ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2018

தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது என்ன செய்ய வேண்டும்...?


கணவர் வெளியில் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அங்கு தொழிலில் சில இம்சைகள் வந்துவிடுகிறது.

இவர் நன்றாக வேலை செய்கிறார். தவறே செய்ய மாட்டார். எப்படியோ சந்தர்ப்பத்தில் ஒருவன் அவரைத் திட்டுகிறான். தான் மேலே வர வேண்டும் என்பதற்காக அவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு மறைமுகமாக ஏதாவது செய்வான். அந்த நேரத்தைச் சந்திக்கும் போது குற்றமாகி விடுகிறது.

நான் தவறு செய்யவில்லையே இப்படிச் செய்கிறார்களே...! என்று ஆத்திரப்பட்டு வேதனைப்படுகிறோம். அப்போது எதை எடுக்கிறோம்…?

நல் வழியில் நல்வினைப் பயனாக வாழ்க்கை நடத்தி வந்தாலும் அடுத்தவன் தவறு செய்துவிட்டு நம்மைக் குற்றவாளியாக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தின் தன்மையைத் தான் நமக்குள் எடுக்கிறோம்.

1.அப்படி விஷத்தின் தன்மை ஆகிவிட்டால்
2.நம்மிடம் இருக்கும் அந்த உண்மையின் நிலைகளை எடுத்துச் சொல்லக் கூட முடியாது - நாம் தவறு செய்யவில்லை.
3.ஆனால் நம்மைக் குற்றவாளியாக்க வேண்டும் என்று கற்பனை பண்ணிக் கொண்டவன்... அத்தகைய விஷத்தை உருவாக்கியவன்
4.அந்த உணர்வுக்குத்தக்க திடமான உணர்வு கொண்டு நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கிவிடுகின்றான்.

அந்த அளவுக்கு ஆன பின்னாடி என்ன நடக்கிறது...? தொழில் செய்தேன். இப்படி ஆகி விட்டது. ஆனால் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை என்று வீட்டில் வந்து மனைவியிடம் சொல்கிறார்.

இதை மனைவி கேட்டால் என்ன ஆகிறது...? அந்த வேதனை அங்கேயும் இயக்குகிறது. கணவருக்கு... “இப்படி ஆகி விட்டதே...!” என்று மனைவி எண்ணுகிறார்.

அப்பொழுது அந்த வேதனையான சக்தியை எடுத்து அந்த வேதனையை உருவாக்கும் அணுக்களைத் தான் இங்கே உருவாக்க முடிகிறதே தவிர அதைத் தணிக்க முடிகின்றதா...?  பெண்களுக்கு வேதனை தான் வருகிறது. சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?

ஆனால் காவியங்களிலே எப்படிக் காட்டுகின்றார்கள்...? சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டாள் என்று  கதைகளில் கொடுக்கிறார்கள்.

அகஸ்தியரும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல கவர்ந்து கொண்ட இரண்டு சக்தியும் ஒரு மனமாக ஒரு உணர்வாக ஒன்றியது.

நளாயினி என்ன செய்கிறது...? குறைகளை எண்ணாது கணவனை உயர்த்தி எண்ணுகிறது. அதே சமயத்தில் கணவரும் தன் மனைவி உயர வேண்டும் என்று எண்ணுகிறார். அந்த இரண்டு உணர்வுகளும் ஒன்றி வரும்போது தான் இரு உயிரும் ஒன்றுகிறது. இரு உணர்வுகளும் ஒன்றுகிறது. இரு உணர்ச்சிகளும் ஒன்றுகிறது.

உயிரைக் போன்றே உணர்வின் தன்மையை நாம் எண்ணிய உணர்வுகள் கருத்தன்மையை அடைகிறது. அப்படி அடைந்தவர்கள் தான் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் குறைகளை வீட்டில் மனைவியிடம் கவலையாகச் சொன்னால் மனைவி என்ன செய்வார்கள்...?

கணவன் வேலைக்குப் போகும் பொழுதெல்லாம்
1.தொழில் செய்யும் இடத்திலுள்ளவர்களை எண்ணி
2..இந்தச் சண்டாளார்கள் என் கணவரை என்ன செய்கிறார்களோ...? ஏது செய்கிறார்களோ...! என்று
3.இப்படி அவர்களை சாபமிடும் உணர்வின் தன்மையே வரும்.

ஆனால் இப்படி எண்ணினால் இந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்...? மீண்டும் அவர்கள் உணர்வுடன் கலந்து அந்த உணர்ச்சியை மீண்டும் வீரியத் தன்மை ஆக்கும். இடையூறுகளை அதிகமாக ஊட்டும் தன்மை தான் வரும். நீங்கள் பார்க்கலாம்.

உதாரணமாக வேலை பார்க்கும் இடத்திலுள்ள நண்பர் என்ற நிலையில் கணவர் இங்கே வீட்டுக்கு அழைத்து வந்தாலும் மனைவி சந்தேகப்பட்டு என் கணவர் எல்லோருக்கும் உதவி செய்தார்…! ஆனால் பாவிகள் என் கணவருக்கு இடையூறு செய்கிறார்களே…! என்று அந்த நண்பரையும் எதிரியாக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கணவருக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்ற உணர்வு தூண்டப்பட்டு நம்மை அறியாமலேயே எதிரியைக் கூட்டுகின்றது. பகைமையாக்கி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகளால் தொழிலும் கெடுகின்றது. வேதனை அதிகமாகி உடலில் நோய் வரக் காரணமாகின்றது. அதே சமயத்தில் அந்த வேதனையால் தினசரி வேலைகளில் நாம் பிற பொருள்களைப் பயன்படுத்தும் விதமும் மாறுகிறது.

