தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம்.
நல்வழி காட்டும் குருவை அடைவோம்.
குருகாட்டும் வழியை மதிப்போம்.
குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம்.
குருவின் துணையால்
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். ஓம் ஈஸ்வரா குருதேவா!
"அகஸ்திய மாமகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா"
என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி உயிரின் நினைவினை அகஸ்தியன்
வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் சென்று, அகஸ்திய மாமகரிஷி
அருள் வாழ்க்கை வாழ்ந்து அவனிலிருந்து வெளிப்பட்ட அரும்பெரும் சக்தியினைப் பெறவேண்டும்
என்று இப்பொழுது ஏங்கி தியானியுங்கள்.
கண்ணை மூடி புருவ மத்தியில் உயிருடன் ஒன்றி,
உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
"அகஸ்திய மாமகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா"
என்ற நினைவினை, கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி உயிருடன் இணைத்து, "அகஸ்திய மாமகரிஷிகளின்
அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவன் இருளை அடக்கினான். ஒளியின் சுடராக மாற்றினான். அவன் பெற்ற அருள் மணம் அரும்பெரும் சக்தியாக உங்களுக்குள்
படர்வதை நீங்கள்
மணத்தால் அறியலாம்.
அவன் பெற்ற பேரருளை
பல கோடித் தாவர இனங்களை அவன்
நுகர்ந்து
அரும்பெரும் சக்தியாக அவனை உருவாக்கிய,
அந்த அபூர்வ மணத்தை நீங்கள் அறியலாம்.
இவை அனைத்தும் உங்கள் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவணுக்கள் பெறும் அந்த உணர்வினை
நீங்கள் தெளிந்த நிலைகள் கொண்டு உணரலாம்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி,
புருவ மத்தியில் ஈசன் என்ற நிலைகள் நினைவில் கொண்டு ஒரு நிமிடம் ஏங்கி தியானியுங்கள்.
இப்பொழுது பெண்கள் “அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி தங்கள் கணவரின் உடல்
முழுவதும் படர்ந்து, அவரின் இரத்த நாளங்களில் கலந்து, அவர் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவணுக்கள்
பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று ஏங்கி கணவருக்கு அந்த அருள்சக்தி கிடைக்க வேண்டுமென்று
ஏங்குங்கள்.
ஆண்கள் "அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி, தங்கள் மனைவியின் உடல் முழுவதும்
படர்ந்து, அவரின் இரத்த நாளங்களில் கலந்து, அவர் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவணுக்கள் அகஸ்திய
மாமகரிஷிகளின் அருள்சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று ஏங்கி மனைவிக்கு அந்த அருள்சக்தி கிடைக்க வேண்டுமென்று
ஏங்கி தியானியுங்கள்.
இப்பொழுது கணவன் மனைவி உங்கள் இரு உயிரும் ஒன்றென இணையும்.
உங்கள் இரு மனமும் ஒன்றென இணையும்.
உங்கள் இரு உணர்வும் ஒன்றென இணையும்.
பேரொளி பெறும் அருள்வழி உங்களில் உருவாகும்.
எமது அருளாசிகள்.