 
ஒரு சிலர் பொருள்களை அதிகமாகச் செலவழித்து விட்டால் அவருடைய உணர்வு “நான் தபோவனத்திற்குச் செய்தேன்...” என்ற உணர்வுகள் வரும்.
 
இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு செயல்படுத்தும் பொழுது “நான் செய்தேன்...” என்ற உணர்வுகள் வரும்.
1.நான் செய்தேன் என்றால்...
2.அவர் செய்த அன்பின் தன்மையைப் பெருக்க விடாத நிலை ஆகி
3.நல்லதைச் செய்யத் தடைப்படுத்தும் நிலையாகி விடுகின்றது.
 
ஆகவே மனம் கனிந்த நிலைகளில் இந்த ஸ்தாபனத்திற்கு எது கொடுத்தாலும் “அந்த உள்ளன்புடன் வரும் நிலைகள் தான்” இந்தக் கட்டிடமோ மற்ற பொருளானாலும் அதைச் செயல்படுத்த முடியும்.
 
உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் பணம் கொடுக்கின்றீர்கள். வட்டிக்கு வரவு செலவுக்குக் கொடுக்கின்றீர்கள் என்றால் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வீர்கள்...?
 
அதை வாங்கும் தைரியம் உண்டு... பணத்தை எப்படித் திரும்ப வாங்க வேண்டும்...? என்று தெரியும்... என்பார்கள்.
 
இத்தகைய உணர்வின் வலிமை கொடுக்கும் பொழுது வாங்கியவருடைய நிலைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேர்கின்றது. ஆக இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் பல நிலைகள் வருகின்றது.
 
கடினமான உணர்வின் தன்மை கொண்டு செயல்படுத்தினால் வேதனையும் பகைமையும் பழி தீர்க்கும் உணர்வும் தான் வளரும். அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும். ஏனென்றால் நம் உடலோ இந்தக் கட்டிடமோ எதுவும் நம்முடன் வரப் போவதில்லை.

ஆகவே... நம் குருநாதர் காட்டிய வழியில் நாம் வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் உணர்வைச் சேமித்து அதை வளர்த்து விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும். அது தான் முக்கியம்...!