வேதனையோடு இருக்கும் பொழுது ஒரு இடத்தில் அமர்ந்தாலும் அதிலள்ள ஒரு கம்பியோ மற்றதோ நீட்டியிருப்பது தெரியாது. அதைச் சரி பார்த்த பின் அமர வேண்டும் என்ற சிந்தனையும் வராது.

எழுந்திருக்கும் பொழுது அதிலே மாட்டிக் கொண்டு போட்ட துணி கிழிகிறது. உடனே என்ன நினைப்போம்...? தரித்திரம்...! பார் போறாத காலம்  இப்படி ஆகிவிட்டதே…! என்று மீண்டும் வேதனைப்படுவோம். ஏனென்றால் பார்த்து அறிந்துணர்ந்து செயல்படும் தன்மையை இழக்கின்றது.

அடுத்தாற் போல் ரோட்டிலே நடந்து செல்லும் போது மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவோம். ஏனென்றால் சிந்தனையை இழக்கும் போது கீழே விழுந்தான் மேலே விழுந்தான் என்ற நிலை எல்லாம் வருகிறது.

ஆகவே நம்மை எது இயக்குகிறது...?
1.நாம் நுகர்ந்ததைத்தான் நம் உயிர் இயக்குகிறது.
2.உணர்வின் உணர்ச்சி நம் உடலில் எதுவோ அந்த மணத்தின் தன்மை வெளிப்படுகிறது.
3.அந்த மணத்தின் தன்மை நல்ல மணங்களை அடக்கி விடுகிறது.
4.நல்ல மணங்களை அடக்கும் போது இத்தகைய நிலை ஆகின்றது.

எல்லோருடனும் தான் நாம் வாழ்கின்றோம். நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். தொழில் செய்யும் இடங்களில் எவ்வளவு இருந்தாலும் கூட எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப அவரவர்களின் குணம் அமைகிறது.

அந்த உணர்வு நம் நல்ல குணங்களுக்கு ஏற்றதாக இல்லை. நமக்குள் எதிரி என்ற உணர்வு வருகிறது. அதனால் தொழில் செய்யும் இடங்களில் போட்டி பொறாமை என்று இவ்வாறு ஆகி விடுகிறது.

இதை மனைவியிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்கிறார்கள்...? மனைவியும் நம்மோடு ஒத்துழைக்கிறார். எதற்கு...? நாம் படும் வேதனையை வளர்க்கும் விதமாக அவர்களும் சேர்ந்து வேதனைப்படுவார்கள்.

அந்த நேரத்தில் நம் குழந்தைகள் அன்பாகப் பேசினாலும்  “சனியன்கள்...! இது வேறு...! சும்மா இருந்தால் என்ன...? நேரம் காலம் தெரியாமல்...! தன் பிள்ளைகள் என்று கூட அறியாதபடிச் சாபமிடும் நிலை வருகிறது.

அதே சமயத்தில் இந்த மாதிரி வேதனையில் இருக்கும் சமயம் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவர்கள் வீட்டில் தங்களுக்குள் பேசி சிரிப்பதைக் கேட்டால் போதும். அவர்கள் சிரிப்பது நமக்கு வேறு விதமாகத் தோன்றும்.

அவர்கள் தங்கள் குடும்பத்தில் இயல்பாகப் பேசிச் சிரித்திருப்பார்கள். ஆனால் நாம் அதைக் கேட்கும் பொழுது
1.நாம் வாழ்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
2.நம்மைப் பார்த்து பொறாமையில் ஏளனமாகச் சிரிக்கிறார்கள் என்று
3.நம்மை அறியாமலேயே இப்படி எண்ணி இதை எடுத்து நமக்குள் வளர்க்கும் தன்மை வந்து விடுகிறது.

இப்படி எது எதனுடன் கலக்கின்றது...? குற்றம் இல்லாதவர்களைக் கூட குற்றவாளியாக்கும் நிலையும் அவர்களை எதிரி ஆக்கும் நிலையும் வருகிறது.

அதே சமயம் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு நாம் நுகர்ந்த உணர்வுகள் எதிரியாகி விடுகிறது. நமக்குள் ஒத்துழைக்கும் அந்த உண்மையின் தன்மையும் அது செயலிழக்கிறது.

ஏனென்றால் நாம் நுகர்ந்ததை... பார்த்ததை... கேட்டதை... நம் உயிர் சமைக்கின்றது…. உடலுக்குள் உருவாக்குகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்குகின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்ட நாம் எந்த சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்...? சிந்தியுங்கள்...!

மிளகாய் தனித்து இருக்கும் போது காரமாக இருக்கின்றது. இருந்தாலும் மற்ற பொருள்களுடன் இதை இணைத்துச் சுவையாக மாற்றுகிறோம்.

அது போன்று தான் குடும்பத்திலோ தொழிலிலோ சந்தர்ப்பத்தால் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கொஞ்மாவாது எடுக்க வேண்டும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து இருளை நீக்கி உணர்வின தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.
1.துருவத்தின் வழி தான் விண்ணின் ஆற்றல் பூமிக்குள் வருகிறதென்று துருவத்தை உற்று நோக்கி
2.துருவத்தின் பாதையில் வரும் உணர்வை இருவருமே அந்த ஒளியின் கற்றையாக மாற்றினர்.

மின்னல்கள் ஏற்படும் போது மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரும் மின் ஒளிக்கற்றைகளை நுகருகின்றார்கள். இயற்கையின் விஷத்தின் உணர்வைலைகள் அங்கே செல்வதை அடக்கி தமக்குள் ஒளிக் கற்றைகளாக மாறுகின்றனர்.

உயிர் எப்படி ஆனதோ இதேபோல தான் அவர்கள் இருவருமே அந்த கருத்தன்மையை உருவாக்கி அந்த அணுவை ஒளித் தன்மையாக மாற்றியவர்கள். நஞ்சை வென்று ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

அதை நம் உடலுக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு
1.என் கணவர் தொழில் செய்யும் இடம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
2.அங்கே கணவருடன் வேலை செய்வோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
3.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானமும் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறவேண்டும்.
4.என் கணவரின் செயல்கள் அனைத்தும் மற்றவர் போற்றும் நிலை பெறவேண்டும் என்று
5.மனைவி இதை எண்ணித் தனக்குள் சமைத்து இந்த உணர்வைத் தன் கணவனுக்குப் பாய்ச்சிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை மனைவி கணவனுக்குப் பாய்ச்சப் பாய்ச்ச “ரிமோட் கன்ட்ரோல்…!” போல் இயங்கி அங்கே தொழில் செய்யும் இடங்களில் வரும் பகைமைகளை மாற்றும். ஒன்று சேர்ந்து வாழும் உணர்வுகளை ஊட்டும். மகிழ்ந்து வாழச் செய்யும். 

இதேபோல நீங்கள் கணவன் மனைவி செய்து பாருங்கள்.

December 30, 2018

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…?


சலிப்போ சங்கடமோ வேதனையோ வெறுப்போ வந்தால் அல்லது  இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் அதை நாம் பார்க்க நேருகிறது என்றால் உடனே நேரம் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பேர் ரோட்டில் சண்டை போடுகிறார்கள். ஒருவன் அடிக்கிறான். அடுத்தவன் ஐய்யய்யோ… அம்மா…! என்று அலறுகிறான். அந்தப் பாவிப்பயல் இவனைப் போட்டு இப்படி அடிக்கிறானே…! என்று அந்த உணர்வுகள் உடனே நம்மைப் பேச வைக்கிறது.
1.நாம் பேசுகிறோமா…? நாம் பேசவில்லை…!
2.அந்த உணர்வு தான் நம்மைப் பேச வைக்கிறது.

அதே சமயம் எதிரி ஒருவன் நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் இப்படி அடி வாங்கிக் கொண்டிருந்தால் என்ன சொல்வோம்…?
1.அவனை அடித்தது சரிதான்…!
2.இன்னும் இரண்டு கொடுக்க வேண்டும்…! என்போம்.

இரண்டு பேர் பேசுகிறார்கள் என்றால் அந்த உணர்வை நாம் ஏற்றுக் கொண்ட பின் ஒருவன் இன்னொருவனைத் துரத்திக் கொண்டு சென்று அடித்தால்
1.தொழிலில் இவன் ஏதோ குறும்புத்தனம் செய்திருக்கிறான் அதனால் தான் அடிக்கிறான்…! என்போம்.
2.அப்போது அடிப்பதைக் கண்டு ரசிக்கிறோம்.

இந்த உணர்வுகள் எங்கே கொண்டு போகிறது…? இந்த உணர்வுகொப்ப அடிப்பதை ரசிக்கின்றது…!

ஆனால் பரிவு கொண்ட மனம் கொண்டவனை அடித்தவுடனே வேதனை என்ற உணர்வை நாம் நுகர்கின்றோம். ஆகவே இந்த நல்ல குணங்கள் “இரண்டு தரத்திலும் கொல்லும்…!” சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா…?

நல்ல எண்ணம் கொண்டு பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத்தான் குருநாதர் என்னைக் காட்டுக்குள் அனுப்பி ஒவ்வொரு நிமிடமும் அறியச் செய்தார்.

1.நாட்டுக்குள் போகும் போது மனித உணர்வுகள் எப்படி இருக்கின்றன…?
2.அந்த உணர்விலிருந்து நீ தப்ப வேண்டுமல்லவா…? என்று
3.அவரைப் போலவே பைத்தியக்காரன் மாதிரி வேஷ்டியைக் கிழிக்க வைத்துச் சில நேரங்களில் போகச் சொல்லுவார்.

முதலில் என்னை சூட் (SUIT) போட்டுக் கொண்டு போடா… என்று சொன்னார். அப்புறம் வேஷ்டியைக் கிழித்துக் கொண்டு போடா… என்று சொன்னார். இதையும் போடச் சொல்லுகிறார். அதையும் போடச் சொல்லுகிறார்.

சூட்டைப் போடுடா…! என்கிறார். நான் (ஞானகுரு) வேண்டாம்… வேண்டாம்…! என்கிறேன்.

கிழிந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு போடா…! என்கிறார். கிழிந்த வேஷ்டியைக் கட்டிய பின் பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

சூட்டைப் போட்டு அதிகாரத்தின் துணை கொண்டு போனால் நீ அஞ்சி… அடுத்தவனையும் அஞ்சச் செய்யும் உணர்வைத் தான் நீ எடுப்பாய். ஆனால்
1.கிழிந்த உடையில் போகும்போது யாரும் உன்னைக் கவனிக்க மாட்டான்...!
2.இந்த உணர்வின் தன்மை வரும் போது… “அவன் உணர்வை நீ அறிய முடியும்…!” என்றார்.

CIDஆக வருபவர்கள் என்ன செய்கிறார்கள்…? பிச்சைக்காரன் மாதிரி உடையணிந்து வந்து ரகசியங்களை எல்லாம் அறிந்து சொல்கின்றனர். இதே மாதிரித் தான் இந்த உணர்வின் இயக்கங்கள்…! என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஆகவே நீ எப்படி இருக்க வேண்டும்…? ஆனால் மற்றதை நீ நுகர்ந்தாலும் அதை நுகர்வதற்கு முன் நீ என்ன செய்ய வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.

1.முதலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உனக்குள் வலு ஏற்றிக்கொள்.
2.அந்த வலுவான நிலைகளை ஏற்றுக் கொண்ட பின் தவறு செய்பவர்களை உற்றுப் பார்.
3.உற்றுப் பார்க்கும் போது அதிலுள்ள உணர்வுகளைப் பிரித்து நன்மை தீமைகளைக் காட்டும்.
4.தவறு என்று தெரிந்தால் மறுபடியும் “ஈஸ்வரா…!”என்று புருவ மத்தியில் எண்ணி அதை உள்ளுக்குள் போக விடாது நிறுத்திப் பழகு.

நிறுத்திய பின் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர். அப்பொழுது…
1.அருள் ஒளி என்ற நிலையில் அந்த உணர்வு மகிழ்ச்சியாகிறது.
2.சூட் (SUIT) என்பதைப் பின்னாடி தான் என்ன என்று கொடுக்கிறார்.

ஏனென்றால் ஒருவன் நம்மைத் திட்டினான்… திட்டினான்…! என்ற உணர்வு நமக்குள் இருக்கும் போது அவன் நினைவு வரும்போது அமெரிக்காவிலிருந்தாலும் அது இயக்குகிறது அல்லவா…!

அதே போல் அவனுடைய உணர்வு நமக்குள் இருக்கும் போது அவனை எண்ணினால் அந்தத் தீயதின் உணர்வுகளை எடுத்து நம் நல்ல உணர்வுகளை வீழ்த்தி அதைச் சாப்பிட்டு விடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி உள்ளுக்குள் நிறுத்தி விட்டால் இங்கே தடுத்து (BANDH) விடுகிறது. தீமையை இழுக்கும் சக்தியை இழக்கிறது.

அந்தத் தீயதை இழுக்க முடியாமல் தடை வரும் போது கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகப் பழக தீமையான உணர்வுகள் விலகிச் செல்கிறது.

நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து  தீமைகள் விலகி விட்டால் அதைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து எடுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன் இனமான உணர்வுகளில் கலந்து அது பிரியும்.

ஆகவே எத்தனை வகையான தீமைகளைப் பார்த்தாலும் “ஈஸ்வரா…! என்று சொல்லி
1.எங்கள் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்.
2.எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும்.
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
4.இந்த மூன்று மண்டலத்தையும் நாம் எண்ண வேண்டும்.
5.இரத்தம் ஒன்று… உடல் இரண்டு… அணுக்கள் மூன்று…. இந்த மூன்றிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலக்கப்படும் போது
6.தீமைகள் அனைத்தும் மாறி நம் உடலில் ஒளியான அணுக்களாக உருவாகும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் கால மெம்பராக இருக்கும் நீங்கள் இதை அடிக்கடி செய்து வர வேண்டும். இதை வலுவான உணர்வோடு எடுக்க வேண்டும்.

எந்தத் தீமையான உணர்வும் உங்களுக்குள் வரக்கூடாது. அருள் உணர்வு உங்களுக்குள் வளர வேண்டும். குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் அதை மாற்றிப் பழக வேண்டும். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஆகவே ஆயுள்கால மெம்பர்கள் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்திரத்துடன் இணைந்து இருக்க வேண்டும்.

December 29, 2018

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற எங்கே அமர்ந்து தியானிக்க வேண்டும்...?


கேள்வி:-
துருவ நட்சத்திரத்தின் தியானம் மொட்டை மாடியிலோ அல்லது பூஜை அறையில் இருந்து செய்ய வேண்டுமா? எங்கிருந்து துருவ நட்சத்திரத்தைத் தியானிக்க வேண்டும்?

பதில்:-
துருவ நட்சத்திரம் நம் பூமியில் வடக்குத் திசையில் பூமியின் அச்சுக்கு நேராக விண்ணிலே உள்ளது. வருடம் தோறும் இரவு முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம்.

மொட்டை மாடியிலோ அல்லது வெட்ட வெளியிலோ தொடர்ந்து சிறிது நாட்கள் வடக்குத் திசையில் உள்ள வான் வீதியைக் கவனித்துக் கொண்டே வந்தால் அதைப் பார்க்கலாம். கண்களுக்கு அது சிறிது மங்கலாகத் தான் தெரியும்.

எங்கே இருந்தாலும் இருக்கும் அந்த இடத்திலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிக்க முடியும். இடம் முக்கியமல்ல. ஆனால் நம் நினைவு அங்கே செல்ல வேண்டும்.

நம் நினைவு அங்கே செல்ல வேண்டும் என்றால் ஞானகுரு துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாகச் சொன்னதை ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். (AUDIO LINK - https://wp.me/p3UBkg-1Br)

பின் கண்ணின் நினைவை நம் பூமியின் வடக்குத் திசையிலே அதுவும் குறிப்பாக வட துருவத்தின் வழியாகச் செலுத்தி விண்ணிலே துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது
1.ஒரு பொருளை நாம் எப்படிக் கூர்மையாக ஊடுருவிப் பார்ப்போமோ... 2.அதே போல் உதாரணமாக வில்லில் இருந்து எய்யப்படும் அம்பானது கூர்மையாக அதன் இலக்கைத் தாக்குவது போல்
3.கண்களிலிருந்து நம் நினைவுகள் செல்ல வேண்டும்.

நாம் இங்கே பூமியிலே இருந்தாலும் நம் நினைவுகள் அங்கே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருக்க வேண்டும். அந்த ஒன்றிய உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

கண்கள் வழியாக ஏங்கித் தியானித்த பின் நினைவு புருவ மத்திக்கு வர வேண்டும். முதலில் சொன்ன மாதிரி இரண்டு கண்களின் நினைவு மூன்றாவது புருவ மத்தியில் ஒன்று சேர்ந்து ஆய்த எழுத்து போல் (ஃ) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் புருவ மத்தியிலிருந்து ஈர்க்க அல்லது கவர அல்லது இழுத்து அதன் பின் சுவாசிக்க வேண்டும்.

1.இரண்டு கண்கள் + உயிர் வழியாக நம் உடலிலுள்ள நினைவுகள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்து
2.பூமியின் வடக்குத் திசையில் வட துருவத்தின் வழியாக அதைச் செலுத்தி
3.துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக மோதி அல்லது ஒன்றி அல்லது துருவ நட்சத்திரத்தில் நிலை குத்தி
4.அதிலிருந்து வெளிப்படும் இளம் நீல ஒளிக் கற்றைகளை அதாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா...! என்று
5.சிறிய பிள்ளைகள் ஒரு சக்கரத்தில் இரண்டு துவாரத்தைப் போட்டு அதில் ஒரு கயிறைக் கட்டி முடிந்து இரண்டு கைகளிலும் வைத்துச் சுழற்றிய பின் இழுத்து இழுத்து விடும் பொழுது அந்தச் சக்கரம் இரண்டு பக்கமும் மாறி மாறிச் சுழல்வது போல்
6.நம் நினைவுகள் துருவ நட்சரத்திற்குள் சென்று அதை உயிர் வழி சுவாசத்தின் மூலம் கவர்ந்து நம் உடலுக்குள் பரவச் செய்ய
7.மீண்டும் அதே போல் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து உடலுக்குள் திரும்பத் திரும்பப் பரவச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித் தியானித்தால் உங்கள் உடலுக்குள்ளும் சரி புருவ மத்தியிலும் சரி துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள் ஊடுருவி வருவதைக் காணலாம்.

ஒளியைக் காணவில்லை என்றாலும் புருவ மத்தியில் அழுத்தத்தை உணரலாம். உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அந்த அதிர்வுகளை உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் கொண்டு வந்து சேர்க்கும் முறை இது. என்னுடைய அனுபவம் இதுவே.

சிறிது காலம் இவ்வாறு செய்து பழகி விட்டால் உங்களை அறியாமலே துருவத்தின் வழியாக உங்கள் நினைவு விண்ணுக்குச் சென்று துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்ளச் செய்யும். அங்கே இருக்கும் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பும் (LIVE) கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் மகரிஷிகளின் சக்தியையும் தியானத்தின் மூலம் எடுக்க குறிப்பிட்ட இடம் தேவையில்லை. எங்கே இருந்தாலும் இந்த முறைப்படி செய்தால் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும்.

வெறுப்புடன் இருந்தால் பொறுமை இருக்காது... பொறுமை இல்லை என்றால் ஏற்கும் நிலை வராது... ஏற்கும் நிலை இல்லை என்றால் நல்லதைப் பதிவாக்கி வளர்க்க முடியாது...! – நடந்த நிகழ்ச்சி...!

ஒரு அம்மா தேனியிலிருந்து எம்மைப் (ஞானகுரு) பார்க்க வந்திருந்தார்கள். வெளி ஊருக்குச் சென்று விட்டு அப்பொழுது தான் தபோவனத்திற்குள் வந்தேன்.

சற்று உள்ளே சுற்றிப் பார்த்து விட்டு அதன் பின் என்னுடைய ரூமிற்குப் போகலாம் என்று இருந்தேன். அந்த அம்மாவோ அழுது கொண்டே இருக்கிறது.

அம்மா... “நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்...!” சிறிது நேரத்திற்குள் நான் வந்துவிடுகின்றேன். ரூமிற்கு வந்ததும் வாருங்கள் என்று உள்ளே சென்றுவிட்டேன். எல்லாம் பார்த்து விட்டு ரூமிற்கு வந்து விட்டேன். அந்த அம்மாவைக் காணோம்.

எங்கே அவர்...? என்று விசாரித்துக் கேட்டால் அந்த அம்மா ஊருக்கே திரும்பப் போய்விட்டார் என்று சொன்னார்கள். தியான வழியில் உள்ள அன்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு “அவர் சொல்லி அனுப்பினார்...” என்று சொல்லி அந்த அம்மா இங்கே என்னைத் தேடி வந்திருக்கின்றது.
1.ஆனால் அவர்களின் சங்கடமோ
2.அந்த உணர்வின் இயக்கத்திலேயே தான் இருக்கிறது.
3.சங்கட உணர்வு இயக்கி தேடி வந்த நல்லதைப் பெறவிடாதபடி தடுத்து விட்டது...!

கொஞ்சம் பொறுத்து இரம்மா... அமைதியாக இரம்மா...! இப்பொழுது வந்து சொல்கிறேன் என்று தான் முதலில் சொன்னேன். என்னைச் சந்திக்க வருகிறவர்கள் ரோட்டில் வைத்து விபரம் கேட்டால் என்ன பதில் சொல்வது...?
1.வாக்குக் கொடுப்பது...
2.வாக்குச் சொல்வது...
3.மற்ற விபரங்களை எல்லாம் ரோட்டில் இருந்து சொல்ல முடியுமா...?

என்னைச் சந்திக்க வாங்க...! என்று தான் சொன்னேன். ஆனால் தன் கஷ்டத்தைச் சொல்லி அழுது கொண்டே போகிறது. இதற்கு என்ன செய்வது...?

ஏனென்றால்
1.ஏற்கும் உணர்வு அங்கே இல்லை...!
2.வெறுப்பு வரும் போது நல்லதைப் பெறுவதற்குண்டான பொறுமை இல்லை.
3.பொறுமை இருந்தால் ஏற்கும் தன்மை அங்கே வரும்.
4.ஏற்கும் தன்மை வந்தால் உணர்வுகள் பதிவாகும்.
5.அப்பொழுது தான் இருளை நீக்க அது உதவும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நம்மை இயக்குவது எது...? நம்மைப் பேசச் செய்வது எது...? நம்மைக் கோபப்படச் செய்வது எது...? நம்மை வெறுப்படையச் செய்வது எது...? நம்மை வேதனைப்படச் செய்வது எது...? என்று இதைப் போன்ற நிலைகளை எல்லாம் தெளிவாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வே நம்மை இயக்குகின்றது...! அப்பொழுது பிறிதொரு தீமையான உணர்வு நம்மை இயக்காதபடி தடுத்தே ஆக வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உயிர் வழியாகச் சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனின் இயக்கமாகவே நாம் இருத்தல் வேண்டும்.

தெய்வீக குணங்களை வளர்த்துத் தெய்வீகப் பண்புகளை வளர்த்து தெய்வீக ஞானம் பெற்று என்றுமே நாம் அந்த  மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒவ்வொருவரும் இணைந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்.

அதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

December 28, 2018

தீமையை உருவாக்கும் உணர்வுகளின் இயக்கமும்... தீமையை வென்ற ஞானிகளின் உணர்வின் இயக்கமும்...!


எனக்கு இடைஞ்சல் செய்கின்றான் பாவி...!  இப்படிச் செய்தால்   அவனெல்லாம் உருப்படுவானா...? என்று நமக்கு ஆகாதவனைப் பற்றி நாம் பேசுகின்றோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த உணர்வின் தன்மையையே எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால் இடைஞ்சல் செய்தவனின் எண்ணமே நமக்குள் தோன்றுகின்றது. அதன் அணுக்களே நமக்குள் பெருகுகின்றது.

பின் அதற்கப்புறம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உடலில் அது நோயாக மாறி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி பகைமையை உருவாக்கும் அணுக்களாக விளைய வைத்த பின் உடலை விட்டுச் சென்ற பின் எங்கே போவோம்...?
1.அவர் முன்னாடி இறந்தார் என்றால் அவர் ஆன்மா இங்கே வந்து விடும்.
2.நாம் முதலில் இறந்தால் அவருக்குள் செல்வோம்.
3.இதே உணர்வை அந்த உடலிலும் விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்தும்.

அவர்களும் அதேபோல தன் நினைவு கொண்டு மற்றவர்களை எண்ணுவார்கள். அந்த ஆன்மா வேறொரு உடலுக்குள் போகும்.

ஆனால் இந்த உடலை விட்டு வெளி வந்த ஆன்மாவோ நஞ்சு கலந்த உணர்வின் அணுக்கள் எதுவோ இந்த உயிருடன் ஒன்றிய கருவின் ஆன்மாவாக மாறுகின்றது.

அடுத்து உயிராத்மாவில் சேர்ந்த மணம் எதுவோ தேளோ பாம்போ விஷமான ஜெந்துக்களோ அத்தகைய உடலுக்குள் தான் போவோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா...?
2.சற்று சிந்தியுங்கள்.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு. உதாரணமாக ஒரு தேள் மனிதனைக் கொட்டி விட்டால் அந்த விஷம் சிரசில் ஏறி விடுகின்றது.

தேள் செத்த பிற்பாடு வந்த கொடுக்கை எடுத்து வந்து லேசாகக் குத்தினாலும் அது நமக்குள் கடும் விஷமாக மாறும்.

