“வள்ளுவர் வாக்கு…! (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத்
தொகுத்தளித்த வாசுகி அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலகிற்கு வெளியிட விரும்பாமல்
“வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்குப் பலமான பின்னணிக் காரணமும் உண்டு.
அது என்ன…?
தன் கணவர் (திருவள்ளுவர்) ஓர் சாதாரண ஆடை நெய்பவர்
மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும்
அங்கிருந்த வறுமைதான் காரணம்.
பல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவுக்குத்
தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம்
கொண்டவர்கள் தான் அவர்கள் இருவருமே...!
1.இருந்தாலும் காற்றிலிருந்து ஆகாரம் உட்கொள்ளும்
பக்குவச் செயல்பாட்டுக்கு
2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம்
எதற்கு..?
ஏனென்றால் இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச்
சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.
காற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல்
கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் உட்கொள்ளுதல் வேண்டும்.
அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி
கூறுகின்றார்கள்.
எத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் (அரசர்கள்)
பெருமக்களை நாடிப் பொருள் பெற்றுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும்
நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம்
தெரியப்படுத்துகின்றார்.
1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…!
2.அது வாசுகிக்கும் வந்தது விந்தை…!” என்று உணர்ந்து
கொண்டு
3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மனத்தின் எண்ணச்
செயல்கள் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி
4.நல்லதைச் செயலாக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு
வந்ததார்.
தன் மனைவியை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய்
அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறுநீர் பெய்யச் செய்தார்.
வெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமது சித்தின்
திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார், “தான் ஒரு சித்தன்…! என்ற
சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.
“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…”
நம்மிடமே உள்ள பொழுது
1.வெறும் உலக ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை
நாம் பெற எண்ணினால்
2.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம்
மாசுபடுவது போல் ஆகிவிடும்.
3.நல் வழி செல்வதே நமக்கு நன்மை பயக்கும்... தியான
வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.
4.சரீர நலத் தொடருக்கும் நம்மிடம் கை வசம் நெசவுத்
தொழில் உள்ளது.
5.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…!
6.ஆகவே அனைத்தும் நல்லதாகவே நடக்கும்…! என்று கண்டிப்பது
போல் தன் மனைவிக்கு எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.
இந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கு... வள்ளுவன் வேதத்தை
உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…!
இதை எல்லாம் தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணர் உணர்கின்றார்.
வள்ளுவச் சித்தரின் இந்தச் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்டதன் கருத்தின் பயனை ஞான
திருஷ்டியால் முழுமையாக அறிந்து கொண்டார் கொங்கணர்.
வாசுகி தனக்கு உணர்த்தியதையும் வள்ளுவரின் ஆற்றலையும்
அவர் உணர்ந்த பின் அதனால் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப்
பெற்றுச் சிந்தனையின் வசமாக ஆனார்.
வெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும்
வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக
நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறுகின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி
போதனையாக வெளிப்பட வேண்டும்…!
வாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள்.
ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் “தான் ஒரு சித்தன் செயல்
நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன்...!” என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்துக்
காட்டினார்.
வறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின்
செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையையும் காட்டி உண்மையின் சூட்சமத்தைத் தெளிவுபடுத்தி
விட்டார்.
ஆக...
1.வாசுகி சொல்லால் போதனைப்படுத்தினார்.
2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின்
ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.
3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…! என்று வியந்தார்
கொங்கணர்.
இது போன்ற வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன்
ஆவேன். என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.
இத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை
வெல்வேன். செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்…! என்ற உறுதி கொண்டார்
கொங்கணர்.
வீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…!
1.தன் சூட்சம சரீரம் செயல்படும் இரகசியம்
2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்…!
என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…
3.சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…!