யாம் உபதேசித்துப் பதிவாக்கும் உணர்வுகளை
நீங்கள் உங்களுக்குள் வலு பெறச் செய்யவேண்டும். ஏனென்றால், இன்றைய உலகம் விஞ்ஞானத்
துணை கொண்டு நஞ்சு கொண்ட்தாக மாறி வ்ருகின்றது.
இந்த வேளையில் நாம் நம்முள் நஞ்சின்
உணர்வுகளைப் பெருக்கிடாது மகரிஷிகளின்
அருள்உணர்வுகளை நமக்குள் பெருக்கச் செய்து
நம்மைக் காத்திடல் வேண்டும். குறுகிய காலமே உள்ளது.
இந்தப் பூமி முழுவதும் நஞ்சின் தன்மை
அடைந்துவிட்டால் மனிதன் அசுர குணம் கொண்டவனாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிப்
புசிக்கும் நிலை வந்துவிடும். காட்டு விலங்குகளின் நிலைக்கு மனிதனின் உணர்வுகள்
கீழே இறங்கிவிடும்.
விஞ்ஞான அறிவின் வளர்ச்சியால் சீனா போன்ற
நாடுகளில் ஆஸ்பத்திரியிலிருந்து பிறந்த குழந்தைகளை விலைக்கு வாங்கி அவைகளை அறுத்து
உணவாகச் சமைத்துச் சாப்பிடுகின்றார்கள்.
அப்படி உணவாக உட்கொண்டால் நரம்பு மண்டலம்
சீராகின்றது வாக்கின் நிலையும் நலமாகின்றது என்று நம்புகின்றனர். இது தவறு இல்லை
என்று சட்டமாகவும் இயற்றுகின்றனர்.
ஆக, இப்படிப்பட்ட உணவுகளை ருசித்துப் பழகிக்
கொள்கின்றனர். அவனுடைய் ஜனப் பெருக்கம் ஆகும்போது இப்படியாவது நாட்டின் மக்கள்
தொகை குறையட்டுமே என்று எண்ணுகின்றான்.
ஏனென்றால், இறந்தவர்களின் உடலை
வீணாக்குவதற்குப் பதில் உடலைப் புசித்து இவன் வளரட்டுமே என்று அசுர குணம் கொண்ட
சட்டங்களை அரசு இயற்றுகின்றது. ஆனால், இதைப் போன்ற கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகும். (உப்தேசம் செய்த வருடம் 1998)
இரக்கமற்றுக் கொல்வதும் அதை ரசித்துப்
பார்ப்பதும் எல்லா நாடுகளிலும் உருப்பெற்றுவிட்ட்து. மேலை நாடுகளில் நடந்த்து
என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த நிலை நம் நாட்டிலும் பரவுகின்றது.
இத்தகைய தன்மைகள் பெருகும்போது மனிதனுக்குண்டான
குணங்கள் மறைந்து மிருக உணர்வுகள் வளர்ந்துவிடுகின்றன.
பழங்காலக் காட்டுவாசிகள் கூடப் பரவாயில்லை.
ஆனால், இன்று மனிதனுக்குக் கல்வியும், விஞ்ஞானமும் மனிதனிடத்தில் அசுர
உணர்வைத்தான் வளர்க்கின்றன.
விஞ்ஞான அறிவினால் விளைந்த நஞ்சின் உணர்வினைச்
சேர்த்து இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றால் அடுத்து அவனது உயிராத்மா
மனிதனல்லாத உருவைத்தான் பெறும்.
ஆகவே, இந்த மனித உடலில் வாழும்போது
எதைப் பெற விரும்புகின்றோமோ நாம் அதைப்
பெறமுடியும்.
அனைவரும் இன்று இருப்போம். நாளை போகப்
போகிறோம். இவை அனைத்தையும் நாம் கண் கூடாகப் பார்க்கின்றோம்.
சாதாரண நிலையில் என்னவாகின்றோம்? இன்னொரு
உடலுக்குள் புகுந்து கொண்டு “இது வேண்டும்.., நான் தோசை சாப்பிட்டேன்.., கோழி
சாப்பிட்டேன்...” என்று ஆவியாக வாழும் காலத்தில் கூட உணவைக் கேட்டு
உட்கொள்வதைப் பார்க்கின்றோம். இறந்த
பின்னும் என்ன என்று தெரிகின்றது.
“என்னை இம்சித்தார்கள்..,, துன்புறுத்தினார்கள்
பாவிகள். ஆகவே நான் அந்தக் குடும்பத்தை ஆட்டிப்படைக்காமல் விடமாட்டேன்...,” என்று சொல்வதையும் பார்க்கலாம். ஏனென்றால், ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய நிலை என்ன? என்று நீங்கள் அறிதல் வேண்டும்.
இதனின் நிலைகளை நாம் கண்கூடாகப்
பார்க்கின்றோம். ஒருவர் உடலில் உயிரான்மா புகுந்தபின் ஆவியை விரட்டுகிறோம் என்று
என்னென்னவோ செய்கின்றனர். ஆனால், முடிவதில்லை.
மனித உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மா
இதே உணர்வு கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்து கொன்றிடும் நிலையும் புசிக்கும்
நிலையும் அடைகின்றது.
மனிதனின் உணர்வுகள் இப்படித்தான் மாற்றப்பட்டு
தேய்பிறை என்ற நிலைக்கே செல்கின்றது. ஆகவே, நாம் மனித வாழ்க்கையில் மீண்டும்
தேய்பிறை என்ற நிலைக்குச் செல்லாது நம் உணர்வுகள் அருள் மகரிஷிகளின் அருள்
வட்டத்தில் செலுத்த வேண்டும்.
இந்த உபதேசத்தைக் கேட்டுணர்வோர் அனைவரும் யாம்
சொன்ன முறைப்படி தியானத்தைக் கடைப்பிடித்து உங்கள் முன்னோர்கள்
குலதெய்வங்களின் உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யப்
பழகவேண்டும்.
இதன் தொடர் கொண்டு நம்முடைய எண்ணங்களும் அங்கே
துரித நிலையில் விண் செல்கிறது. விண்ணின் ஆற்றலை நம்முள் கவர்ந்து நம் உடலிலுள்ள
இரத்த நாளங்களில் பெருக்க உதவுகின்றது.
நாம் நம்முள் சேர்ந்த இருளை அகற்றுவோம். உடல்
பெறும் உணர்வை நீக்கி பிறவியில்லா
பெருநிலை பெறுவோம்.
எவரொருவர் இதன் உணர்வு கொண்டு தம்முள் உயர்ந்த உணர்வின்
தன்மையை வளர்க்கின்றாரோ அவர்கள்
சப்தரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ்ந்து
தொழில் வளத்துடன் வாழ்ந்து
மன நலத்துடன் மன பலத்துடன் உடல் நலத்துடன் வாழ்ந்து
மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திட
பெருவீடு பெரு நிலை என்னும் நிலையைப் பெறும் தகுதி
பெற்று
எல்லாக் காலத்திலும் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்திட எமது
அருளாசிகள்.