தேளின் கொடுக்கு விஷமாக இருந்தாலும் மற்ற விஷத் தன்மைகளை அது உணவாக உட்கொண்டதனால்தான் விஷத்தை அடக்கும் அந்தத் தேளின் உடலாக அது பெற்றிருக்கின்றது.

விஷம் கொண்ட உயிரினங்களை அது உணவாக உட்கொண்டாலும் அதை எல்லாம் இணைத்துத் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஆனாலும் அந்த விஷமான தேளை ஒரு கோழி கொத்தித் தின்கிறது.

அதே சமயத்தில் கோழி மண்ணுக்குள் இருக்கும் பல பொருள்களை அது கொத்தித் தின்னும் பொழுது
1.அந்த மண்ணைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்றாலும்
2.உட்கொண்ட பின் உணவுடன் கலந்து செல்லும் அந்த மண்ணைப் பிரித்தெடுக்கும் நிலையாக
3.ஈரல் (உறுப்பு) ஒன்று உருவாகின்றது கோழியின் கல்லீரலில்.

நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதனுடன் கலக்கக் கலக்க அதுவும் சிறுகச் சிறுகக் கரைந்து பல இனங்கள் சேர்த்து இந்த உடலுக்குள் வலு கொண்டதாக மாறுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்ற மனிதர்கள் இன்று கோழியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ச்சி அடைகின்றது.

1.விஷத்தைக் கோழி அடக்கியது போல்... .அதே உணர்ச்சியின் வீரிய உணர்வுகளை மனிதனுக்கும் ஊட்டுகின்றது.
2.ஆனால் அதில் உள்ள விஷத்தின் தன்மை எதுவோ அதனுடன் கலந்த உணர்வை விஷத்தை நுகரும் சக்தியும் மனிதனுக்குள் அதிகமாகக் கூடுகின்றது.
3.கோழியை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகினால் கோழியின் நினைவே வரும்.

கோழி தன் உடலை வளர்க்க விஷமான பூச்சிகளையோ உயிரினங்களையோ உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது. ஆனால் நஞ்சை வென்று வந்த மனிதனோ கோழியை ருசித்து உணவாக உட்கொள்ளும் போது தான் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கோழியின் ஞாபகமே வரும்.

அப்புறம் கோழியாகத் தான் பிறக்க நேரும். இன்று மனிதனாக இருந்தாலும் அப்புறம் கோழியாகத்தான் ஆக வேண்டும்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியான வழியிலே வரப்படும் போதே இதைப்போன்ற உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்...!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது...?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்...? கீழே தான் போகின்றோம்...!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்....?

இதில் சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்...? என்ன பார்த்தீர்கள்...! என்று இப்படித் தான் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் தான் இவர் நடக்கிறார். அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது... ஒன்றும் நல்லதாகவில்லை...! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்...!

ஆமாம்...! என்று தலையாட்டி விட்டுத் தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும். ஆக அவரும் பெற முடியாது... இவரும் பெற முடியாது...!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெருகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உபதேசத்தைத் தான் கொடுக்க முடியும்.

ஞானத்தின் தன்மை விளைந்த அந்த வித்தின் உணர்வுகள் சொல்லாக வரப்படும் போது சீதா. சூரியன் எடுத்து கொண்டால் உணர்வின் அலைகளாகப் படர்கின்றது.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுக்க எடுக்க அந்த உணர்வலைகள் உங்களுக்குள் சென்று உங்களுக்குள்ளும் அருள் ஞானம் பெருகும். மெய் வழியில் செல்ல முடியும். பேரானந்த நிலை பெற முடியும்.

December 27, 2018

நல்லது நடக்க வேண்டும் என்றால் நம்முடைய நம்பிக்கை யார் மீது இருக்க வேண்டும்...?

கேள்வி:-
பல பேர் விரும்பிய இலக்கு (தொழில் குடும்ப நிகழ்வு) இதை எல்லாம் நிர்ணயித்துச் செயல்படும் போது தோல்வி அடையும் சூழலில் குருவை வணங்கித் திரும்பவும் அதைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

அப்படி முயற்சித்தாலும் மீண்டும் பல தோல்விகளைச் சந்திக்கும் போது குருவின் மேல் ஆதங்கப்படுகிறார்கள். குருவை விட்டு விலக மனமில்லாமல் குரு ஏன் நம்மைக் கை விடுகிறார் என ஆதங்கப்படுகிறார்கள்.

பல முறை குருதேவரிடம் காரியம் வெற்றி பெறப் பிரார்த்தனை செய்தும் காரியம் தோல்வியாகவே முடிந்தால் நம்பிக்கை தானாகவே குறைகின்றது.

இதற்குத் தீர்வு கூறுங்கள்...!

பதில்:-
இந்தக் கேள்வியில் குருவிடம் கேட்டோம் குருதேவரிடம் கேட்டோம் என்று தான் உள்ளது. அதே சமயத்தில்
1.புருவ மத்தியில் இருக்கும் தன் உயிரான குருவிடம்
2.கேட்கவே இல்லை என்பதும் மிகவும் தெளிவாக உள்ளது.

