ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2015

"கண்டவர் விண்டதில்லை... விண்டவர் கண்டதில்லை...!"

எவரோ செய்வார்யாரோ செய்வார் என்றும், நம்மை ஆளும் ஆண்டவன் எங்கோ இருக்கின்றான் என்று எண்ணுதல் வேண்டாம்.

ஆண்டு கொண்டிருப்பது உங்கள் உயிரே.
எண்ணியது உருவாக்குவதும் உயிரே.
எண்ணியதை உடலாக்குவதும் உங்கள் உயிரே.
எண்ணியதை நினைவாக்கி செயல்படுத்துவதும் உங்கள் உயிரே.
அனைத்தையும் ஆள்வதும் அவனே.
எண்ணியதை உருவாக்கும் ஈசனாக இருப்பவனும் அவனே.

ஆகவே தான் என்றும், நான் என்றும் அறியச் செய்யக் கூடிய பக்குவம் ஆறாவது அறிவால் நம்மை அறிகின்றோம்.

தன்னை அறிந்தவன்
விண்ணைச் சென்றடைந்தான்.

விண்ணை அறிந்தவன்
இன்று மண்ணுலகில் தீமையை அகற்றுகின்றான்.

"கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை" என்று சொல்வார்கள்.

அனைத்தையும் கண்டவன் தான் விண்டவன். காணாதவன் விண்ட முடியாது.

அனைத்தையும் கண்டவன் விண்டவன். விண்டவன் கண்டதில்லை என்றால் தீமைகளை அவன் பார்ப்பதில்லை.

தீமையை அவன் நுகர்வதில்லை.
தீமைகள் அவனுக்குள் அழிந்துவிடுகின்றது.
இதுதான் கண்டவன் விண்டதில்லை என்பது.

ஆகவே இதைப் பற்றிச் சென்றபின் தீமையை அவன் காணுவதில்லை. இதைத்தான் கண்டவன் விண்டதில்லை.

நமக்குள் இந்த உணர்வின் தன்மையை நாம் ஒளியின் சரீரமாக மாற்றும் நிலையைத்தான் அந்த அருள் ஞானிகள் காட்டினார்கள்.

இந்த உணர்வைக் கண்டோம். அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்து, என்றும் அந்த ஓளி நிலை பெற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்போம்.

மீண்டும் இந்த உடலுக்குள் வராத,
உடல் பெறும் உணர்வைப் பெறாத நிலைகளை நாம் பெறுவோம்.
அருள் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம்.