ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2015

தென்னாட்டுடைய சிவனே போற்றி...! என்ற அந்த மெய் ஞானியின் உணர்வு தான் உலகைக் காக்கப் போகின்றது...!

இன்று விஞ்ஞான உலகத்தில் மண்ணில் மனிதன் சிந்தனை இழந்து சிந்தனை சிதறி பழங்கால காட்டு விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்த மனிதர்களைப் போன்றே வாழும் நிலை இன்று வந்துவிட்டது. பத்திரிக்கைகளில் பார்க்கிறோம்.

விஞ்ஞான அறிவு கொண்ட மனிதர்களின் நிலைகளில் மாற்றங்கள், இன்னும் பெரும் திருப்பங்கள் ஏற்படப் போகின்றது. மனிதனுக்கு மனிதன் உதவி செய்யும் பண்புகள் இழக்கப்படுகின்றது. மனிதனுக்கு மனிதன் கொண்று குவித்து ரசிக்கும் தன்மை வருகின்றது.

உகாண்டா போன்ற நாடுகளில் இன்றைக்கு எடுத்துக் கொண்டால் இறந்த மனிதனைப் புதைத்து விட்டால் அடுத்த கணம் அவனுக்குச் சொந்தமாகின்றது அவனது தசைகள்.

காரணம் அங்கு உணவின் தன்மை அங்கு பஞ்சமாகும் பொழுது, ஒருவன் இறந்து விட்டால் புதைத்து விட்டால், இவன் சென்றவுடன் எடுத்து உணவாக உட்கொள்கின்றனர்.

இதைப்போன்ற நிலைகளில் மனிதன் மனிதனைச் சாப்பிடும் நிலை வந்துவிட்டது. உயிருடன் இருக்கும் மனிதனைக் கொல்வதில்லை.

எவன் எப்பொழுது சாவான்? அவனை எடுத்து எப்பொழுது சாப்பிடுவோம் என்ற நிலைகள் உகாண்டா போன்ற நாடுகளில் உண்டு. மனிதனாகப் பிறக்கின்றான், ஆனால் அசுரர்களாக வாழுகின்றான்.

உலகிலேயே
"தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
என்று நம் நாட்டில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அந்த அகஸ்தியன் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் ஒளியின் நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதனின்று வெளிவரும் உணர்வின் ஒளியை எந்நாட்டவரும் பெறலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று அவர்களுக்குள் வரும் இருளை அகற்றலாம் என்று அன்றைய பாடல்களில் அருள் ஒளி பெற வேண்டுமென்று அவ்வாறு பாடினார்கள் பின் வந்த ஞானியர்கள்.

அதன் வழியில் தென்னாட்டில் போன்றியவர்கள் நமக்குள் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளை வளர்ப்போம். அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சுடராக வளர்ப்போம்.

அந்த ஒளியின் சுடர் கொண்டு நாம் விடும் மூச்சலைகளால் உலகில் உள்ள இருளின் தன்மையை, மாயையின் தன்மையை, இருளை அகற்றுவோம்.

நம்முடைய நினைவாற்றல் கொண்டு உலகில் நஞ்சின் தன்மை பரவுவதை அடக்க "அதர்வண" அருள் ஒளியைப் பரப்புவோம் என்று உறுதி கொள்வோம்.

இந்த உணர்வின் தன்மையில் நாம் உறுதி கொண்டால் நம் வாழ்வில் அடுத்து பிறவியில்லா நிலைகள் அடைகின்றோம்.

ஆக ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும்
ஒவ்வொரு உடலும் கோவில் என்றும்
அந்த ஒவ்வொரு உடலுக்குள் இருப்பது சிவமென்றும்
சிவத்திற்குள் சக்தியாக இயக்குகிறதென்றும்
அந்த உடலில் மகரிஷிகளின் அருளுணர்வுகள் படரவேண்டும் என்றும்
மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

அவ்வாறு எண்ணினால் நம் உடலான சிவனுக்கும், உயிரான ஈசனுக்கும் மகிழ்ச்சியான நல் உணர்வுகளை ஊட்டி மகிழச் செய்யும் நிலைகள் வருகின்றது.

ஆக ஒருவரை ஒருவர் அணுகித்தான் வாழுகின்றோம். எல்லாருடைய நிலைகள் நமக்குள் ஒன்றித்தான் இருக்கின்றது.

பகைமைப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் உள்ளது. வேதனைப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் உள்ளது. அவரை நினைக்கும்பொழுது அந்த செயல் நினைவில் வருகின்றது.

அதை மாற்றிட, தீமைகள் புகாது தடுக்கும் ஆற்றலை நீங்கள் பெற அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது இந்த உபதேசத்தின் வழியாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்கு இடையூறு வரும்போது யாம் பதிவு செய்ததை எண்ணி
அருள் ஞானிகளின் உணர்வை எடுத்தால்,
இதைப் பெருக்கி, அதைக் குறைத்து
அருள் ஒளியுடன் நீங்கள் ஒன்றலாம்
என்று எல்லா மகரிஷிகளையும் யாம் பிரார்த்திக்கின்றோம்.