இது எப்படி இருக்கிறது என்றால் உதாரணமாக ஃபோனில் உபயோகப்படுத்தும் சிம்மைக் (SIM) காசு கொடுத்து வாங்கி அதன் மூலம் பேசுவதற்கும் செய்தி அனுப்பவதற்கும் பெறுவதற்குரிய பணத்தையும் கட்டி விட்டு
1.என்னால் பேச முடியவில்லை
2.என்னால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்று சொல்வது போல் தான் உள்ளது.

அந்த சிம்மை (SIM) ஃபோனில் அதற்குரிய சரியான இடத்தில் பொருத்திய பின்பு அதைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரும் ஆணையை இடவில்லை என்றால் நாம் எப்படிப் பேச முடியும்...?

சிம்மை ஃபோனில் போட்டு “ACTIVATE...!” செய்தால் தானே அது வேலை செய்யும்...!

சிம் (SIM) என்னைக் கை விட்டு விட்டது. ஆனால் நாங்கள் அதன் மீது இன்னும் நம்பிக்கை நிறைய வைத்துள்ளோம் என்று சொன்னால் அது எப்படிச் சரியாகும்...?

SIMஐ ACTIVATE செய்வது மிகவும் முக்கியம்.

அது போல் தான் நீங்கள் எதை விரும்பினாலும் புறக்கண்ணால் குருவிடமும் குருதேவரிடமும் கேட்டாலும்
1.அதை அகக் கண்ணாக இருந்து புருவ மத்தியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
2.நம் உயிருடன் இணைத்துக் கொண்டு வரவில்லை என்றால்
3.எந்தத் தகவலும் பெற முடியாது... அனுப்பவும் முடியாது... நம் சக்தியும் கூடாது...!
4.உயிருக்கு வெளியிலே தான் அந்தச் செய்திகள் எல்லாம் நிற்கும்.

ஏனென்றால் நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் மிக மிகச் சக்தி வாய்ந்தது. நம் உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்... அதைக் காக்கும்...!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும். அல்லது வலிமை இருக்காது.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து.
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நாம் பல கோடிச் சரீரங்களில் பெற்ற உணர்வுகளும் இந்தச் சரீரத்தில் பெற்ற உணர்வுகளும் ஆழமாகப் பதிவாகியுள்ளது. ஆனால்
1.மகரிஷிகளைப் பற்றிய உணர்வும் குருவைப் பற்றிய உணர்வும் மண் மீது போட்ட வித்தாக இருக்கும் பட்சத்தில்
2.அதை ஆழமாகப் புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் மீண்டும் மீண்டும் ஒன்றச் செய்யாத பட்சத்தில்
3.அது வலுவாக இயக்காது... இயக்கவும் முடியாது.

மீண்டும் மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் புருவ மத்தியின் வழியாக இழுத்துச் சுவாசித்தால் தான் அகக் கண்ணான உயிரின் இயக்கம் மாறும். (இது மிகவும் முக்கியம்.)

குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு நீங்கள்
1.குருவை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்...?
2.மகரிஷிகளை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..?
3.மற்றதை எல்லாம் எத்தனை முறை நினைக்கின்றீர்கள்...?
4.நல்லது நடக்கவில்லை... என்று எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..? என்று கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக அளவில் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் உங்கள் நினைவின் எண்ணிக்கை அதிகமாகச் சென்றிருந்தால்... உயிரிடம் கேட்டிருந்தால் அல்லது பேசியிருந்தால்
1.உங்கள் தொடர்பு (ACTIVATION) மிகவும் சரியாக இருக்கும்.
2.அப்பொழுது குருதேவரும் நீங்களும் சரியான தொடர்பில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

அந்த எண்ணிக்கையே இல்லை என்றால் குரு உங்களைக் கைவிடவில்லை... “நீங்கள் தான் குருவைக் கைவிட்டுவிட்டீர்கள்...!” என்று அர்த்தம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா...!

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒள்யின் சுடராக மாற்றி என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் நாமும் நம் உயிருடன் ஒன்றியே இருக்க வேண்டும். உயிருடன் ஒன்றி வாழ வேண்டும்.

புறத்திலிருந்து வரும் உணர்வில் நம் நினைவுகளை எல்லாம் செலுத்தி விட்டால் உயிர் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஏனென்றால் நெருப்பில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அது தான் இயக்கும்.

நீங்கள் மகரிஷிகளின் உணர்வை உயிரான நெருப்பில் போட்டால் தான் அந்த வாசனை நிச்சயம் வரும். அந்தச் சத்தை உயிர் இயக்கி நமக்குள் படைக்கும்.

1.குரு வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் படைத்தால் தான் நமக்கு நல்லது நடக்குமே தவிர
2.குரு வந்து நமக்குச் செய்து தர முடியாது.
3.அப்படிச் செய்தால் அது அவருக்குத் தான் நன்மையாக முடியும் நமக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

உங்கள் சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் பசி அடங்கும். உங்கள் சாப்பாட்டை குரு சாப்பிட்டால் அவர் பசி தான் அடங்கும். உங்கள் பசி அடங்கவே அடங்காது.

புருவ மத்தியில் அமர்ந்து தியானியுங்கள்.. தவமிருங்கள்...!
உங்கள் உயிருடன் நேருக்கு நேர் உரையாடுங்கள்...!
அவன் உருவாக்கித் தருவான் நீங்கள் எண்ணியதை எல்லாம்...!

செய்து பாருங்கள்...!