இங்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு வந்தவுடனே தியான மண்டபத்தில் அமர்ந்து
சாமி (ஞானகுரு) சொன்னபடி
மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்ற
வலுவான நிலைகளில் தியானிக்க வேண்டும்.
நீங்களே எடுத்துக் கொண்டு பழகவேண்டும்.
சாமிக்குத்தான் சக்தி இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்களே தவிர, சாமி சொன்ன அந்த உணர்வின் சக்தி எங்களுக்குள் பெறவேண்டும், எங்கள் மூச்சும் பேச்சும் நன்மை பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
எதற்காக வேண்டி இந்த மண்டபத்தைக் கட்டி வைத்தது? என்னைப் போற்றுவதற்கு அல்ல. குருவை உங்களிடத்தில் நான் காணவேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை.
உங்களுக்காக வேண்டி சதா உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலை கோவில் என்று மதிக்கின்றேன். உங்களுக்குள் உள்ள உயர்ந்த குணங்களை பல தெய்வங்களாக எண்ணுகின்றேன்.
மனிதனாக உருவாக்கிய நிலையும், உங்கள் வாழ்க்கையைச் சீர்படச் செயல்படுத்த இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் நல்ல செயலை உருவாக்கும் தெய்வங்கள் உங்களுக்குள் இருக்கின்றது.
அந்த நல்ல செயல் தெய்வமானாலும், நாம் நல்ல மனிதனாக இருந்தும் அழுக்குப் படிந்த உணர்வை நாம் ஆடைகளாகப் போட்டுக் கொண்டால் நம்மை யாரும் பார்த்தால் நம்மை அணுகுவதில்லை.
இதைப் போலத்தான் உயர்ந்த குணங்கள் இருப்பினும் பலருடைய சங்கடங்களைக் கேட்டு மேலாடை போன்று போர்த்திக் கொள்ளும்போது அந்த நல்ல குணங்களின் உணர்வுகள் நமக்குள் செயல்படாது போய்விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.
உங்களுக்குள் அந்த தெய்வ குணங்களைச் சீர்படுத்தி இயக்கச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்யும்போது தெளிந்த நிலைகளை அது உருவாக்குகின்றது.
இதைத்தான் நல்ல குணங்கள் மாசுபடும்போது அதை எப்படித் துடைக்கவேண்டும் என்ற நிலையில் பக்குவப்படுத்தி வெறும் சிலையாக வைத்து நம் உணர்வுகளை எப்படி நல்வழிப்படுத்த வேண்டும் என்று
கோவிலிலே தெய்வங்களைப் போட்டுக் காட்டினாலும்
நாம் யாரும் அப்படி அதை எண்ணுவதில்லை.
அதைப் போல நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற நினைவினை நமக்குள் எடுத்துப் பாடங்களாகக் கற்பித்தாலும் இந்தப் பழமையின் நிலைகளில் சிக்கி எடுக்க வேண்டியதை எடுக்காது நாம் விட்டு விடுகின்றோம்.
ஏனெனறால் நாம் கஷ்ட்த்தையும் மற்றதையும்தான் சொல்லிப்
பழ்குகின்றோம். ஒரு டேப்பில் எதைப் பதிவு செய்கிறோமோ அதைத்தான் அது திருப்பிப்
பேசும்.
உங்கள் உடலில் எந்த உணர்வை நீங்கள் எண்ணங்களாக அலைகளாகப் பதிவு செய்கிறீர்களோ
அது உங்களுக்குள்ளிருந்து டேப்
ரெகார்டர் மாதிரி “கஷ்டம்,
கஷ்டம்” என்றே சொல்லிக் கொண்டிருக்கும்.
அந்தக் கஷ்டமான உணர்வுகள்தான் ஒலியாக சொல்லாக வரும். இதைப் போன்ற டேப்பைப்
போட்டால் என்ன செய்யும்? தட புடா, கரா புரா என்ற சத்தம் தான் வரும்.
ஆனால், இனிமையான இசையை டேப்பில் போட்டால் நமக்குள் மகிழ்ச்சியாக இருக்கும்.
அதே சமயத்தில் நீங்கள் சங்கடமாக இருக்கும்போது இனிமையான பாட்டை யாராவது
போட்டால் என்ன சொல்வீர்கள்?
“சனியன்.., அதைக் கொஞ்சம்
நிறுத்தப்பா...,” என்றுதான்
சொல்வீர்கள்.
ஆக, இதைப் போலத்தான் நீங்கள் சங்க்டமாக இருக்கும்போது யாராவது நல்லவைகளைச்
சொன்னால் கேட்பீர்களா? கேட்க மாட்டீர்கள்.
அந்த நல்லவைகளைக் கேட்க வேண்டும் என்பதற்கும் உங்களுக்குள் அந்த்த் தெளிவான
நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இந்தக்
கூட்டுத் தியானங்களை வைப்பது.
ஏனென்றால் பலர் இதை அறியாது பழமையிலே சிக்கிக் கொண்டு தவித்துக்
கொண்டுள்ளார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் ஞானிகள் கண்ட இந்தப் பேருண்மைகளை அறிந்து மற்றவர்களுக்கு நல் வழி காட்ட வேண்டும். உங்கள் குடும்பத்தைச்
சீர்படுத்திக் காட்ட வேண்டும்.
இதைப் பார்க்கும் மற்றவர்கள் “எப்படிங்க..,” என்று இதை அவர்கள் கேட்க வேண்டும். அப்பொழுது இதன் வழி இப்படி அந்த அருள் மகரிஷிகளின்
உணர்வைப் பெற்றால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
நலம் பெறுக வளம் பெருக
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக.